அணு உலை வெப்பமாற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அணுஉலை வெப்பமாற்றி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அணுக்கரு உலை வெப்பமாற்றிகள்
வெப்பமாற்றி உருகுநிலை கொதிநிலை
மென்னீர் 155 பார் அழுத்ததில் 345 °C
NaK நல்லுருகல் -11 °C 785 °C
சோடியம் 97.72 °C 883 °C
FLiNaK 454 °C 1570 °C
FLiBe 459 °C 1430 °C
ஈயம் 327.46 °C 1749 °C
ஈயம்-பிஸ்மத் நல்லுருகல் 123.5 °C 1670 °C

அணுக்கரு உலை வெப்பமாற்றி அல்லது அணுக்கரு உலை குளிர்வி (nuclear reactor coolant) என்பது அணுக்கரு உலை ஒன்றில் சூடாகின்ற அணு உலை கருவத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றி மின்னாக்கிகளுக்கும் வெளிச்சூழலுக்கும் மாற்றுகின்ற ஓர் குளிர்வி ஆகும். பலமுறை இரு குளிர்வி சுற்றுக்கள், ஒரு (முதன்மை) குளிர்விச் சுற்று அணு உலையின் குறுங்கால கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதால், பயன்படுத்தப்படுகின்றன.

நீர்[தொகு]

தற்போது இயங்கும் பெரும்பாலான அணு மின் நிலையங்கள் சாதாரண நீரை உயர் அழுத்தத்தில் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தும் மென்னீர் அணு உலைகளாகும். மென்னீர் அணு உலைகளில் மூன்றில் ஒன்றான கொதிநீர் அணு உலைகளில் முதன்மை குளிர்வி உலைக்குள் நீராவியாக முகநிலை மாற்றமடைகிறது. ஏனைய 2/3 அணு உலைகள் இன்னும் உயர் அழுத்தத்தில் இயங்கும் அழுத்த நீர் அணுஉலைகளாகும்.

தற்போதைய அணு உலைகளில் நீர்மநிலைக்கும் வளிம நிலைக்குமான வேறுபாடு மறையும், 374 °C உம் 218 பாரும் அண்மித்த மாறுநிலைப் புள்ளிக்குக் கீழாக இயங்குகின்றன. இது வெப்பப் பயனுறுவினையைக் மட்டுப்படுத்துகிறது; வருங்கால உய்யமிகை நீர் அணு உலைகளில் இந்தப் புள்ளிக்கு மேலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கனநீர் அணு உலைகளில் சாதரண நீரைப் போன்ற பண்புகளுடைய, ஆனால் மிகக் குறைந்த நியூத்திரன் பிடித்தலுடையதால் இன்னும் சிறப்பாக மட்டுப்படுத்தும் துத்தேரியம் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணு_உலை_வெப்பமாற்றி&oldid=2266919" இருந்து மீள்விக்கப்பட்டது