அட்னான் ஓக்தார்
அட்னான் ஓக்தார் | |
|---|---|
2009ல் அட்னான் ஓக்தார் | |
| பிறப்பு | 2 பெப்ரவரி 1956 அங்காரா, துருக்கி |
| தேசியம் | துருக்கியர் |
| மற்ற பெயர்கள் | அட்னான் ஹோச்சா, ஹரூன் யாகியா |
| குடியுரிமை | துருக்கி |
| பணி | இசுலாமிய கள்ளப் போதகர் |
| அறியப்படுவது |
|
| அரசியல் கட்சி | நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி [2][3][4][5] |
| Criminal penalty | 8,658 ஆண்டுகால சிறை தண்டனை |
| Criminal status | குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். |
| வலைத்தளம் | |
| www | |
அட்னான் ஓக்தார் (Adnan Oktar) (பிறப்பு:2 பிப்ரவரி 1956) இவரது பிற பெயர்கள் அட்னான் ஹோச்சா அல்லது ஹரூன் யாகியா,[6][7] துருக்கி நாட்டின் முஸ்லீம் இசுலாமிய கள்ளப்போதகர் ஆவார்.[8]இவர் இசுலாமியப் படைப்புவாதம் எனும் நூலை வெளியிட்டவர்.[9] தன்னை ஒரு இசுலாமியத் சமயத் தலைவர் என அறிவித்துக் கொண்டவர்.[10]
குரானை மட்டும் ஏற்றுக் கொண்டு, ஹதீஸ்களை மறுத்த அட்னான் ஓக்தார், 2000 முதல் 2010 ஆண்டுக்கும் பிற்பகுதிக்கும் இடையில், மேற்கத்திய இளம் ஆண்கள் மற்றும் பெண்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யும் "ஒரு பெரும் பிரச்சாரத்தில்" ஈடுபட்டார்.[11] மேலும் இசுலாமிய படைப்புவாதம் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை தெளிவான விளக்கப்படங்களுடன் வெளியிட்டார்.[12] தற்போதைய துருக்கி அதிபர் எர்டோகனுடனின் அரசியலுக்கு துணையாக இருந்தவர் அட்னான் ஓக்தார். எர்டோகன் துருக்கி அதிபராக பொறுப்பெற்ற பிறகு 17 நவம்பர் 2022 அன்று அட்னான் ஓக்தார் 24 குற்ற வழக்குகளில் (மோசடி & பாலியல் குற்றங்கள் உட்பட) நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, குற்றவாளி என நிருபிக்கப்பட்டு 8,658 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார்.[13]அட்னான் ஓக்தார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரண்டு அமைப்புகளை நடத்தி வந்தார்:இசுலாமிய படைப்புவாதத்தை பரப்புவதற்கு பிலிம் அரஸ்திர்மா வக்ஃபி (Bilim Araştırma Vakfı) என்ற அமைப்பும் மில்லி டெகெர்லெரி கொருமா (Millî Değerleri Koruma Vakfı) என்ற அமைப்பு உள்நாட்டில் பல்வேறு தார்மீக பிரச்சினைகளை களைய செயல்பட்டது.[14]
இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இவர் எழுதிய படைப்பின் அட்லாஸ் (The Atlas of Creation) எனும் பெருநூலை மேற்கு உலகப் பல்கலைக்கழகங்களுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்.[15][16]
குரானை மட்டும் ஆதரித்து, ஹதீஸ்களை மறுத்த அட்னான் ஓக்தார சன்னி இசுலாம் மற்றும் சியா இசுலாம் மரபுகளை மறுத்து, இஸ்லாத்தின் ஒரு மரபை ஆதரித்தார். [17] குரான் அடிப்படையாகக் கொண்டு அட்னான் தொலைக்காட்சிகள் மூலம் தனது உண்மையான இசுலாமியக் கருத்துகளை பரப்பினார்.[18]2005 முதல் 2015ஆம் ஆண்டு முடிய, அட்னான் ஓக்தார் தனிநபர்களுக்கு எதிராக 5,00 அவதூறு வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தார்.[19]இதன் மூலம் பல புகழ்பெற்ற வலைத்தளங்களை முடக்கினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mahdi
- ↑ "Adnan Oktar... Bir gericinin AKP ile yakın ilişkileri" (in tr). 12 July 2018. https://haber.sol.org.tr/turkiye/adnan-oktar-bir-gericinin-akp-ile-yakin-iliskileri-242613.
- ↑ "'Bikini is Islamic veil,' Turkish televangelist Oktar tells police - Turkey News". Hürriyet Daily News. 23 July 2018.
- ↑ "Two pro-Adnan Oktar women held in prison despite stage 4 cancer diagnosis: report | Turkey Purge". Archived from the original on 25 October 2019. Retrieved 15 August 2020.
- ↑ "'AKP'ye oy verdim, şaşkınım'". Sözcü. 11 July 2018.
- ↑ Numbers, Greg (2019). Negotiating Science and Religion In America: Past, Present, and Future. Abingdon, United Kingdom: Routledge. p. 169. ISBN 978-1138068537.
- ↑ "Harun Yahya". harunyahya.com. Archived from the original on 24 February 2011. Retrieved 26 December 2011.
- ↑ "Turkish televangelist sentenced to 1,075 years for sex crimes | Turkey | The Guardian". amp.theguardian.com. 11 January 2021. Retrieved 2024-05-17.
- ↑ William Armstrong (2 October 2014). "The Mahdi wears Armani: The bizarre world of Adnan Oktar". Hürriyet Daily News.
- ↑ "Turkish 'cult leader' Oktar sentenced to 8,658 years in prison". Al Jazeera (in ஆங்கிலம்). Retrieved 2024-05-17.
- ↑ Filiu 2011, ப. 172.
- ↑ Filiu 2011, ப. 171-172.
- ↑ "Turkish 'cult leader' Oktar sentenced to 8,658 years in prison". www.aljazeera.com (in ஆங்கிலம்). Retrieved 2022-11-17.
- ↑ Songün, Sevim (27 February 2009). "Turkey evolves as creationist center". Hürriyet Daily News இம் மூலத்தில் இருந்து 5 March 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090305021610/http://www.hurriyet.com.tr/english/domestic/11102743.asp.
- ↑ Yahya, Hârun; Rossini, Carl Nino; Evans, Ron; Mossman, Timothy (2006). The Atlas of Creation. Global Publishing. கணினி நூலகம் 86077147.
- ↑ Dean, Cornelia (17 July 2007). "Islamic Creationist and a Book Sent Round the World". The New York Times இம் மூலத்தில் இருந்து 24 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150424030735/http://www.nytimes.com/2007/07/17/science/17book.html?_r=1&ref=science&oref=slogin.
- ↑ "Harun Yahya - Cults and Sects". New Religious Movements (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-02-07. Retrieved 2024-05-17.
- ↑ Nicholas McCallum (14 November 2015). "A look at Turkey's 'feminist cult', headed by creationist, evolutionary conspiracy theorist". Yahoo7.
- ↑ "Adnan Hoca'ya 'cezai ehliyet' şoku". Milliyet. 8 March 2015.
நூல்கள்
[தொகு]- Filiu, Jean-Pierre (2011). Apocalypse in Islam. Translated by DeBevoise, M. B. Berkeley: University of California Press. ISBN 978-0-520-26431-1.