அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளிர்பானங்கள்

அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (Fast Moving consumer Goods) (அல்லது) அடைக்கப்பட்ட நுகர்வோர் பொருள்கள் (Consumer Pakaged Goods) என்பது விலை மலிவானதும், விரைவில் விற்றுத்தீரக்கூடியதும், காலாவதியாகக்கூடியதுமான பொருள்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக விரைவில் காலாவதியாகக் கூடிய பொருள்களான குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் விரும்பும் விலை மலிவான மிட்டாய்கள் மற்றும் சாக்லெட் போன்ற நுகர்பொருள்களையும் குறிப்பிடலாம்.[1][2] இந்தப் பொருள்களை உற்பத்தி செய்த சில நாள்கள் முதல் சில வாரங்களுக்குள் உபயோகபடுத்தியிருக்க வேண்டும், இல்லாவிடில் காலாவதியாகிவிடும். மாறாக நீடித்திருக்கும் பொருள்களான சமையல் உபகரணங்கள், தளபாடங்கள் போன்ற பொருள்களை ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது, இவை தேய்மானம் அடையும் மாறாக காலாவதி ஆகாது.


அ.நு.நு.பொ (FMCG) என்பது அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரின் தேவை காரணமாகவோ அல்லது பொருள்கள் விரைவில் காலாவதியாவதாலோ குறைந்தகாலம் மட்டுமே கடைகளின் அலமாரியில் உள்ளது. இறைச்சி, பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், மற்றும் வேகவைத்த பொருள்கள் போன்ற சில FMCG-க்கள் விரைவில் அழிந்துபோகக்கூடியவை. மது, கழிப்பறைப்  பொருள்கள், முன்-பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், சாக்லேட், மிட்டாய்கள், ஒப்பனைப் பொருட்கள் மற்றும் துப்புரவு பொருள்கள் போன்ற பொருள்கள் அதிகளவு விற்பனை வருவாய் விகிதங்களைக் கொண்டுள்ளன. மேலும் இது விடுமுறை காலங்கள் மற்றும் குறிப்பிட்ட பருவங்களில் அதிகளவு விற்பனை ஆகின்றது.

எஃப்எம்சிஜி பொருள்களின் தயாரிப்புகளில் இலாப அளவு ஒப்பீட்டளவில் சிறியது என்றாலும், அவை பொதுவாக அதிக எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன; இதனால் இத்தகைய தயாரிப்புகளின் ஒட்டுமொத்த லாபம் கணிசமாக இருக்கும். FMCG என்பதன் சிறப்புக் குறைந்த அளவு இலாபம் மற்றும் அதிக அளவு விற்பனை ஆகும். இந்தத் துறையில் உற்பத்தியாளர்கள் / மொத்த விற்பனையாளர்களைக் காட்டிலும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இலாப விகிதம் அதிகம்.

பண்புகள்[தொகு]

FMCG களின் முக்கிய பண்புகள் பின்வருமாறு: [1]

 • நுகர்வோர் பார்வையிலிருந்து:
  • அடிக்கடி கொள்முதல் செய்வது
  • குறைவான ஈடுபாடு (உருப்படியைத் தேர்ந்தெடுக்க குறைவான அல்லது முயற்சியே அல்லாமல்)
  • குறைந்த விலை மற்றும் விரைவில் காலாவதியாகிவிடும் (குறுகிய காலம்)
  • விரைவான/அதிக எண்ணிக்கையிலான நுகர்வு
 • விளம்பரதாரர் கண்ணோட்டத்தில் இருந்து:
  • அதிக அளவிலான எண்ணிக்கைகள்
  • குறைந்த இலாப பங்களிப்பு
  • விரிவான விநியோக வலைப்பின்னல்கள்
  • அதிக பொருள்கள் விற்பனை

சர்வதேச தரநிலை தொழில்துறை வகைப்பாடு[தொகு]

FMCG களுக்கான சில்லறை சந்தையானது அனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம் (ISIC) (மறுபரிசீலனை 3) அடிப்படையில் பின்வரும் தொழில்களைப் பட்டியிலிட்டுள்ளது:

 • 1512 மீன் மற்றும் மீன் சார்ந்த பொருள்கள்
 • 1513 பழங்கள் மற்றும் காய்கறிகள்
 • 1514 காய்கறி மற்றும் விலங்களின் கொழுப்புகள் மற்றும் எண்ணெய் பொருள்கள்
 • 1520 பால்பொருள்கள்
 • 1531 தானியம் சார்ந்த பொருள்கள்
 • 1532 மாச்சத்து மற்றும் மாச்சத்து பொருள்கள் (starches and starch products)
 • 1533 விலங்குகளுக்கான உணவுப்பொருள்கள்
 • 1541 அடுமனை பொருள்கள்
 • 1542 சருக்கரை
 • 1543 கோகோ, இன்னட்டு(சாக்லேட்) , இனிப்பு பண்டங்கள்
 • 1544 மக்ரோனி, குழைமா(நூடுல்ஸ்) , couscous
 • 1549 மற்ற உணவுப் பொருள்கள்
 • 1551 சாராயம், எத்தீல் ஆல்ககால் (spirits, ethyl alcohol)
 • 1552 வைன்
 • 1553 தானியங்கள் மற்றும் தானியங்களாலான மது (malt liquors and malt)
 • 1554 குளிர்பானங்கள், குடிநீர்
 • 1600 புகையிலைப் பொருள்கள்
 • 2101 காகிதம், கூழ் மற்றும் காகித அட்டை
 • 2102 நெளிவான காகிதம், களங்கள் (corrugated paper, containers)
 • 2109 காகிதம் மற்றும் காகித அட்டைகளின் மற்றைய பொருள்கள்
 • 2424 சோப் மற்றும் டிடர்ஜென்ட்கள், சுத்திகரிப்பு பொருள்கள் (soap and detergents, cleaning preparations, perfumes)
 • 2430 ஆண், பெண் உள்ளாடைகள், சவரக் களி, நறுமணப் பொருள்கள் (men's and women's inner garments, shaving gels, deodorants)

குறிப்பிடத்தகுந்த அ.நு.நு.பொ நிறுவனங்கள[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. Ramanuj Majumdar (2004). Product Management in India. PHI Learning. பக். 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-203-1252-4. https://books.google.com/books?id=ESJzaCJE3fQC&pg=PA26&dq=what+is+fmcg&q=what%20is%20fmcg. பார்த்த நாள்: 2010-06-19. 
 2. Sean Brierley (2002). The advertising handbook By Sean Brierley (2, illustrated ). Routledge. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-24391-9.