உள்ளடக்கத்துக்குச் செல்

அதுல் கசுபேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதுல் கசுபேக்கர்
Atul Kasbekar
பிறப்பு22 ஏப்ரல் 1965 ( 1965-04-22) (அகவை 61)
மும்பை, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்புரூக்சு நிறுவனம், சாந்தா பார்பரா, கலிபோர்னியா, அமெரிக்கா
பணிபுகைப்படக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1991–present[1]
அறியப்படுவதுஒய்யார ஒளிப்படவியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கிங்ஃபிசர் நாட்காட்டி
வலைத்தளம்
www.atulkasbekar.com

அதுல் கசுபேக்கர் (Atul Kasbekar) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஆடை அலங்கார புகைப்படக் கலைஞர் ஆவார். 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] தனது கிங்ஃபிசர் நாட்காட்டி படப்பிடிப்புகளுக்காக அறியப்படுகிறார். பிளிங்! எண்டர்டெயின்மெண்ட்டு சொல்யூசன்சு மற்றும் கார்ப்பரேட் இமேச்சு ஆகியவற்றின் நிறுவனங்களின் உரிமையாளராகவும், எலிப்சிசு எண்டர்டெயின்மெண்ட்டில் கூட்டாண்மை மூலம் இந்தி மொழித் திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.

கல்வி

[தொகு]

அதுல் கசுபேக்கர் மும்பையில் பிறந்தார். அங்குள்ள கேம்பியன் பள்ளி மற்றும் ஜெய் இந்து கல்லூரியில் (மும்பை பல்கலைக்கழகம்) தனது கல்வியைப் பயின்றார்.[3] பின்னர், வேதியியல் பொறியியல் பயில்வதற்காக வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார்.[4][5] ஆயினும், கௌதம் ராசத்யக்சாவிடம் ஆலோசனை பெற்ற பிறகு , ஒரு புகைப்படக் கலைஞராகும் நோக்கில் தனது இரண்டாம் ஆண்டிலேயே படிப்பை பாதியில் கைவிட்டார்.[6] அமெரிக்காவின் சாண்டா பார்பராவில் அமைந்துள்ள புரூக்சு நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.[1][7] லாசு ஏஞ்சல்சில், டென்னிசு கிரே, ரான் சிலென்சாக்கு, ஜேம்சு பி. வுட், ஜே சில்வர்மேன், ஜே பி. மோர்கன், பில் வெர்ட்சு மற்றும் டேவிட் லெ பான் உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்களிடம் ஒரு பயிற்சியாளராகப் பணியாற்றினார் .

தொழில்

[தொகு]

புகைப்படம் எடுத்தல்

[தொகு]

கசுபேக்கர் 1990ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். 1991ஆம் ஆண்டில், நெகடிவ் சிபேசு என்ற ஒளிப்பட அரங்கினைத் தொடங்கி, புகைப்படக் கலைஞராக தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] வதிலால் மற்றும் இலிண்டாசு விளம்பர நிறுவனத்திற்கான வணிகப் பணிகள் செய்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.[5]

நீச்சல் உடையில் விளம்பர மாதிரி நபர்களை இடம்பெறச் செய்து கிங்ஃபிசர் நாட்காட்டியைப் படமாக்கியதற்காக கசுபேக்கர் அறியப்பட்டார்.[7] அவர்களில் சிலர் வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.[4]

நிறுவனங்கள்

[தொகு]

2006-ஆம் ஆண்டில், நிறுவனங்களுக்கான அடையாளம் மற்றும் பிம்ப மேலாண்மை நிறுவனமான 'Corporate Image'-நிறுவனத்தை கசுபேக்கர் தொடங்கினார்.[8]

2007-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட,[9] பிரபலங்களின் மேலாண்மை நிறுவனமான பிளிங் எண்டெர்டெயின்மெண்ட்டு சொல்யூசன்சு நிறுவனத்தின் முதன்மைப் பொறுப்பாளராகவும் திகழ்கிறார்.[3][10]

திரைப்படத் தயாரிப்பு

[தொகு]

நீர்சா (2016)'[11][12] துமாரி சுலு (2017)[13] ஒய் சீட் இந்தியா (2019)[14] மற்றும் லூப் லபேட்டா (2022)'[15] உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களை கசுபேக்கர் இணைந்து தயாரித்துள்ளார். 2016-ஆம் ஆண்டில், தனுச் கார்க் என்பவருடன் இணைந்து எலிப்சிசு எண்டர்டயின்மெண்ட்டு என்ற தயாரிப்பு நிறுவனத்தை இவர் உருவாக்கினார்.[15][16]

அங்கீகாரம்

[தொகு]

2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டு உணவு மற்றும் பானத் துறைக்கான படைப்பாற்றல் சிறப்பு விருதுகள் விழாவில், கிங்ஃபிசர் நாட்காட்டியை உருவாக்கியதற்காக கசுபேக்கரும், யுபி குழுமத்தைச் சேர்ந்த விஜய் மல்லையாவும் இணைந்து விருது பெற்றனர். 2005-ஆம் ஆண்டிலும் இவ்விருதை இவர்கள் மீண்டும் வென்றனர். அந்த ஆண்டில், இவ்விருதைப் பெற்ற இந்தியர்கள் இவர்களே மட்டுமே ஆவர்.[17]

இந்தியப் புகைப்படக் கலைஞர்கள் சங்க அமைப்பின் கௌரவத் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார்.[1][7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கசுபேக்கருக்கும் அவரது மனைவி வந்தனாவுக்கும் அர்னவ் கசுபேக்கர் மற்றும் நவோமி கசுபேக்கர் என இரட்டைப் பிள்ளைகள் உள்ளனர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 "Bio" இம் மூலத்தில் இருந்து 15 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120615065700/http://www.atulkasbekar.com/?page_id=5.
  2. 1 2 "Atul Kasbekar". Campion School, Mumbai. Retrieved 5 September 2023.
  3. 1 2 3 Rachel Lopez (4 January 2013). "Personal Agenda: Atul Kasbekar, photographer". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 6 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130106115819/http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/Personal-Agenda-Atul-Kasbekar-photographer/Article1-985016.aspx.
  4. 1 2 Priyanka Jain (10 May 2011). "Not just glam and money: Atul Kasbekar". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 20 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120120164135/http://www.hindustantimes.com/Lifestyle/FashionAndBeauty/Not-just-glam-and-money-Atul-Kasbekar/Article1-695711.aspx.
  5. 1 2 Lata Kubchandani (18 October 2010). "'Today a photographer doesn't need the knowledge of shooting'". Rediff.com (interview). Retrieved 5 September 2023.
  6. ↑ "Atul Kasbekar on Gautam Rajadhyaksha". Times of India. 29 December 2001. http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/Atul-Kasbekar-on-Gautam-Rajadhyaksha/articleshow/1181850360.cms.
  7. 1 2 3 Shalini Shah (23 December 2011). "Sees, shoots and leaves". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140308012747/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2740015.ece.
  8. ↑ "Atul Kasbekar unveils new company 'Corporate Image'". 30 June 2006 இம் மூலத்தில் இருந்து 4 July 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060704181013/http://www.indiantelevision.com/mam/headlines/y2k6/june/junemam139.htm.
  9. ↑ "Bling Entertainment".
  10. ↑ Mini Dixit (5 April 2016). "Want a career in celebrity management? Atul Kasbekar tells you what it takes". https://www.indiatoday.in/lifestyle/celebrity/story/want-a-career-in-celebrity-management-the-best-in-the-field-atul-kasbekar-tells-you-the-what-and-how-of-it-316273-2016-04-04.
  11. ↑ Lopamudra Ghatak; Sarwat Fatima (11 April 2016). "Bollywood now understands the economics of film-making, says 'Neerja' producer Atul Kasbekar". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/bollywood-now-understands-the-economics-of-film-making-says-neerja-producer-atul-kasbekar/articleshow/51764091.cms.
  12. ↑ "Photographer of the Month – Atul Kasbekar". Exhibit magazine (interview). 1 August 2016. Archived from the original on 15 March 2018.
  13. ↑ "Tumhari Sulu star Vidya Balan thanks Atul Kasbekar". Mumbai Mirror. 23 November 2017. https://mumbaimirror.indiatimes.com/entertainment/bollywood/tumhari-sulu-star-vidya-balan-thanks-atul-kasbekar/articleshow/61769769.cms.
  14. ↑ "Atul Kasbekar denies sexual misconduct allegations against Cheat India director Soumik Sen". Indian Express. 20 October 2018. https://indianexpress.com/article/entertainment/bollywood/atul-kasbekar-soumik-sen-cheat-india-sexual-misconduct-allegations-5410146/.
  15. 1 2 "We trusted Aakash Bhatia with his unique, mad vision, says Atul Kasbekar of Looop Lapeta". 14 February 2022 இம் மூலத்தில் இருந்து 14 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220214105138/https://www.cinestaan.com/articles/2022/feb/14/33288/we-trusted-aakash-bhatia-with-his-unique-mad-vision-says-atul-kasbekar-of-looop-lapeta.
  16. ↑ "Balaji Motion ex-CEO Tanuj Garg teams up with Atul Kasbekar to set up film company". The Economic Times. 14 September 2016. https://economictimes.indiatimes.com/industry/media/entertainment/media/balaji-motion-ex-ceo-tanuj-garg-teams-up-with-atul-kasbekar-to-set-up-film-company/articleshow/54320213.cms.
  17. ↑ "Kingfisher calendar, Kasbekar win FAB Awards again". 2 June 2005. https://www.afaqs.com/news/advertising/11633_kingfisher-calendar-kasbekar-win-fab-awards-again.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_கசுபேக்கர்&oldid=4674640" இலிருந்து மீள்விக்கப்பட்டது