அதிதி கோவத்திரிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிதி கோவத்திரிகர்
Aditi Gowitrikar FilmiTadka.JPG
பிறப்பு மே 21, 1976(1976-05-21)
பன்வேல், மகாராட்டிரம்
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2001-இன்று வரை
துணைவர் டாக்டர் முஃபஸ்ஸல் லக்டாவாலா (1999-2009)

அதிதி கோவத்திரிகர் (மராத்தி: आदिती गोवित्रीकर) (பிறப்பு: மே 21, 1976), அல்லது சாரா முஃபஸ்ஸல் லக்டாவாலா, பிரபல இந்திய மோடலும் ஹிந்தி மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு மிஸஸ் வர்ல்ட்டு பட்டத்தை ஜெயித்தார்.

பிறப்பு[தொகு]

அதிதி பன்வேல், மகாராட்டிரத்தின் ஒரு மராத்தி மொழி பேசும் பிராமண குடும்பத்தில் மே 21, 1976 அன்று பிறந்தார். இவர் மும்பையின் கிராண்ட் மருத்துவ கல்லூரியில் படித்தார்.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

1999 ஆண்டில் அதிதி தன்னுடைய காதலர் டாக்டர் முஃபஸ்ஸல் லக்டாவாலாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் இவர் தன்னுடைய கணவரின் இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார். கடந்த 2009 ஆண்டில் 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_கோவத்திரிகர்&oldid=2268125" இருந்து மீள்விக்கப்பட்டது