உள்ளடக்கத்துக்குச் செல்

அதர்வசிகா உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதர்வஷிகா உபநிஷத்
சிவன், இக்கட்டுரையில் குறிப்பிடப்படுபவர், இணை பார்வதியுடன்
தேவநாகரிअथर्वशिखा उपनिषद्
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புAtharvaśikhā Upaniṣad
உபநிடத வகைசைவம்
தொடர்பான வேதம்அதர்வண வேதம்
அத்தியாயங்கள்2

அதர்வசிகா உபநிடதம் (Atharvashikha Upanishad) என்பது சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். அதர்வண வேதத்துடன் தொடர்புடைய 31 உபநிடதங்களில் ஒன்றான இது,[1] சைவ உபநிடதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அழிக்கும் கடவுளான சிவனை மையமாகக் கொண்டது. [2] [3]

அதர்வண முனிவர் கூற இந்த உரை இயற்றப்பட்டது, எனவே அவருடைய பெயராலேயெ அவ்வேதம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த உரை ஓம் என்ற மந்திரத்தை சிவனாகவும் பிரம்மமாகவும் விவாதித்து சமன் செய்கிறது. அதன் மந்திரம் மற்றும் தியானத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீகத்தை விளக்குகிறது. [4][5] பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் மற்றும் ஈசுவரனை விட சிவனே உயர்ந்தவர் என்றும் கூறுகிறது.[4]

இந்த உரை அதர்வசிகோபனிஷத் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது 108 முக்திகா நியதியில் தெலுங்கு மொழித் தொகுப்பில் வரிசை 23-இல் பட்டியலிடப்பட்டுள்ளது. [6]

பெயரிடல்

[தொகு]

"அதர்வசிகா" என்ற வார்த்தையின் அர்த்தம் "அதர்வணின் முனை" என்று இந்தியவியலாளர் பால் டியூசன் கூறுகிறார். [4] 'சிகா' என்பது "குறிப்பிட்ட வசனம் அல்லது சூத்திரம்" மற்றும் "தலையில் முடிசூடுதல் அல்லது ஒரு கட்டு" என்றும் பொருள்படும். [7]

காலவரிசை

[தொகு]

இந்து சமயத்தில் ஆன்மாவின் அடையாளமாக சிவபெருமானை வலியுறுத்தும் ஐந்து உபநிடதங்களின் குழுவிலிருந்து இந்த உரை உள்ளது என்று டியூசன் கூறுகிறார்.[8] அதர்வசிகா மற்றும் மற்ற நான்கு உபநிடதங்கள் - அதர்வசிரசு உபநிடதம், நீலருத்ரம், காலாக்னிருத்ரம் மற்றும் [[கைவல்ய உபநிடதம்] - பழமையானது. நீலருத்திரம் மிகவும் பழமையானது மற்றும் ஒப்பீட்டளவில் பிற்கால உபநிடதங்களான (இன்னும் கி.மு.) சுவேதாசுவதர உபநிடதம் , முண்டக உபநிடதம், மகாநாராயண உபநிடதம் போன்றவற்றிக்கும் முன்னது.[8] அதர்வசிகா இந்த குழுவில் உள்ள பிற்கால உபநிடதங்களில் ஒன்றாக இருக்கலாம். மேலும் உருத்ரன், ஈசானன் மற்றும் தொடர்புடைய வேத தெய்வங்களிலிருந்து ஒரு சிவனாக மாறிய இந்து மதத்தின் கட்டமாக இருக்கலாம்.[4]

கட்டமைப்பு

[தொகு]

அதர்வசிகா உபநிடதம் இரண்டு பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 1 ஓம் என்பதன் பொருள் மற்றும் அதன் எழுத்துக்களின் முக்கியத்துவத்தைக் கையாளுகிறது. பிரிவு 2 நான்கு வேதங்களைக் குறிக்கும் ஓம் என்ற வார்த்தையை ஓதுவதன் மூலம் தியானம் செய்வதன் மூலம் பெறப்படும் பலன்களைக் கையாளுகிறது. உரை ஓம் மந்திரம் மற்றும் அதன் பலன்களில் கவனம் செலுத்துகிறது.[9]

இந்த உபநிடதம், அதர்வசிரசு உபநிடதம் போன்ற பிற சைவ உபநிடதங்களிலிருந்து சில உரைகளைப் பின்பற்றி மீண்டும் மீண்டும் சொல்கிறது, அதே நேரத்தில் அது உள்ளடக்கிய சில அம்சங்களை விரிவுபடுத்துகிறது.[4] இருப்பினும், இரண்டு நூல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், அதர்வசிரசு ஒருபோதும் "சிவன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை (மாறாக மகேசுவரனைப் பயன்படுத்துகிறது). அதே சமயம் அதர்வசிகா சிவன் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது.[10]

உள்ளடக்கம்

[தொகு]

தியானத்தின் பொருள்

[தொகு]

முனிவர்களான பிப்பலாத மகரிசி, அங்கரிசர் மற்றும் சனகாதி முனிவர்கள் போன்றவர்கள் அதர்வண மகரிஷியைச் சந்தித்து, "எந்த தியானம் உயர்ந்தது?", "தியானம் எதைக் கொண்டுள்ளது?, யார் தியானம் செய்ய வேண்டும்", "தியானத்தின் பொருள் என்ன? " [11]<என்றெல்லாம் வினவுவதிலிருந்து தொடங்குகிறது.

ஓம் தான் உயர்ந்தது என்று அதர்வணன் பதிலளிக்கிறார்.[11] இந்த உரையானது ஓம் என்ற மந்திரத்தின் அடிப்படை அர்த்தத்தை விளக்குகிறது. மேலும், பர பிரம்மம், உயர்ந்த பிரம்மம், "இறுதி உண்மை" ஆகியவற்றைக் குறிக்கிறது.[11] ஓம் என்ற எழுத்தில் நான்கு எழுத்துக்கள் உள்ளன அவை நான்கு கடவுள்களையும் நான்கு வேத வேதங்களையும் குறிக்கிறது.[11] இது நான்கு தலைகளைக் கொண்டுள்ளது. அவை புனிதமான நெருப்பைக் குறிக்கின்றன.[12]

சான்றுகள்

[தொகு]
  1. Prasoon 2008, ப. 82-83.
  2. Farquhar 1920, ப. 364.
  3. Tinoco 1997, ப. 87.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Deussen 1997, ப. 779.
  5. Farquhar, John Nicol (1920), An outline of the religious literature of India, H. Milford, Oxford university press, p. 364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-2086-X
  6. Deussen 1997, ப. 557.
  7. Monier Williams Sanskrit English Dictionary with Etymology, Oxford University Press, shikha
  8. 8.0 8.1 Deussen 1997, ப. 769 footnote 1.
  9. Keith Johnson (1 April 2006). Om for Every Day. Lulu.com. pp. 8–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4116-8876-6.
  10. Deussen 1997, ப. 769, 779-782.
  11. 11.0 11.1 11.2 11.3 Deussen 1997, ப. 780.
  12. Hattangadi 1999.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதர்வசிகா_உபநிடதம்&oldid=3848000" இலிருந்து மீள்விக்கப்பட்டது