அணுக் கற்றைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அணுக்கற்றை[தொகு]

வெற்றிடத்தில் ஒரே திசையில் பாயும் மின்னூட்டமில்லாத அணுத்தாரைகளை அணுக்கற்றை என்பர். இக்கற்றைகளில் உள்ள அணுக்கள் ஒன்றோடொன்று இடையீட்டுவினை புரியாத வினையில் அமைந்துள்ளன. ஆனால் மின்புலமோ காந்த புலமோ செலுத்தி அணுவை ஆராயலாம். அணுக்கற்றை ஆய்வு முறையில் மூலக்கூற்றுக் கற்றையை ஒத்தது. வரலாற்றுக் காரணங்களால் இரண்டையும் மூலக்கூற்றுக் கற்றை என்றே வழங்குவர்.

அணுக்கற்றை முறை[தொகு]

அணுக்கற்றை முறை அணு ஆற்றல் மட்டங்களை பற்றிய சரியான நிறமாலைச் செய்திகளைத் தருகிறது. இம்முறையினால் மின்துகள்களுக்கு இடையில் உள்ள இடையீட்டு விளைவையும், மின்துகள் அணுக்கரு ஆகியவற்றிடையில் உள்ள இடையீட்டு விளைவையும் அணுவகத்துள் உள்ள உள் கூறுகளும் புறப்புலமொன்றுடன் புரியும் இடையீட்டு வினையையும் மிக ஆழமாக ஆயலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  • Samuel glasstone ,source book on atomic enerjy afiliated east-west press pvt,ltd,newdelhi,1979.
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அறிவியல் கலைக்களஞ்சியம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்_கற்றைகள்&oldid=3170653" இருந்து மீள்விக்கப்பட்டது