அட்லாண்டிக்குக்கு அப்பால் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்லாண்டிக்குக்கு அப்பால்
நூல் பெயர்:அட்லாண்டிக்குக்கு அப்பால்
ஆசிரியர்(கள்):பி.கே.சிவக்குமார்
வகை:பொது
துறை:கட்டுரைகள்
இடம்:எனி இந்தியன் பதிப்பகம்,
102, எண்.57, பி.எம்.ஜி.காம்ப்ளக்ஸ்,
தெற்கு உஸ்மான் சாலை,
தி.நகர்
சென்னை -600 017.
* [1]
மொழி:தமிழ்
பக்கங்கள்:287
பதிப்பகர்:எனி இந்தியன் பதிப்பகம்
பதிப்பு:ஜனவரி2005
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

அட்லாண்டிக்குக்கு அப்பால் என்பது பல தலைப்புகளிலான ஒரு கட்டுரை நூல். இந்த நூலின் ஆசிரியர் பி.கே.சிவக்குமார். இதனை எனி இந்தியன் பதிப்பகம் தனது முதல் வெளியீடாக வெளியிடுகிறது. நூலாசிரியருக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரான ஜெயகாந்தன் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு மற்றுமொரு எழுத்தாளர் ஜெயமோகன் “சாளரத்தினூடே தெரியும் கண்கள்” எனும் தலைப்பில் முன்னுரை வழங்கியிருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

 1. வாசக அனுபவம்
 2. இலக்கியம்
 3. விவாதம்
 4. கவிதை கேளுங்கள்
 5. சமூகம்
 6. அமெரிக்கா

எனும் பகுதிகள் மூலம் தனது கட்டுரைகளைத் தனித்தனியாகப் பிரித்தளித்திருக்கிறார்.

வாசக அனுபவம்[தொகு]

 • உமா மகேஸ்வரியின் “வெறும் பொழுது”
 • வல்லிக்கண்ணனின் “வாழ்க்கை சுவடுகள்”
 • கணையாழியின் கடைசிப் பக்கங்கள்
 • பங்குக்கு மூன்று பழம் தரும் எழுத்து - சுகுமாரனின் திசைகளும் தடங்களும்
 • சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
 • ஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனை எழுப்பும் ஓசைகள்

என்ற தலைப்புகளில் தான் வாசித்த சில நூல்கள் குறித்த விமர்சனங்களைத் தனது கட்டுரைகளாக இங்கு முன் வைத்திருக்கிறார்.

இலக்கியம்[தொகு]

என்ற தலைப்புகளில் தன்னுடைய இலக்கியம் தொடர்பான கருத்துக்களையும் பிற செய்திகளையும் கட்டுரைகளாக்கி இருக்கிறார்.

விவாதம்[தொகு]

என்கிற தலைப்புகளில் ஜெயகாந்தன் எழுத்து குறித்து பல கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் அவர் சார்பில் விவாதிக்கவும் செய்திருக்கிறார்.

கவிதை கேளுங்கள்[தொகு]

 • அருவி
 • உன் கவிதையை நீ எழுது
 • வாடகை வீட்டில் வளர்த்த மரம்
 • இதமாய் பதமாய் எப்படி சொல்வது

எனும் தலைப்புகளில் நூலாசிரியரின் சில அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு முடிவாய் அதற்கு பிற கவிஞர்களின் கவிதை ஒன்றும் தந்திருக்கிறார்.

சமூகம்[தொகு]

என்ற தலைப்புகளில் பல சமூகம் சார்ந்த கருத்துக்களைத் தெரிவிக்கும் கட்டுரைகளை அளித்திருக்கிறார்.

அமெரிக்கா[தொகு]

 • பிலிப் புரொபஷனலா?
 • ஓடி விளையாடு
 • குளோரொயா ஸ்டீநெம், ஆரம்பக் கல்விமுறை - சில குறிப்புகள்
 • திண்ணை.காம் - வாசக பார்வை
 • கடத்தலும் கடத்தல் விளையாட்டு விளையாடும் குழந்தைகளும்
 • பதில்களும் பார்வைகளும்
 • பார்ன்ஸ் & நோபள் பரவசம்
 • ராணுவ அத்துமீறல்கள்
 • அமெரிக்க இந்தியர்களும் பா.ஜ.க.வும்
 • மனித நேயம் - குறும்படம்
 • ரொனால்ட் ரீகனும் அவர் ஆக்சிஜன் கொடுத்த அமெரிக்கக் குடியரசுக் கட்சியும்
 • Dick மொழி
 • குளிர்காலம்

என்கிற தலைப்புகளில் நூலாசிரியர் அமெரிக்காவில் இருப்பதால் அந்நாட்டின் பல செய்திகளைக் கட்டுரையாக்கிக் கொடுத்திருக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]