அதீனா கவுசுட்டெனிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதீனா கவுசுட்டெனிசு
Athena Coustenis
அதீனா கவுசுட்டெனிசு
கவுசுட்டெனிசு, 2020 செப்டம்பரில்
பிறப்பு1961 (1961)
ஏதென்சு, கிரீசு.
வாழிடம்பாரீசு, பிரான்சு.
குடியுரிமைபிரெஞ்சியர், கிரேக்கர்.
துறைவானியற்பியல்
கோள் அறிவியல்
கல்விPierre and Marie Curie University (MS, PhD), HDR
University of Paris III: Sorbonne Nouvelle (MA)
இணையதளம்
http://www.CoustenisPlanetologist.com

அதீனா கவுசுட்டெனிசு (Athena Coustenis) ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் கோள் அறிவியலில் சிறப்புப் புலமை வாய்ந்தவர் ஆவார். இவர் பிரெஞ்சு நாட்டினர். இவர் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மைய (Centre national de la recherche scientifique CNRS, French National Center for Scientific Research) வானியற்பியல் கருவிகள் ஆய்வகத்தின் (LESIA (Laboratoire d'études spatiales et d'instrumentation en astrophysique) இயக்குநராக உள்ளார். இந்த மையம் மியூதோனில் உள்ள பாரீசு வான்காணகத்தில் அமைந்துள்ளது.[1]. இவர் ஐரோப்பிய விண்வெளி முகமை, நாசா நிறுவன்ங்களின் விண்வெளித் திட்டங்களுக்குத் தலைமையேற்றுள்ளார். இவரது ஆய்வுக் கவனம் வளிமப் பெருங்கோள்களாகிய வியாழன், காரிக்கோள் (சனி) ஆகியவற்றிலும் அவற்றின் நிலாக்களிலும் குவிந்துள்ளது. இவர் காரிக்கோளின் நிலாவாகிய தித்தன் ஆய்வில் உயர்புலமை வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.[2]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் கிரீசு, ஏதென்சில் 1961 இல் பிறந்தார். பிறகு பிரான்சு, பாரீசுக்குப் புலம்பெயர்ந்துள்ளார். இவர் பாரீசில் உள்ள பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் வானியற்பியலிலும் விண்வெளி நுட்பங்களிலும் 1986 இல் முதுவர் பட்டம் பெற்றார். மேலும், சோர்பான் நவுவில்லியில் உள்ள பாரீசு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுவர் பட்டத்தை 1987 இல் பெற்றுள்ளார். இவர் தன் முனைவர் பட்ட்த்தைப் பாரீசில் உள்ள பியேர், மேரி கியூரி பல்கலைக்கழகத்தில் வானியற்பியலிலும் விண்வெளி நுட்பங்களிலும் 1989 இல் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வு "Titan's atmosphere from Voyager's infrared observations" என்பதாகும். இங்கு இவர் 1996 இல் நேரடியாக ஆராய்ச்சியில் ஈடுபடும் வாழ்தகவையும் பெற்றுள்ளார்.[1][3]

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் முதலில் தெசுபா (DESPA) பரணிடப்பட்டது 2017-10-04 at the வந்தவழி இயந்திரம் விலும் பின்னர் இலெசியா (LESIA) விலும் முதுநிலை ஆய்வாளராக 1991 முதல் 2008 வரை பணிபுரிந்துள்ளார். இவர் 2008 இல் இருந்து அண்மை வரை மியூதோனில் உள்ள பாரீசு வான்காணகத்தில் சி.என்.ஆர்.எசு (CNRS) விலும் இலெசியா (LESIA) விலும் காசினி-அய்கன்சு இலக்குத் திட்டத்தின் சி.ஐ.ஆர்.எச் (CIRS) பரணிடப்பட்டது 2018-08-24 at the வந்தவழி இயந்திரம் சார்ந்த மூன்று கருவிகளின் இணை ஆய்வாளராகவும் உள்ளார்.[4]

கவுசுட்டெனிசு ஐரோப்பியப் புவி அறிவியல் புலங்கள் ஒன்றியம் (EGU), பன்னாட்டுப் புவுயளக்கை, புவி இயற்பியல் ஒன்றியம் (IUGG), பன்னாட்டு வானியல் ஒன்றியம் (IAU), I பன்னாட்டு விண்வெளி பரப்பியல் கல்விக்கழகம்[தொடர்பிழந்த இணைப்பு] (IAA), ஐரோப்பிய கோள் அறிவியல் பேராயம் (EPSG), ஐரோக்கோள், பன்னாட்டு விண்வெளி அறிவியல் நிறுவனம் (ISSI), and the பன்னாட்டு உயிர்த் தோற்ர ஆய்வுக் கழகம் (ISSOL) ஆகியன உள்ளடங்கிய பல அறிவியல் கழகங்கள், ஒன்றியங்கள், நிறுவனங்களின் தலைமைக் குழுக்களில் பங்கேற்றுள்ளார்.[5]

இவர் பன்னாட்டுப் புவுயளக்கை, புவி இயற்பியல் ஒன்றியம் , பன்னாட்டு வானிலையியல், வளிமண்டல அறிவியல் புலங்கள் கழகம், ஐரோப்பிய விண்வெளி முகமையின் சூரியக் குடும்பம், தேட்டம்சார் பணிக்குழு ஆகியவற்றின் முன்னாள் தலைவர் ஆவார். ஐரோப்பிய அறிவியல் அறக்கட்டளை விண்வெளி அறிவியல் குழுவின் (ESF-ESSC) தலைவராக 2015 முதல் 2020 வரை இருந்தபோது, ஐரோப்பிய விண்வெளி முகமைக் கட்டமைப்பிலும் தேசிய அறிவியல் கல்விக்கழக விண்வெளி ஆய்வுக் குழுமத்திலும் CNES இலும் COSPAR இலும் அமைந்த பல குழுக்களில் அலுவல்சார் உறுப்பினராக இருந்துள்ளார்.

ஆராய்ச்சி[தொகு]

இவர் சூரியக் குடும்ப வான்பொருள்களை ஆய்வு செய்ய தரை வான்காணகங்களையும் விண்வெலி வாண்காணகங்களையும் பயன்படுத்துகிறார். குறிப்பாக காரிக்கோள், வியாழனின் நிலாக்களிலும் புறக்கோள்களிலும் தன் ஆய்வை மேற்கொள்கிறார். இவரது ஆய்வு சூரியக் குடும்பத்திலும் அதற்கப்பாலும் நிலவும் மாந்த வாழ்தகவுள்ள உல்கங்களில் குறிப்பாக அவற்ரின் வானுயிரியல் கூறுபாடுகளில் கவனத்தைக் குவிக்கிறது. இவரது ஒப்பீட்டுக் கோளியல் ஆராய்ச்சி கால்நிலை மாற்றங்களை பயன்படுத்தி நாம் வாழும் புவிக்கோளின் நெடுங்காலப் படிமலர்ச்சியைப் புரிந்துகொள்ள கவனம் செலுத்துகிறது. மிக அண்மையில்லைரோப்பிய விண்வெளி முகமை, அதன் பன்னாட்டுப் பங்கேற்போரின் விண்வெளி இலக்குத் திட்டங்களை வரையறுப்பதிலும் தேர்வு செய்வதிலும் முன்னோடி முயற்சிகளை மேற்கொள்கிறார்.[6]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவருக்கு காசினித் திட்ட ஐகன்சு வளிமண்டலக் கட்டமைப்புக் கருவியை வடிவமைத்தமைக்காக நாசாவின் குழு சாதனை விருது வழங்கப்பட்டது.

இவருக்கு காசினித் திட்டத் தரையிறக்க படிமவகை கதிரளவி கதிர்நிரலியை வடிவமைத்தமைக்காக நாசாவின் குழு சாதனை விருது வழங்கப்பட்டது.

ஐகன்சு ஆய்கலத்துக்குத் தன்னிகரற்ற பங்களிப்பு செய்தமைக்காக ஐரோப்பிய விண்வெளி முகமை விருது வழங்கப்பட்டுள்ளது.[1]

இவருக்கு அமெரிக்க வானியல் கழகம் 2014 இல் அரோல்டு மாசுர்சுகி விருதை வழங்கியது.[7]

அரசு கழக உறுப்பினர்[8]

இவர் 2017 இல் பன்னாட்டு விண்வெளி பறப்பியல் கல்விக்கழக உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[9]

இவர் 2018 இல் இருந்து பெல்ஜிய அரசு கல்விக்கழக இணை உறுப்பினராக உள்ளார்.[10]

பன்னாட்டு வானியல் ஒன்றிய உறுப்பினர்[11]

புவியண்மை வான்பொருள்கள் தேட்டம் வழியாக உலோவல் வான்காணகத்தால் 2000 ஜூன் 5 இல் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மைப் பட்டைக் குறுங்கோளாகிய 18101 கவுசுட்டெனிசு (2000 LF32) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது . இது எம் புசிஞானி பரிந்துரை பேரில் பிரான்சில் அமைந்த பாரீசு மியூதோன் வான்காணகத்தில் பணிபுரியும் கவுசுட்டெனிசு பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.[சான்று தேவை]

வெளியீடுகள்[தொகு]

Coustenis, A., Encrenaz, Th., 2013. Life beyond Earth: the search for habitable worlds in the Universe. Cambridge Univ. Press. ISBN 978-1107026179.[12]

Coustenis, A., Taylor, F., 2008. Titan : Exploring an Earth-like World. World Scientific Publishing, Singapore, Eds. ISBN 978-9812705013.[13]

Coustenis, A., Taylor, F., 1999. Titan, the Earth-like moon. World Scientific Publishing, Singapore, Eds. ISBN 978-9810239213.[14]

இவர் தனியாகவும் இணைந்தும் 190 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுரைகளும் கட்டுரைகளும் களஞ்சிய இயல்களும் எழுதி வெளியிட்டுள்ளார்.[15]

=

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Invited Authors". www.raa-journal.org. Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 2. "A Traveller's Guide To The Planets". National Geographic - Videos, TV Shows & Photos - International (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 3. "Dr. Athena Coustenis: just follow your dreams" (in en-US). Women in Planetary Science: Female Scientists on Careers, Research, Space Science, and Work/Life Balance. 2016-01-27. https://womeninplanetaryscience.wordpress.com/2016/01/27/dr-athena-coustenis-just-follow-your-dreams/. 
 4. Analytics, Clarivate. "Athena Coustenis Interview - Special Topic of Planetary Exploration - ScienceWatch.com - Clarivate Analytics". archive.sciencewatch.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 5. "Athena Coustenis - ESF - ESSC". www.essc.esf.org. Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 6. "Huygens - Landing on Titan". cassini-huygens.cnes.fr (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 7. "2014 Prize Recipients | Division for Planetary Sciences". dps.aas.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 8. "Athena Coustenis". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 9. "International Academy of Astronautics". iaaweb.org. Archived from the original on 2017-11-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 10. "Détail". www.academieroyale.be (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 11. "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
 12. Coustenis, Athena; Encrenaz, Thérèse (September 2013). "Life beyond Earth: The Search for Habitable Worlds in the Universe" (in en). Cambridge Core. doi:10.1017/CBO9781139206921. https://www.cambridge.org/core/books/life-beyond-earth/2E3F103C26EE10BC5114606808CF3DC7. 
 13. Coustenis, Athena; Taylor, Fredric W (in en-US). Titan. doi:10.1142/6360. https://www.worldscientific.com/worldscibooks/10.1142/6360. 
 14. Coustenis, Athena; Taylor, Fred (in en-US). Titan. doi:10.1142/4142. https://www.worldscientific.com/worldscibooks/10.1142/4142. 
 15. "Searches | Harvard University". Harvard University (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதீனா_கவுசுட்டெனிசு&oldid=3592418" இலிருந்து மீள்விக்கப்பட்டது