அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்ற நூலை, எழுத்தாளர், நடிகர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வழக்கறிஞருமான சோ ராமசாமி எழுதியுள்ளார். இவர் இந்நூலில் பல்வேறு துறையில் உள்ள பிரபலங்களுடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும், தன் பல்வேறு பணிகளில் ஏற்பட்ட சுவையான அனுபவங்களையும் எழுதியுள்ளார். அவர் ஆசிரியாராக இருந்த துக்ளக் இதழில் இது தொடராக வந்தது. பின்னர் இந்நூலின் முதற்பதிப்பு 2007 ஆம் ஆண்டு அல்லயன்ஸ் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுளளது.

பிரபலங்கள்[தொகு]

இப்புத்தகத்தில் இந்திராகாந்தி, எம். ஜி. ராமச்சந்திரன், மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, ரஜினிகாந்த், வாஜ்பாய், அத்வானி, மொராஜி தேசாய், ராஜீவ் காந்தி, ஜீ.கே.மூப்பானார், ராஜாஜி, சிவாஜி கணேசன், அண்ணாத்துரை, கண்ணதாசன், ப. சிதம்பரம், வை. கோபால்சாமி, சுப்பிரமணியம் சுவாமி, பக்தவச்சலம், பாலச்சந்தர், ஓ.வி.அளகேசன், எம்.எஸ்.விஸ்வநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன், ராம்நாத் கோயங்கா, சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டி, சரண் சிங், ராஜ்நாராயணன், சஞ்சய் காந்தி, இரா.செழியன், ஆச்சார்ய கிருபளானி, ஜெகஜீவன்ராம், மதுதண்டவதே, பாலா சாஹேப் தேவரஸ், என்.டி.ராமாராவ், சந்திரபாவு நாயுடு, எஸ்.டி.சர்மா, ஜார்ஜ் ஃபெர்னானண்டஸ், வி.எம்.ஜானகி, ஜெயவர்தன, அமிர்தலிங்கம், என பெரும் எண்ணிக்கையிலான பிரபலங்களுடன் நூலாசிரியருக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]