அட்டோக் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1895 இல் அட்டோக் பாலம்

அட்டோக் பாலம் (Attock Bridge)‬ பாக்கித்தான் நாட்டில் உள்ள சிந்து நதியின் மீது அட்டோக் குர்து நகரத்தையும் கைராபாத் குந்து கிராமத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகும். பொதுவாக இப்பாலம் பழைய அட்டோக் பாலம் என்று அழைக்கப்படுகிறது. சிந்துநதியின் மீது அமைந்துள்ள இப்பாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாலமாகக் கருதப்படுகிறது. பஞ்சாபுக்கும் கைபர் பக்துன்வா மாகாணத்திற்கும் இடையில் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள் இப்பாலத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதால் இது பெரிதும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அசலாக முதலில் சர் கில்ட்ஃபோர்ட் மோலெசுவொர்த் என்பவரால் இப்பாலம் வடிவமைக்கப்பட்டது 24 மே 1883 இல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்ட அட்டோக் . பாலத்தின் கட்டுமான செலவு ரூ 3.2 மில்லியனுக்கும் அதிகமாகும்.

1939/1940 இல் அட்டோக் பாலம்

சர் பிரான்சிசு கேல்லகன் என்பவரால் பாலம் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு 1929 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. பாலம் இரண்டு நிலைகளும் ஐந்து நீட்டங்களும் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. மூன்று நீட்டங்கள் 257 அடி நீளம் கொண்டவையாகவும் இரண்டு நீட்டங்கள் 312 அடி நீளம் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. பாலத்தின் மேல்நிலையில் இரயில் போக்குவரத்தும் கீழ்நிலையில் சாலைப்போக்குவரத்தும் நடைபெறுகின்றன. பாலத்தை அணுகும் வழிகள் திடமான பாதுகாப்புடன் கட்டப்பட்டுள்ளன. அருகிலுள்ள பாசுத்துன் பழங்குடியினரின் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பாக இது கருதப்படுகிறது. புகழ்பெற்ற கிராண்ட் டிரங்க் சாலையின் ஒரு பகுதியாக இப்பாலம் இருந்தது. 1979 ஆம் ஆண்டில் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டு சாலை போக்குவரத்து அங்கு மாற்றப்பட்டது. இப்புதிய பாலம் "புதிய அட்டோடாக் பாலம் என்று அழைக்கப்படுகிறது[1][2].

பழைய அட்டோக் பாலத்தில் இன்னும் இரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டோக்_பாலம்&oldid=2605510" இலிருந்து மீள்விக்கப்பட்டது