அண்டார்க்டிக்கா பெருஞ்சுவர் ஆய்வுக்கூடம்

ஆள்கூறுகள்: 62°12′59″S 58°57′44″W / 62.21639°S 58.96222°W / -62.21639; -58.96222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு செட்லாந்து தீவுகளில் ஜார்ஜ் மன்னர் தீவின் அமைவிடம்
சீனாவின் பெருஞ்சுவர் நிலையம்

பெருஞ்சுவர் ஆய்வுக்கூடம் (Great Wall Station),என்பது அண்டார்க்டிக்காவில் அமைந்துள்ள சீன ஆய்வுகூடம் ஆகும்.[1] இது 1985 பெப்ரவரி 14-ல் திறக்கப்பட்டது.[2][3]

இவ்வாய்வுக்கூடம் ஜார்ஜ் மன்னர் தீவில், சிலிய ஆய்வுகூடத்தில் இருந்து 2.5 கிமீ தூரத்திலும், ஹோன் முனையில் இருந்து 960 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையம் பனிக்கட்டியற்ற பாறையில் கடல் மட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. கோடை காலத்தில் 40 பேர்கள் ஆய்வில் ஈடுபடுவர். குளிர்காலத்தில் இவர்களின் எண்ணிக்கை 14ஆக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]