அதுல் பாசு
அதுல் பாசு | |
|---|---|
அதுல் போசு, 1930ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள வின்ட்சர் கோட்டையில் | |
| பிறப்பு | 22 பிப்ரவரி 1898 மைமன்சிங், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 10 சூலை 1977 (அகவை 79) கல்கத்தா, இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | அரசு கலை மற்றும் கைவினைக்கலைக் கல்லூரி, கல்கத்தா இராயல் அகாடமி |
| அறியப்படுவது | இந்தியக் கலைக் கழகத்தை நிறுவுதல் |
அதுல் பாசு (Atul Basu) (22 பிப்ரவரி 1898 – 10 சூலை 1977) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியராவார்.[1] அதுல் போசு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இயற்கையான நிலக்காட்சிகள், உருவப்படங்கள் மற்றும் கிராமப்புறக் காட்சிகளைச் சித்தரிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். ஓவியம் வரைவதற்கு எண்ணெய் வண்ணங்களைப் பயன்படுத்தினார்.[2][3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]1898-ஆம் ஆண்டில், அன்றைய வங்காள மாகாணத்தில் அமைந்திருந்த மைமன்சிங்கில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தை மைமன்சிங் நகரத்திலேயே கழித்தார். தொடக்கக் கல்வியை, 'தேசியக் கல்வி மன்றத்தின்' மைமன்சிங் கிளையில் தொடங்கினார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள 'இயூபிலி கலை அகாடமியில் பயின்றார். இந்த அகாடமியின் பாடத்திட்டம், பிற அகாடமிகளின் பாடத்திட்டத்தைப் போல அமைந்திருக்கவில்லை.[2]
கல்வியாளர் அசுதோசு முகர்ச்சியின்—'வங்கப் புலி'—ஓர் ஓவியம், 1924 முதல் 1926 வரை இலண்டனில் உள்ள ராயல் அகாடமியில் கலை பயில்வதற்காக, கொல்கத்தா பல்கலைக்கழகத்திடமிருந்து போசிற்கு ஒரு கல்வி உதவித்தொகையைப் பெற்றுத் தந்தது.[4] அங்கு பயின்றுகொண்டிருந்தபோது, போசு பின்-இம்ப்ரெசனிசக் கலைஞரான வால்டர் சிக்கர்ட்டால் ஈர்க்கப்பட்டார். பிரிட்டிசு பேரரசு கண்காட்சியில் உள்ள அரங்கை அலங்கரிப்பதில் முகுல் தே-விற்கு உதவ வந்த அழைப்பை இவர் நிராகரித்தார்.[5]
தொழில்
[தொகு]1919ஆம் ஆண்டில் இந்தியக் கலை அகாதமியை நிறுவ புகழ்பெற்ற வங்காள ஓவியர் ஏமந்திரநாத் மசூம்தாருக்கு போசு உதவினார். அப்போது போசு அகாதமியின் நிறுவன உறுப்பினராக இருந்தார். மேலும் 1945-1948 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கொல்கத்தாவில் உள்ள அரசு கலைப் பள்ளியின் முதல்வராகவும் இருந்தார். பின்னர் இவர் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியின் இயக்குநராக ஆனார்.[2]
இந்திய அரசின் ஆணையத்தின் கீழ், வின்ட்சர் கோட்டை மற்றும் பக்கிங்காம் அரண்மனையில் உள்ள அசல் சேகரிப்புகளிலிருந்து போசு உருவப்படங்களை வரைந்தார். இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் (சிபிங்க்சு) ஒட்டுப்பலகையில் எண்ணெய் ஓவியம் மற்றும் சுய உருவப்படம் (1945) ஆகியவை அடங்கும்.[2]
1921ஆம் ஆண்டில், போசு, பபானி சரண் லாகாவுடன் இணைந்து இந்திய ஓரியண்டல் கலைப் பள்ளியை நிறுவினார்.[2]
கொல்கத்தாவில் உள்ள இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் 1970-ஆம் ஆண்டில் போசுக்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.[2]
சேகரிப்புகள்
[தொகு]- கிரண் நாடார் கலை அருங்காட்சியகம்
- தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி
- இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா
- பழைய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி
- இராச்சு பவன், கொல்கத்தா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bose, Atul". The Great Soviet Encyclopedia, 3rd Edition. The Gale Group, Inc. 1970–1979.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Chowdhury, Sima Roy (2012). "Bose, Atul". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Saṃsada bāṅāli caritābhidhāna 1. (2010). Kolkata: Sahitya Samsad. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7955-135-6.
- ↑ "Portrait of Ashutosh Mukherjee by Atul Bose". Prinseps. December 2020.
- ↑ Atul Bose, Making Britain, Open University.
வெளி இணைப்புகள்
[தொகு]- Atul Bose at Artnet.com
- Works by அதுல் பாசு at திற நூலகம்