உள்ளடக்கத்துக்குச் செல்

அதிர்வு (இணையத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிர்வு இணையத்தளமானது 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் பிரதம ஆசிரியர் கண்ணன் என்பவர் ஆவார். ஈழப் போர் உக்கிரமடைந்த காலப் பகுதிகளில் இவ்விணையமானது, ஈழ அழிவுகளின் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு உண்மையை உலகறியச் செய்தது. அதிர்வு இணையத்தில் வெளியான பல புகைப்படங்கள் சர்வதேச தொலைக்காட்சிகளாக அல் ஜசீரா, பி.பி.சி., மற்றும் சி.என்.என் போன்றவற்றிலும் வெளியாகியது.

தமிழர்களுக்காக, அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்களின் இன்னல்களை வெளிக்கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க இணையமாக அதிர்வு இருக்கிறது. இது தற்போது 24 மணி நேரச் செய்தி இணையமாக தனது அடுத்த பணியைத் தொடர்ந்து முன்னேறிவருகிறது. ஆய்வுக் கட்டுரைகள், செய்திகள், புலணாய்வுத் தகவல்கள், சினிமா, அறிவியல் என அது பல படைப்புகளை தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளதோடு நின்றுவிடாது, பல நேர்காணல்களையும் வழங்கியுள்ளது. குறிப்பாக பல தலைவர்களின் காணொளிகளும், நேர்காணல்களும் அதிர்வில் உள்ளது.

தமிழ் தேசியம், தமிழ் இனஒற்றுமை, தமிழ் இனத்தின் இறையான்மை ஆகிய கூற்றுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அதிர்வு இணையம் உள்ளது.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிர்வு_(இணையத்தளம்)&oldid=2267203" இலிருந்து மீள்விக்கப்பட்டது