அணு மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அணு சக்தியை, ஆக்க வேலைக்கும், நோய் போக்கி, உயிர்காக்கும் முறைக்கும் பயன்படுத்த வேண்டுமென்ற, அறிவியலின் பெரும் முயற்சிதான் அணு மருத்துவம் என்பது.
நோயைக் கண்டறியவும், நோயைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் எளிதானதும் விரைவாகவும் கணிக்கும் முறையும் தான் அணுசக்தி மருத்துவம்.
ஊடுகதிர் சக்தி உள்ள, இயற்கையாக உள்ள, நீண்ட நாள் நிலைக்கும் சக்தி உள்ள ரேடியம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நீண்ட வாழ்நாள் உள்ள கோபால்டு-60 சோடியம் என்ற அணு மருந்துகளை இயந்திரத்தில் வைத்துப் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் கதிர் வீச்சு சிகிச்சை என்று பெயர்.
சிறுநீரகம் செயலிழந்தால் அதை அறிய ஹிப்புரான் அயோடின் 131 (-131) என்ற அணு ஆற்றல் மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்திச் சிறுநீரகங்களின் செயல்திறனை ஓரிடத்தனிமச் சிறுநீரக வரைபடம் மூலம் இருபது நிமிடங்களில் கணித்துவிடலாம். இதன் மூலம் எந்தச் சிறுநீரகம் செயல் இழந்துள்ளது என்பதை அறிந்து உடனடிச் சிகிச்சை மூலம் நோயைக் குணப்படுத்தலாம்.

அணு மருத்துவத் துறைகள்[தொகு]

அணு மருத்துவத்தின் மூலம் நீரிழிவு நோய், குடற்புண், அதி இரத்த அழுத்தம், உடல் வளர்ச்சிக் குறை, உடல் அதித வளர்ச்சி ஆகிய நோய்க்கான மருந்து அளவை எளிதில் கணிக்கலாம். இவ்வாறு நவீன மருத்துவச் சிகிச்சைகளில் அணு மருத்துவம் இன்றிமையாத ஒன்றாக அமைந்துள்ளது.

மேற்கோள்[தொகு]

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண் 697. [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணு_மருத்துவம்&oldid=3170647" இருந்து மீள்விக்கப்பட்டது