அதலை, மதுரை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதலை
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,434
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அ.கு.எ625 018

அதலை என்பது மதுரை மாவட்டத்தில், மதுரை வடக்கு வருவாய் வட்டத்தில் உள்ள ஒரு ஊராகும்[1]. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இவ்வூரில் ஆண்கள் 719 பேர், பெண்கள் 715 பேர் ஆக மொத்தம் 1,434 பேர் வசிக்கின்றனர்[2].

அதலை ஊராட்சி மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும்[3]. இவ்வூராட்சியின் உட்கடை கிராமங்கள்/ வசிப்பிடங்களாக பட்டக்குறிச்சி, கோயில் குருந்தங்குளம் ஆகிய ஊர்கள் உள்ளன[4]. இங்கு உள்ள முக்கிய வழிபாட்டுத் தலம் இராமலிங்கசுவாமி பொது சமாது மடம் . இங்கு சித்திரை மாத குருபூஜை அன்று தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

அதலையில் கிடைத்த ஓலைச்சுவடிகள்[தொகு]

அதலையில் 1800ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட பல ஓலை முறிகள் கிடைத்துள்ளன. தலங்காவல் உரிமை, நில விலை, ஒத்தி, கால்வாய் நீர்ப்பங்கீடு முதலியன சார்ந்த இவ்வோலை ஆவணங்கள் அன்று நிலவிய சாதிக் கட்டுப்பாடுகள், அடிமை முறை போன்ற சமூக பொருளாதார வாழ்நிலைகளைக் காட்டுவனவாக உள்ளன. கணவனை இழந்த பெண்ணும், மனைவியை இழந்த ஆணும் களவு உறவில் ஈடுபட்டதை அறிந்த உறவினர் அவர்களைச் சேர்ந்துவாழ அனுமதிக்கும் அதே நேரத்தில் தண்டத்தொகையும் விதிக்க, அத்தொகையைச் செலுத்த இயலாமல் அவ்விணை ஒரு நிலவுடைமையாளருக்கு அடிமை வேலை செய்யத் தம்மை ஒத்திவைத்துக்கொள்வதைக் காட்டும் ஓலைச்சுவடி அவற்றுள் ஒன்று[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள கிராமங்கள்". Archived from the original on 2015-09-30. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மக்கட்தொகை விவரங்கள்". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மதுரை மேற்கு ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகள்". Archived from the original on 2015-09-30. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "ஊராட்சிகளுட்பட்ட வசிப்பிடங்கள்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. பொ.ராசேந்திரன், சொ.சாந்தலிங்கம் (2013). கல்வெட்டுக்கலை. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை. பக். 208 - 210. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதலை,_மதுரை_மாவட்டம்&oldid=3540950" இலிருந்து மீள்விக்கப்பட்டது