அணுக்க வில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்க வில்லை (zoom lens) உருப்பெருக்கத்தை மாற்ற உதவும் வில்லைத் தொகுதி. இதில் பொருளின் உருவம் ஏறக்குறைய ஒரே நிலைத்த தளத்தில் தான் அமைந்திருக்கும். இதில் வில்லைகளின் இருப்பிடங்களை மாற்றுவதனால் குவியத் தொலைவை மாற்றி உருப்பெருக்கத்தின் அளவை மாற்றலாம். மாற்றப்படும் குவியத்தொலைவின் அளவிற்கேற்றபடி நேரியல்பு நிலையில் துளைத் தகட்டைத் (Diaphragm) திறந்தால் வில்லைத்தொகுதியின் மொத்தச்சார்பு துளைப்பரப்பு (Relative aperture) மாறாமல் இருக்கும். இந்த வில்லைப் பெயர்ச்சிகளின் போது உண்டாகும் உருவத்தில் ஏற்படும் பிழை மிகக் குறைவாக உள்ளபடி இந்த வில்லையமைப்பை வடிவமைக்க வேண்டும். அதாவது இந்த அணுகல் (Zooming) முறையின் தொடக்கத்திலும் இறுதியிலுமாவது உருவத்தில் ஏற்படும் பிழை மிகப் பெரிதாகாமல் இருக்கும்படியும் வில்லைத் தொகுதியை அமைக்க வேண்டும். அணுக்க வில்லை வடிவமைக்கும் தொடக்க காலங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட வில்லைகள் இதில் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் நான்கே வில்லைகளைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக அணுக்கத் தகவு (Zoom ratio) 3:1 ஆக இருக்கும். இதை 4:1 ஆக மாற்ற முடியும். இந்த அணுக்கல் விளைவைப் (Zooming effect) பெற ஒற்றை நிற இயங்குபட்டங்களைச் சில நேரங்களில் பயன்படுத்துவது உண்டு.

மேற் கோள்கள்[தொகு]

  1. Samuel Glasstone, Source Book on Atomic Energy Affiliated East - West Press Pvt. Lit. New Delhi, 1979.
  2. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் களஞ்சியம், தொகுதி ஒன்று, பக்க எண் 663.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்க_வில்லை&oldid=3452427" இருந்து மீள்விக்கப்பட்டது