அணுசக்திப் பொறுப்புக் குழு, ஐக்கிய அமெரிக்க நாடுகள

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அணுசக்திப் பொறுப்புக் குழு (United States Atomic Energy Commission) என்பது ஐக்கிய அமரிக்க நாட்டின் அணுசக்திப் பொறுப்புக் குழு, கூட்டிணைப்பால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது அமெரிக்கக் காங்கிரசின் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. குடியரசுத்தலைவார் ஹரி எஸ்.டுருமேன் இச்சட்டத்தில் கையொப்பமிட்டார் (ஆகஸ்டு 1, 1946) இச்சட்டம் அணுக்கருப் படைக்கலங்களை (Nuclear Weapons) உருவாக்கி உற்பத்தி செய்தலைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இச்சட்டம் அணுசக்தியினை அமைதிப் பணிகளுக்காகப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகள் பற்றிச் சுட்டிக்காட்டுகின்றது. 1946 ஆம் ஆண்டு டிசம்பா; 31 ஆம் நாள், அணுசக்திப் பொறுப்புக் குழுவினைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கியநாட்டின் படைப்பிரிவுப் பொறிஞர்களின், மேன்ஹாட்டன் பொறியியற் பிரிவு ( Manhattan Engineer District) இரண்டாவது உலகப்போரின் போது, அணுகுண்டை உருவாக்கியது.

1974 ஆம் ஆண்டின் சக்தி மறு சீரமைப்புச் சட்டப்படி (Energy Reorganiztion Act.) அணு சக்திப் பொறுப்புக்குழு கலைக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு அதன் செயல்களைச் சக்தி ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நிருவாகத்தினிடமும், (Energy Research and Development Administration ) அணுக்கருக் கட்டுப்பாட்டுக் குழுவினிடமும் (Nuclear Regulatory Commisson) மாற்றம் செய்யப்பட்டது.

நூலோதி=[தொகு]

The New Encylopaedia Britannica Micro, Vol I, 15th Edition, 1982.

மேற்கோள்[தொகு]

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு அறிவியல் களஞ்சியம் தொகுதி 1,பக்கம் எண்:675