அதியமான் பொறியியற் கல்லூரி

ஆள்கூறுகள்: 12°43′04″N 77°52′11″E / 12.7179°N 77.86986°E / 12.7179; 77.86986
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதியமான் பொறியியற் கல்லூரி
முதன்மைக் கட்டடம்
வகைசுயநிதி
உருவாக்கம்1987
முதல்வர்ஜி. இரங்கநாத்
அமைவிடம், ,
வளாகம்Semi Urban
சுருக்கப் பெயர்ACE and AERI
சேர்ப்புதன்னாட்சி
இணையதளம்http://www.adhiyamaan.ac.in

அதியமான் பொறியியற் கல்லூரி (Adhiyamaan College of Engineering ) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தின் ஒசூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும்.

வரலாறு[தொகு]

கல்லூரியின் முதன்மை நுழைவுவாயில்

இக் கல்லூரி 1993/94 இல் அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாடு மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய அப்போதைய தருமபுரி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி ஆகும். இது முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் இணைந்திருந்தது. பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்றது. தமிழ்நாடு அரசாங்கம் 2001 இல் அண்ணா பல்கலைக்கழகத்தை மண்டலவாரியாக பிரித்து தமிழகத்தில் அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை அதனுள் கொண்டு வந்த போது, அதியமான் பொறியியல் கல்லூரி கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. இது இப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இருப்பிடம்[தொகு]

கல்லூரி அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின், வளாகம், தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் டாக்டர் எம்.ஜி.ஆர் நகரில் தேசிய நெடுஞ்சாலை எண்-7ஐ ஒட்டி 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிறுவனம் ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் ஒசூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவற்றில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூரில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் அருகில் உள்ள விமான நிலையம் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் ஆகும்.

நிறுவனம்[தொகு]

இந்தக் கல்லூரி ஒரு தன்னாட்சி நிறுவனமாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சிலால் (NAAC) அ தர அங்கீகாரம் பெற்றது.[1] இக் கல்லூரி ISO 9001: 2008 சான்றிதழ் பெற்றது. மேலும் இது ஏ.ஐ.சி.டி.இ., என்பிஏ, புது தில்லி அங்கீகாரம் கொண்ட கல்லூரி ஆகும்.

உள்கட்டமைப்பு[தொகு]

காவிரி விடுதி (முதன்மை) மூத்தமாணவர்களுக்கானது
விடுதியில் இருந்து பார்க்கும்போது- ஆடுகளம்

இங்கு மூன்று விடுதிகள் பெண்ணாறு, காவிரி, பவானி ஆகிய பெயர்களில் உள்ளன. பெண்ணாறு, காவிரி விடுதிகள் மாணவர்களுக்கானது. இதில் பெண்ணாறு மூத்த மாணவர்களுக்கும், காவிரி இளைய மாணவர்களுக்கும் ஆகும். பவானி விடுதி மாணவிகளுக்கானது. கல்லூரியில் உள்ள நூலகத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் அத்துடன் தொழில்நுட்ப மற்றும் அல்லாத தொழில்நுட்ப இதழ்கள் உள்ளன. கணினி ஆய்வகங்கள், பொழுதுபோக்கு அறைகள், விளையாட்டு வசதிகள் போன்றவை உள்ளன.

தேர்வு முறை[தொகு]

ஒவ்வொரு கல்வி ஆண்டும் இரண்டு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவங்களிலும் அனைத்து கோட்பாடு பாடங்களில் மூன்று உள் தேர்வுகளும், மற்றும் ஒரு இறுதித் தேர்வும் இருக்கும். ஆய்வகத் தேர்வுகள் இறுதித் தேர்வை தொடர்ந்து உள் தேர்வாக வைக்கப்படுகிறது. அனைத்துத் தேர்வுகளும் இந்தியாவின் பிற பொறியியல் கல்லூரிகள் போன்றே எழுத்துத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் முறை வழக்கத்தில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Adhiyamaan college of Engineering, Hosur". Archived from the original on 1 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)