அதிராவ் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிராவ் பிராந்தியம்
Атырау облысы
Атырауская область
அதிராவ் பிராந்தியம்-இன் சின்னம்
சின்னம்
Atyrau in Kazakhstan.svg
ஆள்கூறுகள்: 47°07′0″N 51°53′0″E / 47.11667°N 51.88333°E / 47.11667; 51.88333ஆள்கூறுகள்: 47°07′0″N 51°53′0″E / 47.11667°N 51.88333°E / 47.11667; 51.88333
நாடுகஜகஸ்தான்
தலைநகரம்அதிராவ்
அரசு
 • அக்கிம்மஹம்பேத் டோஸ்முஹம்பேடோவ்
பரப்பளவு
 • மொத்தம்1,18,631 km2 (45,804 sq mi)
மக்கள்தொகை (2013-02-01)[1]
 • மொத்தம்5,56,388
 • அடர்த்தி4.7/km2 (12/sq mi)
அஞ்சல் குறியீடு060000
தொலைபேசி குறியீடு+7 (712)
ISO 3166-2KZ-ATY
Licence plate06, E
Districts7
மாநகரங்கள்2
நகரியங்கள்10
ஊர்கள்188
இணையதளம்atyrau.gov.kz

அதிராவ் பிராந்தியம் (Atyrau Region, கசாக்கு: Атырау облысы , Atyraý oblysy , اتىراۋ وبلىسى ; Russian ) முன்னர் Gur'yev (எனப்படும் சோவியத் குர்யெவ்ஸ்காயா ஒப்லாஸ்ட் மாகாணம்), என்பது கஜகஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மேற்கில் காஸ்பியன் கடலின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அதிராவ் நகரமாகும். இந்த நகரில் 142.500 மக்கள் வசிககின்றனர். இப்பிராந்தியததின் மக்கள் தொகை 480,000 ஆகும். மக்கள் தொகையில் 80% க்கும் அதிகமானவர்கள் கசக்குகள் ஆவர்.

வரலாறு[தொகு]

அதிராவ் பிராந்தியத்தின் துரான் தாழ்நிலப் பகுதிகள் பழங்காலத்தின் மல்கர் "ஹன்" வம்சங்களின் தாயகமாக இருந்தது.

நிலவியல்[தொகு]

118,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த பிராந்தியமானது கஜகஸ்தானில் இரண்டாவது மிகச்சிறிய பிராந்தியம் ( துருக்கிஸ்தான் பகுதி மிகச் சிறியது) ஆகும். இது மேற்கில் உருசியா ( அஸ்திரகான் ஒப்லாஸ்ட் ), கிழக்கில் சக கசாக் பகுதிகளான அக்டோபே, தெற்கே மங்கிஸ்டாவ் மற்றும் வடக்கே மேற்கு கஜகஸ்தான் பகுதி ஆகியவற்றின் எல்லையாக உள்ளன. உரால் ஆறு என்பது ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான எல்லையாகும். மேலும் உருசியாவிலிருந்து காஸ்பியன் கடலுக்கு இப்பகுதி வழியாக பாய்கிறது. அதாவது மேற்கு அதிராவ் பிராந்தியம் ஐரோப்பாவில் உள்ளது.

இப்பகுதியின் பெரும்பகுதி எண்ணெய் வளமான காஸ்பியன் தாழ்நிலத்தில் அமைந்துள்ளது. டெங்கிஸ் எண்ணை வயல் மற்றும் காஷகன் எண்ணை வயல் போன்ற பகுதிகளில் பல எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் ஒரு எண்ணெய் குழாய் இணைப்பு உருசியாவின் குழாய் அமைப்பில் இணைய அட்ராவ் முதல் உருசியாவின் சமாரா வரை செல்கிறது. டெங்கிஸ் எண்ணை வயலில் இருந்து உருசிய கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் வரை ஒரு தனி எண்ணெய் குழாய் செல்கிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, அதிராவ் பிராந்தியத்தின் மக்கள் தொகை 645,280 ஆகும். [2]

இனக்குழுக்கள் (2020): [3]

  • கசாக் : 92.72%
  • உருசியர் : 5.14%
  • மற்றவர்: 2,14%

நிர்வாக பிரிவுகள்[தொகு]

இப்பிராந்தியம் ஏழு மாவட்டங்களாகவும், அதிராவ் மாநகரமப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள்: [4]


குறிப்புகள்[தொகு]

  1. Agency of statistics of the Republic of Kazakhstan: Численность населения Республики Казахстан по областям с начала 2013 года до 1 февраля 2013 года பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம் 2012, 2013 (Russian; Excel; 55 kB).
  2. "Численность населения Республики Казахстан по отдельным этносам на начало 2020 года". Stat.kz. 2020-08-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Численность населения Республики Казахстан по отдельным этносам на начало 2020 года". Stat.kz. 2020-08-06 அன்று பார்க்கப்பட்டது.
  4. Аппарат акима Жылыойского района (Russian). Электронный Акимат Атырауской области. 19 December 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 June 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிராவ்_பிராந்தியம்&oldid=3231211" இருந்து மீள்விக்கப்பட்டது