அது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அது
இயக்கம்ரமேஷ் பாலகிருஷ்ணன்
தயாரிப்புவி. சுந்தர்
கதைரமேஷ் கிருஷ்ணன்
பாலகுமாரன் (உரையாடல்)
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசினேகா
மோகித் சதா
சுகாசினி
சரண்யா
விஜயன்
ஒளிப்பதிவுபி. செல்வகுமார்
படத்தொகுப்புஎன். பி. சத்தீஷ்
கலையகம்விஸ்வாஸ் பிலிம்ஸ்
வெளியீடு15 அக்டோபர் 2004 (2004-10-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அது (Adhu) என்பது 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம். ஆகும். ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரமான ஆவி பிடித்த பெண்ணாக நடித்தார்.[1] அரவிந்த், புதுமுகம், சுகா, கசன் கான், விஜயன் ஆகியோர் துணைப் பாத்திரங்களிலும், அப்பாஸ் சிறப்புப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.. இப்பபடம், 2002 ஆம் ஆண்டு ஆங்காங் - தாய் - சிங்கப்பூர் திரைப்படமான தி ஐ என்ற திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும், இது பின்னர் அதே பெயரில் அமெரிக்காவில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும் நைனா என்ற பெயரில் இந்தியில், மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தியில் ஜெசிகா ஆல்பா, ஊர்மிளா மடோண்த்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பி. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, படமானது 20004 அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்டது. இப்படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிகரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்தது.[2][3]

கதை[தொகு]

மீராவுக்கு (சினேகா) கயல்விழியின் (சுஹா) கண்களால் பொருத்தப்படுகின்றன. இது மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாத "விஷயங்களை" காட்டுகிறது. கயல்விழியின் ஆவியால் பாதிக்கபட்ட மீரா விஜயநகரத்திற்குச் செல்கிறாள். ஏனென்றால் கயல்விழியின் கதையையும் கிராமத் தலைவர் (விஜயன்) செய்த அநீதியையும் அறிந்து கொள்ளும்படி ஆவி அவளை உந்துகிறது. கயல்விழியின் ஆவி தனக்கு அநீதி இழைத்தவர்களை பழிவாங்க முயல்கிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதே கதையின் முடிவு.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்திற்கான பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்தார். இது படத்தின் சில சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என்று கூறப்பட்டது. படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது. அது இசைப்பதிவாக வெளியிடப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/fr/2004/10/22/stories/2004102202790300.htm
  2. http://www.indiaglitz.com/athu-tamil-movie-review-7150.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அது&oldid=3659269" இலிருந்து மீள்விக்கப்பட்டது