அண்ண மெய்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அண்ண மெய் எனப்படுவது, நாக்கு மேலெழுந்து அதன் உடற்பகுதியால் வல்லண்ணத்தைத் (வாய்க்கூரையின் நடுப்பகுதி) தொடுவதன் மூலம் ஒலிக்கப்படும் மெய்யொலியாகும். நாக்கின் நுனிப்பகுதி வளைந்து அண்ணத்தைத் தொடும்போது உருவாகும் ஒலி வளைநா ஒலியாகும்.
பரவலாகக் காணப்படும் அண்ண மெய், மிகப் பொதுவான உயிர்ப்போலியாகிய j, ஆகும். இது உலகின் மொழிகளில் உள்ள அதிகம் காணப்படும் ஒலிகளில் முதற் பத்துக்குள் உள்ளது. மூக்கொலியான ɲ உம் பொதுவாகக் காணப்படும் ஒலியாகும். இது உலகின் 35 வீதமான மொழிகளில் காணப்படுகின்றது[1].
அனைத்துலக ஒலியெழுத்து முறையில் அடையாளம் காணப்பட்டுள்ள அண்ண மெய்கள் வருமாறு:
IPA | விளக்கம் | எடுத்துக்காட்டு | |||
---|---|---|---|---|---|
மொழி | Orthography | IPA | பொருள் | ||
![]() |
அண்ண மூக்கொலி | பிரெஞ்சு | agneau | [aɲo] | ஆட்டுக்குட்டி |
![]() |
ஒலிப்பற்ற அண்ண வெடிப்பொலி | ஹங்கேரியன் | hattyú | [hɒcːuː] | அன்னம் |
![]() |
ஒலிப்புடை அண்ண வெடிப்பொலி | மார்கி | ɟaɗí | [ɟaɗí] | எருதின் திமில் |
![]() |
ஒலிப்பற்ற அண்ண உரசொலி | ஜெர்மன் | nicht | [nɪçt] | இல்லை |
![]() |
ஒலிப்புடை அண்ண உரசொலி | ஸ்பானியம் | yema | [ʝema] | முட்டை மஞ்சட் கரு |
![]() |
அண்ண உயிர்ப்போலி | ஆங்கிலம் | yes | [jɛs] | ஆம் |
![]() |
பக்க அண்ண உயிர்ப்போலி | இத்தாலியன் | gli | [ʎi] | the (ஆண்பால் பன்மை) |
![]() |
ஒலிப்புடை அண்ண உள்வாங்கொலி | சுவாஹிலி | hujambo | [huʄambo] | hello |
குறிப்புகள்[தொகு]
- ↑ Ian Maddieson (with a chapter contributed by Sandra Ferrari Disner); Patterns of sounds; Cambridge University Press, 1984. ISBN 0-521-26536-3