அதுல்யா ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதுல்யா
பிறப்பு21 திசம்பர் 1992 (1992-12-21) (அகவை 27)
கோயம்புத்தூர்
தமிழ் நாடு
மற்ற பெயர்கள்அதுல்யா ரவி
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2017-இன்று வரை
வலைத்தளம்
http://www.actressathulya.com/

அதுல்யா என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

அதுல்யா திசம்பர் 21, 1992 தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தமிழ் இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் ரவி, தாயார் பெயர் விஜயலட்சுமி மற்றும் சகோதரரின் பெயர் திவாகர். அதுல்யா இளங்கலை தொழில்நுட்பப் படிப்பில் சென்னையில் உள்ள திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

நடிப்புத் துறை[தொகு]

இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம் ஆனால் திரைபபடம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த பெயர் கதாபாத்திரம் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்க இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஜிகே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியானது ஆனாலும் இந்த திரைப்படம் பற்றி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா[1] என்ற இணையதளம் நல்ல கருத்துக்களை வெளியிட்டது அந்த கருத்து: (சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அதன் எதிர்பார்ப்பிற்கும் அதிகமாக இது போன்ற சில நல்ல படங்கள் வருகிறது) என்று எழுதியிருந்தது.[2][3]

2018 இல் இவர் நடித்து வெளியான திரைப்படம் ஏமாலி இந்த திரைபபடத்தை இயக்குனர் துரை இயக்க சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோசிணி பிரகாஷ், பாலா சரவணன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[4] இதில் இவர் ரித்து என்ற கதாபாத்திரத்தில் நவீன கால சுதந்திரமான பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்காக இவர் தனது உடல் எடையை குறைத்து தலைமுடி, நிறத்தில் மாற்றம் செய்து இருந்தார்.[5] மற்றும் திரைப்படத்தில் காட்சிகளில் புகைப் புகைத்தல், ஆடை தொடர்பானக் காட்சிகள் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி அக்காட்சிகள் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அதே ஆண்டில் இவர் நடிகர் ஆரி நடித்த நாகேஷ் திரையரங்கம் என்ற திகில்த் திரைப்படத்தில் ஆரியின் சகோதரியாக துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்து இருந்தார்.

2019ஆம் ஆண்டு சுட்டு பிடிக்க உத்தரவு என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[6] அதை அடுத்து சமுத்திரக்கனி இயக்கும் நாடோடிகள் 2 என்ற திரைபபடத்தில் நடித்துளளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.[7][8] இதில் இவருடன் சசிகுமார், அஞ்சலி, பரணி போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் கவனிக்கப்படும் என்று நம்பப்படுகின்றது. அடுத்த சட்டை என்ற திரைபபடத்தில் நடித்துள்ளார் இதையும் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி மற்றும் நடித்துளளார். வட்டம் என்ற திரைபபடத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா ஜெரெமையா மற்றும் உடன் மஞ்சிமா மோகன் நடிக்கின்றார். சாபிமாரி, காடவர் போன்ற பல திரைபபடங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இந்த திரைப்படம் இந்தாண்டு அல்லது அடுத்த ஆண்டுகளில் திரைக்கு வரவிருக்கின்றது.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2017 காதல் கண் கட்டுதே அதுல்யா அறிமுகம்
2018 ஏமாலி ரித்து
2018 நாகேஷ் திரையரங்கம்
2019 சுட்டு பிடிக்க உத்தரவு புவனா
2019 நாடோடிகள் 2 அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
2019 அடுத்த சட்டை அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
2019 சாபிமாரி அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
2019 காடவர் அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்
2019 வட்டம் அறிவிக்கப்படும் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்யா_ரவி&oldid=3026865" இருந்து மீள்விக்கப்பட்டது