அணு மருத்துவம், புற்றுநோயியல் மற்றும் கதிரியக்கச் சிகிச்சை நிறுவனம்
அணு மருத்துவம், புற்றுநோயியல் மற்றும் கதிரியக்கச் சிகிச்சை நிறுவனம் (Institute of Nuclear Medicine, Oncology and Radiotherapy) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள அப்போட்டாபாத்து நகரத்தில் இருக்கும் அயூப் கற்பித்தல் மருத்துவமனையில் உள்ளது. புற்றுநோய் நோயாளிகளுக்கு அணு தொழில்நுட்பத்தின் மூலம் புற்று நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றை வழங்கும் ஒரு சிறப்பு மருத்துவ ஆராய்ச்சி மையமாக இந்நிறுவனம் அறியப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பாக்கித்தான் அணுசக்தி ஆணையம் இயக்கும் 18 புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும்.[1] பாக்கித்தான் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு பாக்கித்தான் அணுசக்தி ஆணையம் இந்நிறுவனத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது. இங்கு நோயாளிகள் அதிநவீன நோயறிதல் மற்றும் சிகிச்சையை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ பெறுகிறார்கள். மேலும் இந்நிறுவத்தினர் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு திட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cancer Hospitals". Paec.gov.pk. Archived from the original on 2023-06-06. Retrieved 2022-09-04.
- ↑ "Medical Centers in Pakistan". Paec.gov.pk. Retrieved 2022-09-04.
வெளி இணைப்புகள்
[தொகு]- Pakistan Atomic Energy Commission பரணிடப்பட்டது 2021-03-06 at the வந்தவழி இயந்திரம்
- Ayub Medical College
- Ayub Alumni Website பரணிடப்பட்டது 2008-08-30 at the வந்தவழி இயந்திரம்