உள்ளடக்கத்துக்குச் செல்

குறுவழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்டர்மகன் குறுவழுதியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் பொ.ஊ. 575-600
அவனி சூளாமணி பொ.ஊ. 600-625
செழியன் சேந்தன் பொ.ஊ. 625-640
அரிகேசரி பொ.ஊ. 640-670
இரணதீரன் பொ.ஊ. 670-710
பராங்குசன் பொ.ஊ. 710-765
பராந்தகன் பொ.ஊ. 765-790
இரண்டாம் இராசசிம்மன் பொ.ஊ. 790-792
வரகுணன் பொ.ஊ. 792-835
சீவல்லபன் பொ.ஊ. 835-862
வரகுண வர்மன் பொ.ஊ. 862-880
பராந்தகப் பாண்டியன் பொ.ஊ. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் பொ.ஊ. 900-945
அமர புயங்கன் பொ.ஊ. 930-945
சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 945-955
வீரபாண்டியன் பொ.ஊ. 946-966
வீரகேசரி பொ.ஊ. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1145-1150
பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் பொ.ஊ. 1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1175-1180
விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் பொ.ஊ. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1473-1506
குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 1534-1543
பராக்கிரம குலசேகரன் பொ.ஊ. 1543-1552
நெல்வேலி மாறன் பொ.ஊ. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் பொ.ஊ. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் பொ.ஊ. 1588-1612
வரகுணராம பாண்டியன் பொ.ஊ. 1613-1618
தொகு

அண்டர் மகன் குறுவழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.[1] பெரும் பெயர் வழுதியின் இளவல் [2] ஆகலாம்.

இவரது பெயர் குறுவழுதியார் என்றும் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதி [4][5] என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பெயர்களில் 'ஆர்' விகுதி இல்லாத பெயர்கள் இவரை பாண்டிய அரசர் எனக் கொள்ளத் தூண்டுகின்றன.[6]

பருவம் அடைந்த பெண்ணிடம் தோன்றும் அடையாளங்கள் இவை என இவர் கூறும் அடையாளங்கள் மனத்தில் கொள்ளத்தக்கவை.[7]

பெயர் விளக்கம்[தொகு]

அண்டர் என்னும் சொல் குதிரைமீது ஏறி ஆனிரை மேய்த்த இடையரைக் குறிக்கும். இவர் இடையரின் பெருங்குடி மகனாய் விளங்கியவர் என்பது இவரது பெயரால் தெரியவருகிறது.வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று.

குறுவழுதி ஒரு புலவர்[தொகு]

 • மதிப்பு மிக்க பெருமக்களாக விளங்கிய புலவர்கள் [8] பெயர்களில் ‘ஆர்’ விகுயைச் சேர்ப்பது சங்க கால மரபு. இந்தப் புலவர் பெயர் குறுவழுதி என ஆர் விகுதி இல்லாமலும், ஆர் விகுதி சேர்த்தும் குறிக்கப்பட்டுள்ளது.
 • நாடாண்ட பாண்டிய அரசர்கள் [9]
 • இவர் பெயரில் வரும் அண்டர் என்பது இவரை ஆயர் குல பாண்டிய அரசனாக குறிக்கிறது [10]

பாடல் தரும் செய்திகள்[தொகு]

அகநானூறு 150 நெய்தல்

தலைவியின் பருவ மாற்ற அழகைக் கண்டு தாய் தலைமகளை வீட்டுக்குள்ளேயே காப்பாற்றுகிறாள். தலைவனோ மணந்துகொள்ளாமல் விலகி நிற்கிறான். தலைவி தன்னைத் தலைவன் தழுவிய இடத்தைக் காணும்போதெல்லாம் அவர் வரமாட்டாரா என்று எண்ணி ஏங்குகிறாள். - தோழி தலைவனிடம் இப்படிச் சொல்லித் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள்.
தாய் கண்ட பருவ மாற்றம் - பின்னிவிட வேண்டிய அளவில் கூந்தல் நெருக்கமாக உள்ளது. உடலில் பொன்னிறத் தேமல் காணப்படுகிறது. முலை வம்பு என்னும் துணிக் கட்டில் பிதுங்குகிறது.
தோழி கண்ட மாற்றம் - தலைவியின் கண்கள் நீர்த்துறையில் பூத்த நெய்தல் போலவும், நனைந்துகொண்டு பூக்கும் செருந்திப் பூ போலவும், காலையில் கள் துளிக்கும் காவி மலர் போலவும் உள்ளன.

அகநானூறு 228 குறிஞ்சி

அருவி தேன் கூடுகளில் மோதிக்கொண்டு பாறையில் விழும் சுனையில் பகல் முழுவதும் தலைவன் தலைவியோடு சேர்ந்து நீராடிவிட்டு இரவில் செல்வதும் நல்லதுதான். அல்லது இரவில் பகல் போன்ற நிலவில் வரினும் வரலாம். தலைவியின் சிறுகுடி சூரல்முள் வேலியைக் கொண்டது. அங்கே உயர்ந்த பாறையோரத்தில் பூத்திருக்கும் வேங்கை மரம் புலியும் யானையும் போல மருட்டும். - என்கிறாள் தோழி.

குறுந்தொகை 345 நெய்தல்

பகலில் வருவானைத் தோழி இரவில் வா என்கிறாள். கொடி உயர்த்தி மாலையணிந்த தேரை மணல் மேட்டில் ஏற்றிக்கொண்டு வருகிறாய். அது வேண்டாம். இரவில் கடற்கழி ஓரத்தில் தாழைமர ஓரத்தில் அமைதியான இடம் தலைவியின் இருப்பிடம். அங்கு அவள் தழையாடை அணிந்துகொண்டு உனக்காக ஏங்கிக்கொண்டிருப்பாள் - என்கிளாள்.

புறநானூறு 346 காஞ்சி, மகட்பாற் காஞ்சி

பெருங்குடி மகள் ஒருத்தியின் அழகு திருமணம் இல்லாமல் வீணாவதாக இந்தப் பாடல் தெரிவிக்கிறது.
இந்தப் பாடலில் முதலடி சிதைந்துள்ளது. எனினும் அதில் உள்ள பகுதிகள் அவள் மாற்றாந் தாயின் பாலை அருந்தி வளர்ந்தாள் என்பதைப் புலப்படுத்துகின்றன. ஈன்ற தாய் இவளுக்கு வேண்டாதவள் ஆகிவிட்டாளாம். பானவர்கள் போகட்டும் இருப்பவர்களாவது இவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லையாம். இந்த நிலையில் வல்லாண் சிறாஅன் ஒருவன் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு இவளுக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறானாம். இவளது அழகே இவளைப் பாழ் செய்துகொண்டிருக்கிறது - என்கிறது பாடல்.
தொந்தரவு செய்பவன் கல்வியில் பெரியவன் என்று தன்னைப் பீத்திக்கொண்டு திரிபவனாம். வேல் வீரனாம். நல்லவனாம்.
பழந்தமிழ்[தொகு]

இவரது பாடல்களில் சில பழந்தமிழ்ச் சொற்கள் பொருள் உணரும் வகையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

 • 'வல்லான் சிறாஅன்' என இவர் கூறுவது பெருங்குடி மகனை.
 • 'இழும் என் ஒலி' அமைதியைக் குறிக்கும்.
 • பருவம் எய்திவிட்டாய் என்பதனை 'எல்லினை' என்னும் பழஞ்சொல்லால் இவர் குறிப்பிடுகிறார்.

அடிக்குறிப்பு[தொகு]

 1. http://mukkulamannargal.weebly.com/5-2990300929653021296530092994-29902985298529923021296529953021.html
 2. தம்பி
 3. 3.0 3.1 http://www.tamilvu.org/library/l1270/html/l1270ind.htm
 4. http://www.tamilvu.org/library/l1220/html/l1220ind.htm
 5. http://www.tamilvu.org/library/l1280/html/l1280ind.htm
 6. http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=610
 7. பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
  ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
  கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
  எல்லினை பெரிது (அகநானூறு 150)
 8. பாண்டியன் ஏனாதி திருக்கண்ணனார் முதலானோர்
  • பாண்டியன் அறிவுடை நம்பி
  • பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
  • பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
  • பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
  • பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி
  • பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன்
  • பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் மாறன் வழுதி
  • பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
  • பாண்டியன் நெடுஞ்செழியன்
  • பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
  • பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
  • பூதபாண்டியன்
 9. மயிலை சீனி. வேங்கடசாமி (2007). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். p. 180.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுவழுதி&oldid=2564807" இலிருந்து மீள்விக்கப்பட்டது