அணையாடை
அணையாடை (diaper, nappy) அல்லது அரைக்கச்சை என்பது எவரும் அறியாவண்ணம் சிறுநீர் கழுக்கவும் மலம் கழிக்கவும் கூடிய ஓர் உள்ளாடையாகும். இவை கறைபட்ட பிறகு மாற்றப்பட வேண்டும்; பொதுவாக வேறொருவர், பெற்றோரோ செவிலியரோ மாற்றுவர். இவ்வாறு காலத்தில் மாற்றப்படாவிட்டால் அணையாடை அழற்சி ஏற்பட ஏதுவாகும்.[1][2][3]

அணையாடை வரலாறு[தொகு]
அணையாடைகள் மனிதர்களால் வரலாற்றுக்காலங்களிலிருந்தே அணியப்பட்டு வந்திருக்கின்றன. இவை துணிகளாலோ களையக்கூடியப் பொருட்களாலோ தயாரிக்கப்பட்டு வந்தன. துணியாலான அணையாடைகள் பலமுறை துவைத்து அணியக்கூடியதாக இருந்தன.[4] களையக்கூடிய அணையாடைகள் உறிஞ்சுகின்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டு ஒருமுறை பயன்படுத்தியபிறகு எறியக்கூடியனவாக இருந்தன. எளிமை, தூய்நலம், செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு காரணங்களால் இவற்றில் எதனைப் பயன்படுத்துவது என்பது குறித்த நீண்ட சர்ச்சை எழுந்துள்ளது.
பயன்பாடு[தொகு]
அணையாடைகள் முதன்மையாக கழிவறை செல்லப் பழக்கப்படாத அல்லது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால் அணியப்படுகின்றன. இருப்பினும் சிறுநீர் கசிவுள்ள அல்லது அண்மையில் கழிவறைகள் இல்லாத நிலையில் பெரியவர்களும் அணியக்கூடிய பெரியோர் அணையாடைகளும் தயாரிக்கப்படுகின்றன. முதியோர்கள், உடலியங்கியல் அல்லது மனநலக் கோளாறுகள் உள்ளவர்கள், மிகவும் கடுமையான சூழலில் பணிபுரியும் வான்வெளி வீரர்கள் போன்றோர் பெரியோருக்கான அணையாடைகளை பயன்படுத்துகின்றனர். இவை பெரும்பாலும் தவிர்க்க முடியாத நிலையிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்[தொகு]
- ↑ "Diaper". Webster's Dictionary (The University of Chicago Department of Romance Languages and Literature) இம் மூலத்தில் இருந்து May 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130525222029/http://machaut.uchicago.edu/?action=search&resource=Webster%27s&word=Diaper.
- ↑ "nappy"..
- ↑ "Diaper". eytomonline.com இம் மூலத்தில் இருந்து 14 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211214011607/https://www.etymonline.com/word/diaper.
- ↑ Leah S. Leverich (August 4, 2011). "Improved containment and convenience in a double gusset cloth diaper: Method of manufacture". http://www.ip.com/IPCOM/000209419.