உள்ளடக்கத்துக்குச் செல்

அதி கூர்மைச் சிகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map of ultras worldwide

அதி கூர்மைச் சிகரம் (அல்ட்ரா) (ஆங்கிலம்: Ultra-prominent peak) (Ultra) என்பது 1,500 மீட்டர் (4,900 அடி) அல்லது அதற்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைந்த ஒரு மலை உச்சியைக் குறிப்பிடுவதாகும். இது P1500 என்றும் அழைக்கப்படுகிறது.[1] கடல் மட்டத்திலிருந்து, மற்ற நிலப்பகுதிகளைவிட ஓர் உயர்ந்த நிலப்பகுதியே சிகரம் என குறிப்பிடப்படுகிறது.

புவியில் இதுபோன்று சுமார் 1,524 சிகரங்கள் உள்ளன.[2] மேட்டர்ஹார்ன் (Matterhorn) மற்றும் ஈகர் (Eiger) போன்ற சில நன்கு அறியப்பட்ட சிகரங்கள் அல்ட்ராக்கள் அல்ல; ஏனெனில் அவை மற்ற உயர்ந்த மலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. தனி நில அமைப்பாக இயங்கவில்லை. இதனால் அவை அதி கூர்மைச்சிகரம் எனும் முக்கியத்துவத்தைனப் பெறவில்லை.[2]

1980-களில் சிகரங்களின் முக்கியத்துவம் குறித்து ஆய்வுகள் செய்த புவியியலாளர் இசுடீவ் பிரை (Steve Fry) என்பவரால் "அல்ட்ரா" என்ற சொல் உருவாக்கப்பட்டது. அவரின் அசல் சொல்தொடர் "உச்ச சிகர மலை" (Ultra Major Mountain) என்பதாகும். அந்தச் சொல்தொடர் 1,500 மீட்டர் (4,900 அடி) உயரம் கொண்ட சிகரங்களைக் குறிக்கிறது.[3]

பொது

[தொகு]
கனடாவின் மிக உயரந்த சிகரமான யூக்கான், லோகன் மலை, உலகின் உயர்ந்த சிகரங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

தற்போது இந்தப் புவியில், ​​1,518 அதி கூர்மைச் சிகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: ஆசியாவில் 639 சிகரங்கள்; வட அமெரிக்காவில் 356 சிகரங்கள்; தென் அமெரிக்காவில் 209 சிகரங்கள்; ஐரோப்பாவில் 120 சிகரங்கள்; ஆப்பிரிக்காவில் 84 சிகரங்கள்; ஓசியானியாவில் 69 சிகரங்கள்; மற்றும் அண்டார்டிகாவில் 41 சிகரங்கள் உள்ளன.[2]

உலகின் மிகப்பெரிய மலைகளான எவரெசுட்டு சிகரம், கே-2 கொடுமுடி, கஞ்சஞ்சங்கா மலை, கிளிமஞ்சாரோ மலை, மோண்ட் பிளாங்க், ஒலிம்பசு மலை. போன்றவை அதி கூர்மைச் சிகரங்களின் பட்டியலில் இடம்பெறுகின்றன. மறுபுறம், ஈகர் மலை மற்றும் மேட்டர்ஹார்ன் மலை போன்றவை அதி கூர்மைச் சிகரங்கள் அல்ல.

பல அதி கூர்மைச் சிகரங்கள் உலகின் அரிதாகப் பார்வையிடப்படும் பகுதிகளில் உள்ளன. அவ்வாறு 39 சிகரங்கள் உள்ள்ன. அவற்றில் கிறீன்லாந்தில் உள்ள சிகரங்கள், ஆர்க்டிக் தீவுகளான நோவயா ஜெம்லியா (Novaya Zemlya), ஜான் மாயென் மற்றும் இசுபிட்ஸ்பெர்கன் (Spitsbergen) போன்றவை அடங்கும். அந்தப் பட்டியலில் ஆசியாவின் பெரும் மலைத்தொடர்களின் பல சிகரங்களும் அடங்கும். அதே வேளையில், பிரித்தானிய கொலம்பியாவில் பட்டியலிடப்பட்டுள்ள சில மலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பெயர்கள் கூட இல்லை.

மேலும் காண்க

[தொகு]
எவரெசுட்டு கலாபத்தார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rob Woodhall (18 May 2016). "Relative hills on Earth". TheRelativeHillsofBritain. Ultra: peaks with a minimum prominence/relative height of 1500m. Steve Fry coined the term Ultra in the USA in the 1980s. His original term was 'ultra major mountain'. There are no Ultra summits in Britain. Hall of Fame entry minimum is 15.
  2. 2.0 2.1 2.2 Maizlish, A. "The Ultra-Prominences Page". Peaklist.org.
  3. Helman, Adam (2005). The Finest Peaks: Prominence and other Mountain Measures. Trafford. ISBN 1-4120-5994-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதி_கூர்மைச்_சிகரம்&oldid=4216922" இலிருந்து மீள்விக்கப்பட்டது