அத்தவர் பாலகிருஷ்ணா செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்தவர் பாலகிருஷ்ணா செட்டி
சென்னை மாகாண விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், ஒத்துழைப்பு, வீட்டுவசதி மற்றும் முன்னாள் படைவீரர்கள் அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1883
இறப்பு1960
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கல்யாணி
பெற்றோர்முல்கி கலப்ப செட்டி (தந்தை) மற்றும் அத்தவர் உன்கக்கே (தாய்)

அத்தவர் பாலகிருஷ்ணா செட்டி (A. B. Shetty)(1883-1960) [1] என்பவர் ஏ. பி. செட்டி என்று நன்கு அறியப்பட்ட இந்திய அரசியல்வாதி, பரோபகாரர், தொழில்முனைவோர் மற்றும் விஜயா வங்கியின் நிறுவனர் ஆவார்.[2]

சுயசரிதை[தொகு]

செட்டி, முல்கி கலப்ப செட்டி (தந்தை) மற்றும் அத்தவர் உன்கக்கே (தாய்) ஆகியோருக்கு மகனாகத் துளு பேசும் நிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்தார்.  இவர் தனது ஆரம்பக் கல்வியை மங்களூரில் முடித்தார். தென் கன்னட மாவட்டத்தில் உள்ள மக்களிடையே உலக விவகாரங்கள் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் பரப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, "நவயுகா" என்ற வாராந்திர கன்னட மொழி பத்திரிக்கை வெளியீட்டைத் தொடங்கினார். இதன் ஆரம்ப ஆண்டுகளில் இதனை இவரே தொகுத்தளித்தார். இது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிரபலமாக இருந்தது.  கூடுதலாக செட்டி மங்களூரில் உள்ள ஒரு அச்சகமான கனரா அச்சகத்தினை தொடங்கினார்.

செட்டி 1931-ல் மங்களூரில் உள்ள பன்ட்சு விடுதியில் விஜயா வங்கியை நிறுவினார்.[3] வங்கி சிறப்பாகச் செயல்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு வங்கி சேவையையும் வழங்குகிறது.[சான்று தேவை] விஜயா வங்கி இன்று இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதன்மையானது.[சான்று தேவை] ஆழ்ந்த மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான கண்ணோட்டத்தில், செட்டி பிரம்மஞான சபை, பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், தாழ்த்தப்பட்ட வகுப்புகள் இயக்கம் போன்றவற்றின் செயல்பாடுகளில் ஆர்வமாக இருந்தார். இவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் சமூக முன்னேற்றத்தில் ஈடுபட்டன.[4] இவர் சென்னை மாகாணத்திலும் பின்னர் சென்னை மாநிலத்திலும் அமைச்சராகவும் பணியாற்றினார். 1949-1956 ஆண்டுகளுக்கு இடையே விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதாரம், ஒத்துழைப்பு, வீட்டுவசதி மற்றும் முன்னாள் படைவீரர்கள்[5] போன்ற பல்வேறு துறைகளின் பொறுப்பினை வகித்தார். 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து 1 மார்ச் 1956 அன்று அமைச்சகத்திலிருந்து விலகினார்.

பாலகிருஷ்ணா செட்டி, கல்யாணி என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர்: இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். இவர் 1960-ல் தனது 77 வயதில் இறந்தார். மங்களூருவில் உள்ள தெரலகட்டே, ஏ. பி. ஷெட்டி பல் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் இவரை நினைவு கூறுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bring rural populace to mainstream: Mahe VC - Deccan Herald". Archived from the original on 7 October 2011. பார்க்கப்பட்ட நாள் 31 August 2010.
  2. "Vijaya Bank". Archived from the original on 27 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூன் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "A banker erased from memory". Deccan Herald. http://www.deccanherald.com/content/141131/a-banker-erased-memory.html. 
  4. "Annual Report 2017-18" (PDF). Vijaya Bank. பார்க்கப்பட்ட நாள் 14 March 2019.
  5. . 1954. 
  6. Mangalorean.Com- Serving Mangaloreans Around The World! பரணிடப்பட்டது 11 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்