உள்ளடக்கத்துக்குச் செல்

அணிமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணிமூர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள சிற்றூராகும். [1] திருச்செங்கோட்டிலிருந்து கொக்கராயன்பேட்டை வழியாகப் பள்ளிபாளையம் செல்லும் சாலையின் நான்காம் கல் தொலைவில் பிரியும் ஊராட்சிச் சாலையில் இரண்டு கல் தொலைவில் இவ்வூர் உள்ளது. கொங்கு வேளாளக் கவுண்டர், அருந்ததியர், பறையர் ஆகிய சாதியினர் மிகுதியாகவும் பிற சாதியினர் ஓரிரு குடும்பம் என்னும் அளவிலும் வசிக்கின்றனர். அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. மாரியம்மன் கோயிலும் படைவீட்டம்மன் கோயிலும் இவ்வூரில் சிறப்புப் பெற்றவை. ஓராண்டு மாரியம்மனுக்கும் அடுத்த ஆண்டு படைவீட்டம்மனுக்கும் என மாற்றி மாற்றித் திருவிழா நடத்துவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தினத்தந்தி (2022-03-16), "அணிமூர் கிடங்கில் குப்பைகளை கொட்ட பேச்சுவார்த்தை", www.dailythanthi.com, பார்க்கப்பட்ட நாள் 2024-05-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிமூர்&oldid=3956193" இலிருந்து மீள்விக்கப்பட்டது