அதிசயங்கள் நிறைந்த மனித உடல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அதிசயங்கள் நிறைந்த மனித உடல்
நூல் பெயர்:அதிசயங்கள் நிறைந்த மனித உடல்
ஆசிரியர்(கள்):ஏற்காடு இளங்கோ
வகை:அறிவியல்
காலம்:2014
மொழி:தமிழ்
பக்கங்கள்:128
பதிப்பகர்:சீதை பதிப்பகம்

அதிசயங்கள் நிறைந்த மனித உடல் என்பது ஏற்காடு இளங்கோ எழுதிய நூலாகும். சென்னை சீதை பதிப்பகம் ஏப்பிரல் 2014இல் இந்த நூலை வெளியிட்டது.

பொருளடக்கம்[தொகு]

மனித உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு:ஒவ்வொரு மனிதனும் மனித உடலின் தன்மைகளைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மனிதனின் உடல் அமைப்பு உறுப்புகளின் தன்மை இயல்பு செயல்பாடு ஆகியன பற்றி அறிந்து கொண்டால் நம் உடலை நன்றாகப் பராமரித்து பல ஆண்டுகள் வாழ முடியும். இந்தக் கருத்தை ஆசிரியர் தம் முன்னுரையில் கூறியுள்ளார்.

மனித மூளை மிகவும் வியப்பைத் தரக்கூடிய ஓர் உறுப்பு; மனித மூளை குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மனித உடலின் உறுப்புகள் அனைத்தும் விந்தையானவை.மூளையின் அளவு, எடை நினைவுத் திறன் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். இதயம், இதயத் துடிப்பு, இதய மாற்று சிகிச்சை, செயற்கை இதயம் ஆகியன பற்றியும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.நுரையீரல் சிறு குடல் பெருங்குடல் கல்லீரல் மண்ணீரல் கணையம் சிறுநீரகம் மனித எலும்புகள் தோல் ஆகியன பற்றியும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன.

பற்களைக் காக்க என்ன செய்ய வேண்டும், சிறுநீரகம் சீராகச் செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும், நகம் கால் பாதம் ஆகியவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும் விரிவாக இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளன.

உலகில் நூறு வயதுக்கு மேல் வாழ்பவர்களின் தொகையும் நாடுகள் வாரியாக இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

சான்று[தொகு]

அதிசயம் நிறைந்த மனித உடல்(நூல்) ஆசிரியர்:ஏற்காடு இளங்கோ பதிப்பகம்:சீதை பதிப்பகம்,சென்னை.