அதிதி பாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிதி பாலன்
பிறப்பு1990
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2017– தற்போது வரை
விருதுகள்2017 அருவி திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான ஆனந்த விகடன் விருது

அதிதி பாலன் (பிறப்பு 1990) ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற அருவி கதாபாத்திரத்தின் மூலமாக புகழ்பெற்றார்.[1][2]

திரை வாழ்க்கை[தொகு]

2017 ஆவது ஆண்டில் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முன்னதாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015 இல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் பெயரிடப்படாத சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

திரைப்பட விபரம்[தொகு]

திரைப்படம் ஆண்டு ஏற்ற வேடம் இயக்குநர் மொழி
என்னை அறிந்தால் 2015 ஹேமானிகாவின் மாணவியாக, பெயர் குறிப்பிடப்படாத சிறு வேடம் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ்
அருவி 2017 அருவி அருண் பிரபு புருசோத்தமன் தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_பாலன்&oldid=2718810" இருந்து மீள்விக்கப்பட்டது