அதிதி மங்கள்தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிதி மங்கள்தாஸ்
Aditi Mangaldas.JPG
2007 ஆம் ஆண்டில் வார்சா வில் அதிதி மங்கள்தாசின் நடனம்
பிறப்பு1960
குஜராத்
பணிநடனக்கலைஞர், நடன அமைப்பாளர்

அதிதி மங்கள்தாஸ் (பிறப்பு: 1960) இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு கதக் நடனக் கலைஞர் மற்றும் நடன அமைப்பாளர் ஆவார். இவா் திறமைமிக்க பாரம்பரிய கதக்.பயிற்சியாளர்களான குமுதினி லகியா மற்றும் பிர்ஜூ மகாராஜ் ஆகியோரின் முன்னாள் மாணவர் ஆவார்.புது தில்லியில் தனது சொந்த நடன நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்பு பல ஆண்டுகளாக ஒரு நடனக் குழுவில் முக்கிய நடனக் கலைஞர்களில் ஒருவராக இருந்தார். திருஸ்டிகான் நடன அறக்கட்டளையின் கலை இயக்குனர் மற்றும் முக்கிய நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் .[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி[தொகு]

1960 இல் பிறந்த அதிதி மங்கல்தாஸ் குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் வளர்க்கப்பட்டார், அங்கு புனித சேவியர் கல்லூரியில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். [4]

அகமதாபாத்தில் உள்ள கடாம்ப் நடன மையத்தில் கதக் நடனக்கலைஞர் குமுதினி லக்கியாவிடம் கதக் நடனப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் அவரது அத்தை புபுல் ஜெயக்கர் ஆலோசனையின் பேரில், கதக் நடன நுட்பங்களைக் கற்றுக் கொள்ள டெல்லிக்கு சென்றார். அங்கே அவர் கதக் கேந்திராவில் கதக் நிபுனத்துவ பயிற்சியாளர் பிர்ஜு மகாராஜின் மாணவி ஆனார். தனது நடனப் பயிற்சியை முடித்த பின்னர், பிர்ஜு மகாராஜின் குழுவின் ஒரு பகுதியாக உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தார்.

கலை வாழ்க்கை[தொகு]

அதிதி மங்கல்தாஸ் குழு

அதிதி இந்தியாவின் முக்கிய நடன விழாக்களில் கதக் நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார் மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சோவியத் நாடுகளிலும் நடைபெற்ற இந்திய விழாக்களிலும் பங்கு பெற்றுள்ளார்.

அதிதி மங்கல்தாஸ் தனி கதக் நடன நிகழ்ச்சிகளை இயக்குவதோடு மட்டுமல்லாமல், பல கதக் குழுக்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பாரம்பரிய மற்றும் நவீன நடன பாணிகளின் கலவையாக இவா் உருவாக்கும் கதக் நடனங்கள் விளங்குகின்றன. கடந்த பல ஆண்டுகளாக சீக் (Cheekh), ஸ்வாகத் விஸ்தார் (Swagat Vistar), தி சவுண்ட் ஆஃப் தி யுனிலர்ஸ் (universe), பிருந்தகிருதி உள்ளிட்ட பல நடனப் படைப்புகளை தயாரித்துள்ளார். கதக் நடனம் தொடர்பான பல பயிற்சிப் பட்டறைகளைய நடத்தியுள்ள அதிதி நடன கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளையும் சமா்ப்பித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில், ஆறு நடனக் கலைஞர்கள் மற்றும் மூன்று இசைக் கலைஞர்களைக் கொண்ட அதிதி மங்கல்தாஸின் நடன நிறுவனம் அமெரிக்காவில் ஆசியச் சங்கம் மூலம் "தண்ணீரின் கால்தடம்"(Footprints on Water.) என்ற நடன நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. [5]

வெளிநாட்டு கலைப்பயணங்கள்[தொகு]

அதிதி பல வெளிநாடுகளுக்கும் சென்று கீழ்கண்டவாறு தனது தனி நடனங்களை நடத்தியுள்ளார்.

மிலாப்ஃபெஸ்ட்” 2014, லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகம், லிவர்பூல், இங்கிலாந்து, 2014

முதல் இசை அகாடமியின் இசை மற்றும் நடன விழா, வாஷிங்டன் டி.சி., 2013

டிசம்பர் நடனம் 2011, ப்ரூஜ், பெல்ஜியம், 2011

பிரீமியர் டென் நோர்ஸ்கே ஓபரா மற்றும் பாலே, டோலோசா, ஸ்பெயின், 2010

“தாகூர் விழா”, டெவோன், இங்கிலாந்து, மே 2011

டான்ஸ் இந்தியா டான்ஸ்” இந்திய விழா, மிலாப்ஃபெஸ்ட், இங்கிலாந்து, 2008

“தெற்காசிய கலை விழா”, அமெரிக்கா 2008

2008 ஆம் ஆண்டு ஹாலந்து, பெல்ஜியம், செருமனி நாடுகள்

கலா ​​உட்சவ், சிங்கப்பூர், 2007

அமெரிக்காவின் கிராஸ்ரோட்ஸில் கதக் 2006


மேற்கோள்கள்[தொகு]

  1. Rajan, Anjana (28 October 2009). "Savouring the present". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/dance/Savouring-the-present/article16889025.ece. பார்த்த நாள்: 6 October 2018. 
  2. Anderson, Zoë (24 August 2004). "Exquisite Indian Dance, Dance Base, Edinburgh". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/theatre-dance/reviews/exquisite-indian-dance-dance-base-edinburgh-557578.html. பார்த்த நாள்: 6 October 2018. 
  3. "FACE TO FACE: Futuristic footwork". The Hindu. 7 March 2004. https://www.thehindu.com/thehindu/mag/2004/03/07/stories/2004030700070500.htm. பார்த்த நாள்: 6 October 2018. 
  4. "Day after Aditi Mangaldas...". 
  5. Rocco, Claudia La (1 October 2005). "An Ancient, Percussive Form That's Stripped of Mime". The New York Times. https://www.nytimes.com/2005/10/01/arts/dance/an-ancient-percussive-form-thats-stripped-of-mime.html. பார்த்த நாள்: 6 October 2018. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_மங்கள்தாஸ்&oldid=2934075" இருந்து மீள்விக்கப்பட்டது