உள்ளடக்கத்துக்குச் செல்

அதிதி சௌகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிதி சௌகான்
சுய தகவல்கள்
பிறந்த நாள்நவம்பர் 20, 1992 (1992-11-20) (அகவை 32)
பிறந்த இடம்சென்னை, தமிழ்நாடு,
இந்தியா
ஆடும் நிலை(கள்)கோல் காப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
சிரி பூமி
எண்61
கல்லூரி வாழ்வழி
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
தில்லி பல்கலைக்கழகம்
2013–2015லௌபரோ பல்கலைக்கழகம்[1]
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2015−2018சௌகான் வெஸ்ட்7(0)
2018−2019இந்தியா ரிஷி
2019−2021கோகுலம் கேரளா மகளிர்
கால்பந்து அணி
2021வெஸ்ட் ஹாம் யுனைடெட்
2022−2023கோகுலம் கேரளா
2025−சிரி பூமி
பன்னாட்டு வாழ்வழி
2008−201219 வயதிற்குட்பட்டோருக்கான
இந்திய மகளிர் சர்வதேச
கால்பந்து அணி
4(0)
2011−இந்திய மகளிர் சர்வதேச
கால்பந்து அணி
57(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

அதிதி சௌகான் (Aditi Chauhan) ஓர் இந்திய கால்பந்து வீரர் ஆவார். அதிதி சௌகான் இந்திய மகளிர் லீக்கில் சிறீபூமி மற்றும் இந்திய தேசிய கால்பந்து அணிக்கு கோல் காப்பாளராக விளையாடி வருகிறார்.[2] இவர் 1992 ஆண்டு, நவம்பர் மாதம், 20ந் தேதி பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அதிதி, இராஜபுத்திரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். தனது ஒன்பதாம் வயதில் தனது குடும்பத்தினருடன் புது தில்லிக்குக் குடிபெயர்ந்தார். இவர் அமித்தி சர்வதேச பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[3] தனது குழந்தை பருவத்தில் கராத்தே மற்றும் கூடைப்பந்து விளையாட்டில் பங்கேற்றார். இளைஞர் மாநில கூடைப்பந்து அணிக்கு அதிதி சௌகான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] கோல்காப்பாளராக கால்பந்து அணிக்கான சோதனை விளையாட்டில் கலந்து கொள்ள இவரது பயிற்சியாளரால் பரிந்துரைக்கப்பட்டார்.[3] இதில் அதிதி சௌகான் வெற்றி பெற்றார். மேலும் தில்லியில் நடைப்பெற்ற 19 வயதுகுட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து அணிக்காக விளையாடினார்.

விளையாட்டு போட்டிகள்

[தொகு]

அதிதி சௌகான் லௌபரோ பல்கலைக்கழகத்தில் பயின்று, விளையாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்[5] மேலும் பல்கலைக்கழகத்தின் கால்பந்து அணியைப் முன்னிலைப்படுத்தினார்.[4] 2015ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் சௌகான் வெஸ்ட் ஹாம் யுனைடெட் லேடீஸ் அணியில் சேர்ந்தார்.[6][7] 2015 ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16ந் தேதி அன்று கோவென்ட்ரி லேடீஸ் அணியுடன் நடந்த போட்டியில் 0–5 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம் இங்கிலாந்தில் போட்டிகளில் விளையாடிய இந்திய தேசிய மகளிர் அணியின் முதல் வீராங்கனை ஆனார்[8] மேலும் ஆங்கில லீக் கால்பந்தில் விளையாடிய முதல் இந்திய பெண்மணியும் இவராவார்.[9] 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா திரும்புவதற்கு முன்பு அதிதி அங்கு இரண்டு பருவங்களைக் கழித்தார்.[10] இவர் இந்தியா ரஷில் சேர்ந்தார்.[11] 2019–20 இந்திய மகளிர் லீக்கிற்காக, அதிதி கோகுலம் கேரள கால்பந்து சங்கத்தில் சேர்ந்தார்.[12]

சர்வதேச போட்டிகள்

[தொகு]

அதிதி சௌகான் 17ம் வயதில் இந்திய 19 வயதுகுட்பட்டோருக்கான மகளிர் அணியுடன் சோதனை விளையட்டுப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இலங்கையில் 2012 மகளிர் சாம்பியன்ஷிப்பைவாகையாளர் போட்டியில் வென்றார். பின்னர், இந்திய மூத்தோர் அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார்.[13]

புள்ளி விபரம்

[தொகு]

சர்வதேச அளவில்

[தொகு]
15 February 2023. அன்று இருந்த தகவல்களின் படி
சர்வதேச புள்ளி விபரம்
வருடம் புள்ளி இலக்கு
2011 1 0
2012 5 0
2013 0 0
2014 3 0
2015 0 0
2016 7 0
2017 2 0
2018 3 0
2019 22 0
2021 8 0
2022 5 0
2023 1 0
Total 57 0

கௌரவங்கள்

[தொகு]

இந்தியா

மகளிர் வாகையாளர் போட்டி: 2012, 2016, 2019

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம்: 2016, 2019

கோகுலம் கேரளா

இந்திய மகளிர் லீக்: 2019–20, 2021–22

மகளிர் சங்க வாகையாளர் போட்டிகள்: மூன்றாம் இடம் 2021

தனிநபர்

ஆசிய கால்பந்து விருதுகள்: கால்பந்து மகளிர் விருது 2015[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Graduate becomes first Asian Woman Footballer of the year in England". lboro.ac.uk (லௌபரோ பல்கலைக்கழகம்). 24 November 2015. Archived from the original on 18 June 2018. Retrieved 13 November 2021.
  2. "Aditi Chauhan". Eurosport. Archived from the original on 24 September 2015. Retrieved 17 August 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 "My Football journey in India". Women's Soccer United. 24 February 2015 இம் மூலத்தில் இருந்து 30 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150530120107/http://www.womenssoccerunited.com/football-journey-india/#more-22972. பார்த்த நாள்: 30 May 2015. 
  4. 4.0 4.1 Kohli, Gauri (29 May 2015). "Meet Aditi Chauhan, goalkeeper of Indian women's national football team". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 30 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150530084232/http://www.hindustantimes.com/careers/meet-aditi-chauhan-goalkeeper-of-indian-women-s-national-football-team/article1-1352163.aspx. பார்த்த நாள்: 30 May 2015. 
  5. "Graduate becomes first Asian Woman Footballer of the year in England". Loughborough University. Archived from the original on 8 December 2015. Retrieved 3 December 2015.
  6. "EPL club West Ham United Ladies signs Indian women's team goalkeeper Aditi Chauhan". India Today. Archived from the original on 18 August 2015. Retrieved 17 August 2015.
  7. "Panthoi Chanu, an heir to Aditi Chauhan in the Indian women's team, joins Australian club Metro United". sportstar.thehindu.com. 26 March 2024. Archived from the original on 26 March 2024. Retrieved 26 March 2024.
  8. Sudhakaran, Sumil (18 August 2015). "Meet Aditi Chauhan, 1st Indian woman footballer to play in UK". Hindustan Times. Archived from the original on 18 August 2015. Retrieved 18 August 2015.
  9. Thomas-Mason, Lee (21 August 2015). "Exclusive: How West Ham's record breaking goalkeeper Aditi Chauhan became an international role model". Metro.co.uk. Archived from the original on 8 December 2015. Retrieved 3 December 2015.
  10. "Goalkeeper Aditi eyes return to Indian team for Asian Games". The Times of India. 7 January 2018. Archived from the original on 30 June 2018. Retrieved 18 June 2018.
  11. Haji, Irfan (25 March 2018). "Aditi Chauhan eyes Indian team comeback with Rush Soccer". The Asian Age. Archived from the original on 18 June 2018. Retrieved 18 June 2018.
  12. "Aditi Chauhan profile". 20 December 2020 இம் மூலத்தில் இருந்து 14 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210114231826/https://footballexpress.in/aditi-chauhan-profile-indian-women-football-number-one-goalkeeper/. 
  13. Deep Singh, Kunwar (2 January 2013). "Indian Football: Exclusive Interview : Aditi Chauhan – "A Lot Can Still Be Done If The Media Pays A Little More Attention"". The Hard Tackle இம் மூலத்தில் இருந்து 30 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150530125222/http://www.thehardtackle.com/2013/thehardtackle-exclusive-interview-aditi-chauhan/. பார்த்த நாள்: 30 May 2015. 
  14. "Aditi Chauhan creates history, becomes first Asian Woman Footballer of the year in England". Deccan Chronicle. 21 November 2015. Archived from the original on 16 June 2018. Retrieved 16 June 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_சௌகான்&oldid=4375979" இலிருந்து மீள்விக்கப்பட்டது