அணுக்கரு உலை கருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணு உலை ஒன்றின் கருவத்திற்கான எடுத்துக்காட்டாக விவிஈஆர் வடிவம் .

அணுக்கரு உலை கருவம் (nuclear reactor core) என்று அணுக்கரு உலை ஒன்றில் அணு எரிபொருள் கூறுகள் வைக்கப்பட்டு அணுக்கருப் பிளவு நிகழ்கின்ற பகுதி அழைக்கப்படுகின்றது.

விவரணம்[தொகு]

அணுக்கரு உலை கருவம் (பல நேரங்களில் சுருக்கமாக உலை கருவம் அல்லது கருவம்) என்றழைக்கப்படும் பகுதியிலேயே குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்ற அணு எரிபொருள், அவற்றின் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் அமைந்து அணுக்கருப் பிளவு நிகழ்கின்றது. எனவே இதுவே மிகுந்த வெப்பமானப் பகுதியாகும்.

நீர்-மட்டுப்படுத்திய உலைகள்[தொகு]

ஓர் வழமையான அழுத்த நீர் அணுஉலை அல்லது கொதிநீர் அணுஉலைகளின் கருவத்தில் ஓர் பெரிய எழுதுகோல் சுற்றளவுள்ள பல நூறு அணு எரிபொருள் குச்சிகள், ஒவ்வொன்றும் 12 அடிகள் (3.7 m) நீளமுடையவை, நூறு நூறாக கட்டப்பட்டு இருக்கும். இவையே "எரிபொருள் சேர்க்கைகள்" எனப்படுகின்றன. ஒவ்வொரு குச்சிக்குள்ளும் யுரேனிய அல்லது பெரும்பாலும் யுரேனியம் ஆக்சைடு குறுணைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். மேலும் இதற்குள் நியூத்திரன்களைப் பிடிக்கும் போரான் அல்லது ஹாஃப்னீயம் அல்லது காட்மியம் போன்றவற்றின் குருணைகளால் நிரப்பப்பட்ட கட்டுப்பாடு குச்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுப்பாடு குச்சிகள் இறக்கப்படும்போது அவை நியூத்திரன்களை உள்வாங்கிக் கொண்டு மேற்கொண்டு அணுக்கரு தொடர்வினையில் பங்கேற்பதைத் தடுக்கின்றன. மாறாக இவை உயர்த்தப்படும்போது (விலக்கிக் கொள்ளப்படும்போது_ பல நியூத்திரன்கள் பிளவுபடக்கூடிய யுரேனியம்-235 (U-235) அல்லது புளுடோனியம்-239 (Pu-239) அணுக்கருனியைத் தாக்கி அணுக்கருத் தொடர்வினை தீவிரமடைகிறது.

இந்த அணுக்கரு பிளவினால் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்றும் நீர் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் செயலாற்றுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • Nuclear Reactor Analysis, John Wiley & Sons Canada, Ltd.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_உலை_கருவம்&oldid=2266929" இருந்து மீள்விக்கப்பட்டது