அதுல் சென்
அதுல் சென் Atul Sen | |
|---|---|
| பிறப்பு | சேனாகட்டி, குல்னா மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| இறப்பு | ஆகத்து 5, 1932 கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா |
| இறப்பிற்கான காரணம் | தற்கொலை |
| பணி | இந்திய விடுதலை இயக்கம் செயற்பாட்டாளர் |
| அமைப்பு(கள்) | யுகாந்தர் |
அதுல் சென் (Atul Sen) இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஒரு வங்காள இந்திய சுதந்திர இயக்க புரட்சிகர ஆர்வலர் ஆவார். இவர் பெரும்பாலும் சாம்பு மற்றும் குட்டி என்ற மாற்றுப்பெயர்களைப் பயன்படுத்தினார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]அதுல் சென் பிரித்தானிய இந்தியாவின் குல்னா மாவட்டத்தில் உள்ள சேனாகட்டி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அசுவினி குமார் சென் என்பதாகும். மாணவராக இருந்தபோதே அதுல் சென் புரட்சிகரக் கட்சியில் சேர்ந்தார். மாணவராக இருந்தபோது, கிராமத்தின் பிரபல புரட்சியாளர்களான இரசிக்லால் தாசு, அனுச்சாசரண் சென், இரதிகாந்த தத் மற்றும் கிரண் சந்திர முகர்ச்சி ஆகியோருடன் தொடர்பு கொண்டு புரட்சிப் பாதையில் செயல்பட்டார்.[1]
புரட்சி நடவடிக்கைகள்
[தொகு]இயாதவ்பூர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, இயூகந்தர் கட்சியின் தீவிர உறுப்பினராக அதுல் சென் இருந்தார். சுதந்திர இயக்கத்தின் போது, சுடேட்சுமேன் பத்திரிகை புரட்சியாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. புரட்சியாளர்கள் பதிலடி கொடுக்கவும் தடுக்கவும் செய்தித்தாளின் ஆசிரியரான வாட்சனைக் கொல்ல முடிவு செய்தனர்.[2] 1932 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று , இவர் சர் ஆல்ஃபிரட் வாட்சனைச் சுட்டார். ஆனால் வாட்சனைக் கொல்லத் தவறிவிட்டார். உடனடியாக கைது செய்யப்பட்டார். இதனால் பொட்டாசியம் சயனைடை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dictionary of Martyrs of India's Freedom Struggle (1857-1947) (PDF). New Delhi: Ministry of Culture, Government of India & Indian Council of Historical Research. 2016. p. 29. ISBN 978-81-938176-0-5.
- ↑ Dictionary of Martyrs of India's Freedom Struggle (1857-1947) (PDF). New Delhi: Ministry of Culture, Government of India & Indian Council of Historical Research. 2016. p. 263. ISBN 978-81-938176-0-5.
- ↑ Sengupta, Subodhchandra (1998). Sansad Bangali charitabhidhan. Vol. 1. Calcutta: Sahitya Samsad. p. 14. ISBN 978-81-85626-65-9. கணினி நூலகம் 59521727.
- ↑ Rakshita-Rāẏa, Bhūpendrakiśora (1966). Sabāra alakshye (in Bengali). Bijñala Pābaliśārsa. p. 104.