அதுல் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேராசிரியர் அதுல் குமார் (Prof. Atul Kumar) ஒரு செயற்கை கரிம வேதியியல் பேராசிரியர் ஆவார். இந்திய அறிவியல் மற்றும் புதுமையியல் ஆராய்ச்சிக் கழகம் (AcSIR), மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CDRI) ஆகியவற்றில் பேராசிரியராகவும் முதன்மை விஞ்ஞானியாகவும் பணியாற்றினார். இந்திய அரசு 2007 ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பு செய்தது.[1] மருத்துவ வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் அதுல் குமார், அதற்கு பிந்தைய ஆராய்ச்சிக் கல்வியை அமெரிக்காவில் உள்ள பஃப்பலோ கல்லூரியில் பெற்றார்.

வாழ்க்கைப் பயணம்[தொகு]

மருத்துவ வேதியியல் துறையிலும் மருந்து வடிவமைப்பிலும் பேராசிரியர் அதுல் குமார் 24 ஆண்டுகள் அனுபவத்தைக் கொண்டிருந்தார்.[2]

கல்விப்பணி[தொகு]

பாலி ஐதரோகுயினோன் வழிப்பொருட்கள் தயாரிக்கும் தொகுப்பு முறையில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார்.சமச்சீரற்ற ஆன்ட்செச் வினைகள் வழியாக தொகுப்புமுறையில் பாலி ஐதரோகுயினோன் தயாரித்தல் [3] and [4] தொடர்பான இவரது ஆய்வுக் கட்டுரைகள் முறையே 195, 94 முறைகள் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருந்துப்பொருள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் விஞ்ஞானி விருதை இவர் வென்றுள்ளார். அமெரிக்க வேதியியல் கழகத்தின் உலகாய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.90 ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியராகவும் 45 காப்புரிமைகளுக்குச் சொந்தமானவராகவும் சிறந்து விளங்கியுள்ளார் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "Official website at CSIR". Archived from the original on 2014-11-04. பார்க்கப்பட்ட நாள் 2017-01-02.
  3. A Kumar, RA Maurya, "Synthesis of polyhydroquinoline derivatives through unsymmetric Hantzsch reaction using organocatalysts A Tetrahedron Volume 63, Issue 9, 26 February 2007, Pages 1946–1952
  4. "Bakers’ yeast catalyzed synthesis of polyhydroquinoline derivatives via an unsymmetrical Hantzsch reaction" Tetrahedron Letters Volume 48, Issue 22, 28 May 2007, Pages 3887–3890

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_குமார்&oldid=3540992" இலிருந்து மீள்விக்கப்பட்டது