அண்ணாமலை ரெட்டியார்
Jump to navigation
Jump to search
அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்.
அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரநயினார் கோயில் ஊரை அடுத்துள்ள சென்னிக்குளத்தில் பிறந்தார். காவடிச் சிந்து, வீரை தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார். ஊற்றுமலை ஜமீன்தார் இருதயாலய மருதப்ப தேவரால் ஆதரிக்கப்பட்டவர்.
காவடிச்சிந்து பாடல் பகுதி[தொகு]
தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
- செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை
- தேனே! சொல்லு வேனே.
வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
- மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்
- விலகும் படி இலகும்.