அணுக்கரு வெடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்கரு வெடிப்பு என்பது , மிக வேகமான அணுக்கரு வினையிலிருந்து வெளிவரும் வேகமான ஆற்றல் வெளிப்பாடு ஆகும். அணுக்கரு வினையானது அனுக்கரு பிளவு, அணுக்கரு இணைவு அல்லது இவை இரண்டும் கலந்த பலகட்ட விழுத்தொடர் கலவை மூலம் நடைபெறுகிறது. அணுக்கரு இணைவை அடிப்படையாக கொண்ட அனைத்து ஆயுதங்களிலும் அணுக்கரு இணைவை ஏற்படுத்த அணுக்கரு பிளவு தூண்டுதலாக பயன்படுத்தப்படுகிறது. முழுமையான அணுக்கரு இணைவு ஆயுதமானது, இன்றளவும் அனுமான அளவிலேயே உள்ளது. வளிமண்டல அணுக்கரு வெடிப்புகளானது காளான் மேகங்களுடன் தொடர்புடையது, என்றாலும் காளான் மேகங்களை பெரிய வேதியியல் வெடிப்புகளால் கூட ஏற்படுத்த முடியும். இந்த காளான் மேகங்கள் இல்லாமல் ,வளிமண்டல அணுக்கரு வெடிப்பு சாத்தியமாகும். அணுக்கரு வெடிப்பானது கதிர்வீச்சு மற்றும் கதிரியக்க குப்பைகளை வெளிவிடும்.

அணுக்கரு ஆயுதங்கள்[தொகு]

அமெரிக்கா அணுக்கரு ஆயுதத்தை இதுவரை இரண்டு முறை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானுக்கு எதிராக அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகளுக்கு லிட்டில் பாய்(சின்ன பையன்), ஃபாட் மான்(குண்டு ஆண்) என அழைத்தனர்.

லிட்டில் பாய்[தொகு]

முதல் குண்டு(யுரேனியம்-துப்பாக்கி வகை) 6 ஆகச்ட் 1945 ஆம் ஆண்டு, காலை நேரத்தில் அமெரிக்க விமானப்படையால் ஹிரோசிமா நகரத்தில் வீசப்பட்டது.அதில் 20,000 ஜப்பான் போர்வீரர்கள், 20,000 கொரிய அடிமைக் கூலிகள் உட்பட 70,000 மக்கள் கொள்ளப்பட்டனர்.

ஃபாட் மான்[தொகு]

மூன்று நாட்களுக்கு பிறகு இரண்டாவது குண்டு (புளுட்டோனிய- உள்நோக்கி வெடிக்கும் வகை) நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது. இதில் 27,778 ஆயுத தளவாட அலுவலர்கள், 2,000 கொரிய அடிமைக் கூலிகள், மற்றும் 150 ஜப்பான் போர்வீரர்கள் உள்பட 39,000 பேர் கொள்ளப்பட்டனர்.

அணுக்கரு வெடிப்பின் விளைவுகள்[தொகு]

அனுக்கரு வெடிப்பு மிக பரந்த நிலப்பரப்பை, நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மனித குலத்திற்கு பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தும். கதிரியக்க மாசானது மரபணு பிறழ்வு மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது. இப்பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கு தொடரும். மற்ற வெடிகுணுகளை போல அல்லாமல், அணுக்கரு குண்டுகள் வெடிக்கதொடங்கினால், நிற்காமல் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கும். வெடிப்பின் மையப்பகுதியிலிருந்து வரும் அணுக்கரு கதிர்வீச்சு மேகம், வெப்ப அலைகள் பரவுவது நின்ற பிறகும் கூட, உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_வெடிப்பு&oldid=2373825" இருந்து மீள்விக்கப்பட்டது