அணுக்கருப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணுக்கருப் பொறியியல் (Nuclear engineering) என்பது அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கருப் பிணைவு அல்லது அணுவக நிகழ்வுகள் சார்ந்த பயன்பாடுகளைப் பயிலும் பொறியியல் புலமாகும். இது அணுக்கரு இயற்பியல் நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. இதன் அணுக்கருப் பிளவு உட்புலத்தில், அணுக்கரு உலைகள், அணுமின் நிலையங்கள், அணுக்கருப் படைக்கலங்கள் ஆகியவற்றின் அமைப்புகளும் உறுப்புகளும் சார்ந்த வடிவமைப்பு, ஊடாட்டம், இயக்கம் பேணுதல் பயிலப்படுகிறது. இதில் அணுக்கரு மருத்துவமும் கதிர்வீச்சுப் பயன்பாடுகளும் அணுக்கருப் பாதுகாப்பும் வெப்பப் பரவலும் அணுக்கரு எரிபொருள் சுழற்சியும் உயர்நிலைக் கதிரியக்கக் கழிப்பொருள் மேலாண்மயும் பாதுகாப்பான முறையில் அணுக்கருக் கழிவுகளின் தேக்கமும் அணுக்கருப் பயன்பாட்டு தவிர்ப்பும் அடங்கும்.

தொழில்சார் புலமைப் பரப்புகள்[தொகு]

அமெரிக்கா தன் மொத்த மின்திறனில் அணுமின் நிலையங்கள் வாயிலாக 18% மின்திறனைப் பெறுகிறது. அணுக்கருப் பொறியாளர்கள் அணுக்கரு மின்தொழில் துறையிலோ தேசிய ஆற்றல் ஆய்வகங்களிலோ பணியாற்றுகின்றனர். இத்தொழில் துறையின் நடப்பு ஆராய்ச்சி சிக்கனமான அணுக்கருத் தவிர்ப்பை தடுக்கவல்ல பாதுகாப்புக் கூறுபடுகள் வாய்ந்த அணுக்கரு உலைகளை வடிவமைப்பதில் வழிநடத்தப்படுகிறது. அரசும் தனியாரும் ஒரே பகுதியிலோ வேறு சில பகுதிகளாகிய அணுக்கரு எரிபொருள்கள், எரிபொருள் சுழற்சி, நான்காம் தலைமுறை உலைகளை வடிவமைத்தல், அணுக்கரு ஆயுதங்களை வடிவமைத்தல் ஆகியவற்றிலோ அவற்றின் பேணுதலிலோ ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் அணுக்கருப் பொறியாளர்கள் தென்கரோலினாவில் உள்ள அணுக்கரு மின்திறன் பள்ளியில் நாவாயியல் அணுக்கரு பயிற்சித் திட்டத்தின்கீழ் முதன்மையான பயிற்சியைப் பெறுகின்றனர். அணுக்கருப் பொறியியலுக்கான வேலைவாய்ப்பு, நடப்பு பணியாளர்கள் ஓய்வு பெறப்பெற கிடைக்கிறது, இவர்கள் மின்நிலைய பாதுகாப்பு மேம்படுத்துவதிலும் நிலையப் பேணுதலிலும் அணுக்கரு மருத்துவத் துறையிலும் பணிமேற்கொள்கின்றனர்.[1]

அணுக்கரு மருத்துவமும் மருத்துவ இயற்பியலும்[தொகு]

மருத்துவ இயற்பியல் அணுக்கரு மருத்துவத்துக்கான முதன்மையான புலமாகும்; இதன் உட்புலங்களாக அணுக்கரு மருத்துவம், கதிர்வீச்சுப் பண்டுவம், நலவாழ்வு இயற்பியல், நோய்நாடல் படிமம் எடுத்தல் ஆகியன அமைகின்றன.[2] உயர்புலமையும் நுட்ப இயக்கமும் தேவைப்படும் நோய்நாடல் கருவிகளாக, x-கதிர் எந்திரம், கா ஒ ப-MRI and நே உ மு-PET அலகிடுவான்கள் போன்ற பலகருவிகள் மிகப் புதிய மருத்துவ ஏந்துகளாக அமைவதோடு இவை நுட்பமான மருத்துவ அணுகுமுறைகளை திறம்பட தேர்வு செய்யவும் உதவுகின்றன.

அணுக்கருப் பொருள்கள்[தொகு]

அணுக்கருப் பொருள்களின் ஆராய்ச்சி இரு முதன்மைப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது; அவை அணுக்கரு எரிபொருள்கள் ஆய்வு அணுக்கருப் பொருள்களின் கதிர்வீச்சுவழித் தூண்டல் மாற்றம் அல்லது திருத்த ஆய்வு என்பனவாகும். அணுக்கருப் பொருள்களின் மேம்பாடு அணுக்கரு உலைகளின் திறமையைக் கூட்ட, தேவையாகும். கதிர்வீச்சு விளைவுகளின் ஆய்வு பல நோக்கங்களைக் கொண்டதாகும்.இது உலை உறுப்புகளின் கட்டமைப்பு மற்ரங்களை ஆயவும் மின்ன்னுக் (ion) மின்னணுக் கற்றையால் அல்லது துகள்முடுக்கிகளால் பொன்மங்களின் (உலோகங்களின்) மீநுண் திருத்தம் செய்யவும் உதவுகிறது.

கதிர்வீச்சு அளவீடும் பாதுகாப்பும்[தொகு]

கதிர்வீச்சு அளவீடு கதிர்வீச்சுப் பாதுகாப்பு அறிவியலுக்கும் நடைமுறைக்கும் அடிப்படையானது ஆகும். இது சிலவேளைகளில் கதிரியல் பாதுகாப்பு எனவும் வழங்குகிறது. கதிர்வீச்சுப் பாதுகாப்பு என்பது மக்களையும் சுற்றுச்சூழலையும் கட்டுபாடற்ற கதிர்வீச்சின் விளைவுகளில் இருந்து காப்பாற்றுதல் ஆகும்.

அணுக்கருப் பொறியாளர்களும் கதிரியல் வல்லுனர்களும் மேலும் மேம்பட்ட மின்னணுவாக்க்க் கதிர்காணிகளை உருவாக்குவதிலும் இந்த மேம்பாடுகளைப் பயன்ப்டுத்தி படிம மாக்கத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் ஆர்வமாக உள்ளனர்; குறிப்பாக, இவர்களது ஆர்வம் மேம்பட்ட காணிகளை வடிவமைத்தல், அவற்றை கட்டியமைத்துப் பகுப்பாய்வு செய்தல், அடிப்படை அணு, அணுக்கரு அளபுருக்களை அளத்தல், கதிர்வீச்சுவழி படிம மாக்க அமைப்புகளை உருவாக்கல் ஆகியவற்றில் குவிந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nuclear Engineers – Job Outlook" in Occupational Outlook Handbook, 2014–15. Bureau of Labor Statistics, U.S. Department of Labor
  2. Medical Physicist. American Association of Physicists in Medicine

மேலும் படிக்க[தொகு]

  • Gowing, Margaret. Britain and Atomic Energy, 1939–1945 (1964).
  • Gowing, Margaret, and Lorna Arnold. Independence and Deterrence: Britain and Atomic Energy, Vol. I: Policy Making, 1945–52; Vol. II: Policy Execution, 1945–52 (London, 1974)
  • Johnston, Sean F. "Creating a Canadian Profession: The Nuclear Engineer, 1940–68," Canadian Journal of History, Winter 2009, Vol. 44 Issue 3, pp 435–466
  • Johnston, Sean F. "Implanting a discipline: the academic trajectory of nuclear engineering in the USA and UK," Minerva, 47 (2009), pp. 51–73
  • Ash, Milton, "Nuclear reactor kinetics", McGraw-Hill, (1965)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கருப்_பொறியியல்&oldid=3579265" இலிருந்து மீள்விக்கப்பட்டது