அண்ணா நகர் கிழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அண்ணா நகர் கிழக்கு சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.

அமைவு[தொகு]

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 7 கி.மீ தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 15 கி.மீ தொலைவிலும் உள்ளன. சென்னை புறநகர் பேருந்து நிலையம் 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அண்ணா நகர் கிழக்கைச் சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், அண்ணா நகர மேற்கு, ஷெனாய் நகர் மற்றும் அயனாவரம் ஆகும்.

அஞ்சல் குறியீட்டு எண்[தொகு]

அண்ணா நகர் கிழக்கின் அஞ்சல் குறியீட்டு எண் 600102.

கல்லூரிகள்[தொகு]

அண்ணா நகர் கிழக்குப் பகுதியில் கீழ்கண்ட கல்லூரிகள் உள்ளன

1) வள்ளியம்மாள் கல்லூரி 2) கந்தசாமி கல்லூரி

பூங்காக்கள்[தொகு]

அண்ணா நகர் கிழக்கில் போகைன்வில்லா பூங்கா உள்ளது. 2010 சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் இந்தப் பூங்காவிலும் நடைபெற்றன."https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_நகர்_கிழக்கு&oldid=2267023" இருந்து மீள்விக்கப்பட்டது