உள்ளடக்கத்துக்குச் செல்

அண்மைத் தகவல் தொடர்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்மைத் தகவல்தொடர்பு வசதி கொண்ட கைபேசியும் சுவரொட்டியும்
ஆஸ்திரிய புகைவண்டி நிலையத்தில் கைபேசி மூலம் பயணச்சீட்டு பெறும் சாதனம்

அண்மைத் தகவல் தொடர்பு அல்லது அ. த. தொ. (ஆங்கிலம்:Near field communication அல்லது NFC) என்பது நுண்ணறி பேசியில் புகுத்தப்பட்டுள்ள புது வசதியாகும்.[1] இரு அண்மைத் தகவல் தொடர்பு வசதியுள்ள நுண்ணறி பேசிகளுக்கு மத்தியிலோ அல்லது அண்மைத் தகவல் தொடர்பு வசதியுடைய சுவரொட்டி, அல்லது பணம் செலுத்தும் இயந்திரம் அல்லது கடிகாரம் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் தகவல் தொடர்பு செய்ய சிறிய "பட்டையக் கருவியின்" (ஆ:tag) வாயிலாக இயலும்.[2]

அ. த. தொ. நெறிமுறையில் தகவல்தொடர்பு நெறிமுறைகளும் தரவு பரிமாற்ற வடிவங்களும் ஐஎசுஓ/ஐஇசி 14443 அடிப்படையாக் கொண்டு இயங்குகிறது.[3]

பயன்கள்

[தொகு]

அ. த. தொ., வானலை அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு இருவழி தகவல் தொழில் நுட்பத்தை இரு தொலை தொடர்பு சாதனங்களுக்கு மத்தியிலோ அல்லது தொடர்பற்ற நுண்ணறி அட்டையுடன் ஒரு வழியாகவோ தொடர்பு கொள்ள முடியும்.[4] சக்தியற்ற அ. த. தொ. பட்டையங்களையும் அ. த. தொ. கருவிகளால் உணரமுடிவதால்,[2] ஒரு வழி தொடர்புகளாக மாற்ற வாய்ப்புள்ளது.

வணிகப் பயன்பாடு

[தொகு]

அ. த. தொ. கருவிகள் கம்பியற்ற பணப் பரிமாற்றம், கடனட்டை மற்றும் பயணச்சீட்டு பரிமாற்றங்கள் உள்ளிட்டவைகளை இலகுவாக செய்ய முடியும். கூகிள் வேலட் நிறுவனமானது தங்களுடைய வாடிக்கையாளர்களின் கடனட்டை மற்றும் இதர தகவல்களை பதிவுசெய்துகொண்டு அ. த. தொ கருவி மூலம் உபயோகிக்க வழிவைகை செய்கிறது.[5] செருமனி,[6] ஆஸ்திரியா,[7] பின்லாந்து[8], நியூசிலாந்து [9] மற்றும் இத்தாலியில்[10] அ. த. தொ. கருவி மூலமாக பொதுமக்கள் போக்குவரத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்தியாவும் அ. த. தொ. மூலமாக திரைப்பட நுழைவுச்சீட்டு வழங்கும் திட்டம் செயல்பட உள்ளது.[11]

அ. த. தொ கருவியின் பயன்பாடுகள்:

  • அணுக்கம்: பழைய முறை அணுக்கங்கள் முற்றிலும் இதில் மாற்றப்பட்டுள்ளன. (தானுந்தை இயக்க மற்றும் கதவுகளை திறக்க)
  • நுழைவுச்சீட்டு: பொது போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் காகிதச் சீட்டுகளை மாற்றுதல்
  • பரிமாற்றம்: பணப் பரிமாற்றங்கள்
  • ஊடாடக்கூடிய உலகம்: சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றம்
  • தரவு பரிமாற்றம்: படிமங்கள், காணொளி, இசை மற்றும் இதர தரவுகளை பரிமாறுதல்
  • சமூகதளம்: சுவரொட்டிகளில் உள்ள பட்டையங்களின் வாயிலாக சமூகதளங்களில் பகிர்தல் மற்றும் பரிந்துரை செய்தல்

திறக்கற்றை மற்றும் ஒய்-ஃபை இணைப்புகள்

[தொகு]

அ. த. தொ. கருவிகள் குறைந்த வேக இணைப்பு வழங்குகிறது.[12] இதன் காரணமாக ஆண்ட்ராய்டு 4.1 முதல் தானியக்கமாக புளூடூத் உள்ளிட்டவைகளை ஆண்ட்ராய்டு பீம் என்னும் பயன்பாடு வாயிலாக சரிசெய்து தகவல் பரிமாற்றம் செய்கிறது.[13] இது ஒய்-ஃபை இணைப்புகளுக்கும் பொருந்தும் .

சமூக வளைதளங்கள்

[தொகு]

அ. த. தொ. கருவிகள் சமூக இணையதளங்களில் படிமங்கள், கோப்புகள், தொடர்புகள் குறிப்பு உள்ளிட்டவைகளை எளிதாக பகிரவும்,[14] அதிகமானோர் விளையாடும் கைபேசி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் வழிவகை செய்கிறது.[15] it is usefull creater/}}</ref>

அடையாள ஆவணங்கள்

[தொகு]

அ. த. தொ. குழுமமானது, அ. த. தொ. கருவிகளுக்கான எண்ணிம சுட்டிகள் மற்றும் கீலாக் எனப்படும் அடையாள அட்டைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகிறது.[12] அ. த. தொ. கருவிகள் குறைந்த தொலைவில் பகிரக்கூடிய வகையிலும், குறியாக்கத்தினை அனுமதிப்பதாலும், முந்தைய வானலை அடையாளக் கருவியை விட சிறப்பாக உள்ளது.

பாதுகாப்பு குறைபாடு

[தொகு]

ஒட்டுக்கேட்டல்

[தொகு]

இவ்வசதி மூலமாக செய்யப்படும் பரிமாற்றத்தை சிறிய அலைக்கம்பத்தின் வாயிலாக கண்டுபிடிக்க இயலும், அதன் காரணமாக அ. த. தொ. கருவியின் தகவல் ஒட்டுக் கேட்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.[16] சுமார் 1மீட்டர் முதல் 10-மீட்டர் தொலைவிலிருந்து இவ்வாறு ஒட்டுக் கேட்க இயலும்.

தரவு மாற்றம்

[தொகு]

தகவல் முடக்க கருவியின் மூலமாக நாம் அனுப்பும் தகவல்களை மாற்றம் செய்யவோ அல்லது அழிக்கவோ முடியும்.

இடைமாற்று தாக்குதல்

[தொகு]

அ. த. தொ. கருவிகள் ஐ.எசு.ஓ / ஐ.இ.சி. 14443 நெறிமுறையை உபயோகம் செய்கிறது, அதனால் இதில் இடைமாற்று தாக்குதல் நடத்துவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.[17][18] இது கணினியில் ஏற்படும் மத்தியதர தாக்குதல்(Man-in-the-middle attack) போன்றதாகும்.[19] அதனுடைய எடுத்துக்காட்டு லிப். அ. த. தொ. நிரல் மூலமாக இரு அ. த. தொ. கருவிகளுக்கு இடையில் இடைமாற்று தாக்குதல் நடக்கின்றது. இது நடக்க அதிக சாத்திய கூறுகள் உள்ளது.[20]

தொலைந்து விட்டால் பிணக்கு

[தொகு]

அ. த. தொ. கருவியை தொலைத்துவிட்டாலோ அல்லது கைபேசியை தொலைத்து விட்டாலோ அது மற்றவரால் எளிதாக உபயோகிக்க முடியும். சரியான கடவுச்சொல் பாதுகாப்பு வசதி உபயோகத்தில் இருந்தால் ஓரளவு தகவல்களை பாதுகாக்க முடியும்.

அ. த. தொ. வசதியுள்ள கைபேசிகள்

[தொகு]

சுமார் 40க்கும் மேற்பட்ட கைபேசிகளில் இவ்வசதியிருந்து வருகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசிப் பதிப்பான ஐ இயங்குதளம் 6-வது பதிப்பில் இவ்வசதி இல்லை.[21] கூகிள் நிறுவனமானது, தன்னுடைய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இவ்வசதியை இணைத்து உள்ளது. அதே போல கூகிள் வேலட் சேவையை இவ்வசதியுடன் இணைத்து பணப் பரிமாற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "What is NFC?". NFC Forum. Archived from the original on 13 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Nikhila (26 October 2011). "NFC — future of wireless communication". Gadgetronica. Archived from the original on 19 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "Technical Specifications". NFC Forum. Archived from the original on 4 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Nosowitz, Dan (1 March 2011). "Everything You Need to Know About Near Field Communication". Popular Science Magazine. Popular Science. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  5. "Google Wallet — where it works". Google. பார்க்கப்பட்ட நாள் 11 December 2011. Current participating retailers include: Macy's, American Eagle, and Subway.
  6. "Germany: Transit Officials Enable Users to Tap or Scan in New Trial". NFC Times. 11 February 2011.
  7. "Austria: 'Rollout' Uses NFC Reader Mode To Sell Tickets and Snacks". NFC Times. 1 March 2011.
  8. Saylor, Michael (2012). The Mobile Wave: How Mobile Intelligence Will Change Everything. Perseus Books/Vanguard Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1593157203. {{cite book}}: More than one of |pages= and |page= specified (help)
  9. "Telecom New Zealand and Westpac test NFC with Auckland Transport". NFC World. 30 April 2012.
  10. "Italy: Telecom Italia and ATM to launch NFC ticketing service in Milan". NFC World. 24 April 2009.
  11. "India: NFC used for ticketing". Financialexpress - June, 2012.
  12. 12.0 12.1 "NFC as Technology Enabler". NFC Forum. Archived from the original on 5 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Android 4.1 APIs". Android Developer Network. பார்க்கப்பட்ட நாள் 19 September 2012.
  14. Pelly, Nick; Hamilton, Jeff (10 May 2011). "How to NFC". Google I/O 2011. Archived from the original on 14 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 14 June 2011.
  15. "NFC will catch on 'like wildfire' says Sundance festival game creator". Near Field Communications World. 20 March 2011.
  16. Hancke, Gerhard P (July 2008). "4th Workshop on RFID Security (RFIDsec'08)". pp. 100–13. Archived from the original on 2012-08-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-26. {{cite web}}: |contribution= ignored (help).
  17. Gerhard P. Hancke:A practical relay attack on ISO/IEC 14443 proximity cards பரணிடப்பட்டது 2012-08-18 at the வந்தவழி இயந்திரம், February 2005.
  18. Timo Kasper et al. 2007
  19. Gerhard P. Hancke, et al.:Confidence in Smart Token Proximity: Relay Attacks Revisited பரணிடப்பட்டது 2012-08-18 at the வந்தவழி இயந்திரம்
  20. Lishoy Francis, et al.:Practical Relay Attack on Contactless Transactions by Using NFC Mobile Phones
  21. Vascellaro, Jessica E. (6 July 2012). "Inside Apple's Go-Slow Approach to Mobile Payments". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120721195740/http://online.wsj.com/article/SB10001424052702304830704577493261395358658.html. பார்த்த நாள்: 22 July 2012. 

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்மைத்_தகவல்_தொடர்பு&oldid=3730822" இலிருந்து மீள்விக்கப்பட்டது