அணிநடைப்பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
   அணிவகுப்பு 

அணிநடைப்பயிற்சி  மாணவ மாணவியரிடையே ஒழுங்கு, கட்டளைக்கு கீழ்ப்படித்தல், உடல்நன்னிலை, குழுஉணர்ச்சி, ஒத்துப்போகும் தன்மை ஆகிய பண்புகளை வளர்க்கிறது. அணிநடைப்பயிற்சியின் மூலம் ஏறுநடை பெற முடியும். மேலும் கை,கால் தசைகளும் ,கணுக்கால் ,முட்டி ,இடுப்பு ஆகிய மூட்டுகளும் வலுப்பெற்று நல்ல தோற்றத்தைக் கொடுக்கிறது.இவ்வணி  நடைபயிர்ச்சிக்குத்  தேவையான சில அடிப்படைப்ப யிற்சிகளைப்பற்றிக் காண்போம்.                                                [1]

ஒரு வரிசையில் நிற்றல்:[தொகு]

 அணிநடைப்பயிற்சி  தொடங்குவதற்கு முன் மாணவர்களை ஒரே வரிசையில் நிற்க வைக்க வேண்டும்.குட்டையான மாணவன் அவர்கள் வரிசையில் வலது கோடியிலும் உயரமான மாணவன் அவர்கள் வரிசையில் இடது கோடியிலும் உயரத்திற்கு ஏற்றார் போல் நிற்க வேண்டும்.நிற்கும் போது அவனுடைய தோள் அடுத்தவனுடைய தோளைத் தொடாதவாறு "ஆரநில் "நிலையில் அசையாமல் நிற்க வேண்டும்.

Veterans March Past the Cenotaph London During Remembrance Sunday Service MOD 45152053.jpg

நேர் நில்:[தொகு]

 ஆரநில் நிலையிலிருந்து  நேர் நில் நிலைக்கு வர கட்டளை வந்தவுடன் இடது காலை 6 அங்குலம் உயர்த்தி வலது காலுடன் சேர்க்க வேண்டும்.பாதங்கள் 'v ' அமைப்பில் இருக்க,குதிங்கால்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.கைகள் பக்கவாட்டில் உடலோடு சேர்ந்து இருக்க வேண்டும். .கைவிரல்கள் மூடப்பட்டு கட்டைவிரல்களின் நுனிபாகம் செங்குத்தாக கீழே தரையை நோக்கி இருக்க வேண்டும்.பார்வை நேராக இருக்க வேண்டும்.இந்நிலையில் அசையாமல் அசையாமல் இருக்க வேண்டும்.

அமர நில்:[தொகு]

மாணவர்களை நேர்நில்  நிலையில் அதிக நேரம் நிறுத்தி வைக்க கூடாது.எனவே ஆரநில் நிலைக்குக்  கொண்டு  வந்து அமரநில் நிலையில் நிறுத்த வேண்டும்.அமரநில் நிலையில் கால்களை மட்டும் நகர்த்தக் கூடாது .அதே இடத்தில்  நிற்க வேண்டும்.ஆனால் கைகள்,தலை,உடல் பகுதிகளை அசைத்து சற்று தளர்ந்து இருக்கலாம்.நிற்கும் இடத்தை மட்டும் விட்டு நகரக் கூடாது.   

வரிசையை சரி செய்தல் :[தொகு]

  வரிசை சீராக நிற்க அல்லது நிற்பதை சரி பார்க்க வலம்-சீர்  நேர்பார் என்றும் கட்டளை பிறப்பிக்க வேண்டும். 

வலம்-சீர் :[தொகு]

Marchpast in Relics installation day 04.02.13 (2).jpg

 வலம்-சீர்  என்ற கட்டளை கிடைத்தவுடன் வரிசையின் வலது கோடியில் உள்ள மாணவன் மட்டும் அப்படியே அசையாமல் நேராக பார்த்து நிற்க வேண்டும்.மற்ற மாணவர்கள் தலையை வலது புறமாகத் திருப்பி தோளுக்கு நேர் தோள் இருக்கும்படி சற்று முன்பின் நகர்ந்து வரிசையை சீர் செய்துகொள்ள வேண்டும்.

இடம்-சீர் :[தொகு]

இடம் சீர்  என்ற கட்டளை கிடைத்தவுடன் வரிசையின் இடது கோடியில் உள்ள மாணவன் மட்டும் நேராகப் பார்த்து அசையாமல் நிற்க வேண்டும்.மற்ற மாணவர்கள் தலையை  இடப்புறமாகத் திருப்பித் தோளுக்கு நேர்  தோள் இருக்கும்படி  சற்றுமுன் நகர்ந்து வரிசையை சீர் செய்து கொள்ள வேண்டு

நேர்-பார் :[தொகு]

            நேர்-பார் என்ற கட்டளை கிடைத்தவுடன் தலையையையும்,பார்வையையும் முன்புறம் திருப்ப வேண்டும்.

வலப்புறம்-திரும்பு :[தொகு]

 வலைப்புறம் திரும்பும் இயக்கத்தை இரண்டு எண்ணிக்கையில் செய்ய வேண்டும்.

1.இடது குதிகாலையும் ,வலது முன் பாதத்தையும் சற்று உயர்த்தி 90 டிகிரி அளவுக்கு வலப்புறம் திரும்பவும்.

2.இடது காலை  6 அங்குலம் உயர்த்தி வலது காலுடன் இணைக்கவும்.பின்பு நேரே நிற்கவும்.

 இடப்புறம்-திரும்பு:[தொகு]

 1.வலதுகுதிகாலையும்,இடது முன் பாதத்தையும் சற்று உயர்த்தி 90 டிகிரி அளவுக்கு இடதுபுறம் திருப்ப வேண்டும்.

2.வலதுகாலை 1/2 அடி உயர்த்தி இடது காலுடன் இணைக்க வேண்டும்.பின் நேரே நிற்க வேண்டும்.

பின்புறம்-திரும்பு:[தொகு]

 1 இடது குதிகாலையும்,வலது  முன் பாதத்தையும் சற்று உயர்த்தி 180 டிகிரி அளவுக்கு வலப்புறம் திருப்ப வேண்டும்.

2.இடது  காலை  1/2 அடி உயர்த்தி வலது காலுடன் இணைக்க வேண்டும்.பின் நேரே நிற்க வேண்டும்.

நின்ற நிலையில் நட :[தொகு]

கட்டளை கிடைத்தவுடன் இடதுகாலை  தரையிலிருந்து 1/2 அடி உயர்த்தி தரையில் வைக்கவும்.அதே நேரத்தில் வலது காலை தரையிலிருந்து 1/2 அடி உயர்த்தி தரையில் வைக்கவும்.இப்படி மாரு கட்டளை வரும் வரை  இடம்,வலம் என்று மாறி மாறி நின்ற இடத்திலேயே நடக்க வேண்டும்.

நின்ற நிலையில் நில்  :[தொகு]

 கட்டளை கிடைத்தவுடன் இடதுகாலை ஒரு முறையும், வலது காலை ஒரு முறையும் உயர்த்தி விட்டு  நின்ற இடத்திலேயே நடப்பதை நிறுத்திக் கொள்ள  வேண்டும்.

கொடிவணக்கம்        [தொகு]

 பள்ளிகளில் வாரத்  தொடக்க நாளிலும்  தேசிய விழா நாட்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது.கொடி  ஏற்றி முடிந்ததும் கொடி வணக்கம் முறைப்படி செய்யப்பட வேண்டும்.கட்டளை கிடைத்தவுடன் மாணவர்கள் வலது கை  விரல்களைச்  சேர்த்து வலக்கையை மடித்து வலது புருவத்தின் மேல் வலது ஆள்காட்டி விரலைப் பதித்து ,கண்களால் கொடியைப் பார்த்து நிற்க வேண்டும்.வலது உள்ளங்கை வெளிப்பக்கமாக இருக்கவேண்டும். "நிலைக்கு வா "  என்ற இரண்டாம் கட்டளைக் கிடைத்தவுடன் முன்புறமாக வலக்கையை கீழே கொண்டு வந்து  நேர்-நில் நிலைக்கு வர வேண்டும். 

மேற்கோள்[தொகு]

  1. பு. நாகசுந்தரம் (1993). உடற்கல்வி மற்றும் சுகாதாரக்கல்வி. பக். 16-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிநடைப்பயிற்சி&oldid=3179997" இருந்து மீள்விக்கப்பட்டது