அட்டோக்
அட்டோக்
காம்ப்பெல்பூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 33°46′0″N 72°22′0″E / 33.76667°N 72.36667°E | |
நாடு | பாக்கித்தான் |
பாக்கித்தனின் மாகாணங்கள் | பஞ்சாப் |
பிராந்தியம் | இராவல்பிண்டி |
மாவட்டம் | அட்டோக் மாவட்டம் |
Established | 4 ஏப்ரல் 1904 |
மாநகராட்சி | 1978 |
மக்கள்தொகை | |
• City | 1,46,396 |
• தரவரிசை | பாக்கித்தானின் 60வது பெரிய நகரம் |
நேர வலயம் | ஒசநே5 (பாக்கித்தானிய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 43600 |
இடக் குறியீடு | 057 |
அட்டோக் (Attock), (முன்பு காம்ப்பெல்பூர் என அழைக்கப்பட்டது) [2] என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது. இது அட்டோக் மாவட்டத்தின் தலைமையகமும் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் பாக்கித்தானின் 61 வது பெரிய நகரமுமாகும் . இந்த நகரம் 1908 ஆம் ஆண்டில் பழைய நகரமான அட்டோக் குர்துக்கு தென்கிழக்கில் நிறுவப்பட்டது. இது முகலாய பேரரசர் அக்பரால் 16 ஆம் நூற்றாண்டில் அட்டோக் கோட்டையுடன் நிறுவப்பட்டது. மேலும் ஆரம்பத்தில் ஆங்கியே இராணுவ அதிகாரி சர் கொலின் காம்ப்பெல்லின் நினைவாக பெயரிடப்பட்டது.
சொற்பிறப்பியல்
[தொகு]1908 ஆம் ஆண்டில் சர் கொலின் காம்ப்பெல்லின் நினைவாக இந்த நகரத்திற்கு ஆரம்பத்தில் காம்ப்பெல்போர் என்று பெயரிடப்பட்டது. மேலும் காம்ப்பெல்பூர் என்றும் உச்சரிக்கப்பட்டது. இந்த பெயர் 1978 ஆம் ஆண்டில் அட்டோக் என மாற்றப்பட்டது. அதாவது "மலையின் கால்"எனப்பொருளாகும்..
நிலவியல்
[தொகு]சிந்து நதியின் துணை நதியான ஹாரோ ஆற்றின் அருகே அட்டாக் அமைந்துள்ளது, இராவல்பிண்டியிலிருந்து 80 கிமீ (50 மைல்), பெசாவரிலிருந்து 100 கிமீ (62 மைல்), பாக்கித்தானின் கம்ராவிலிருந்து 10 கிமீ (6 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]பின்னணி
[தொகு]அட்டோக் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளது. காந்தார தேசம் என்பது சுவாட் பள்ளத்தாக்கு மற்றும் பாக்கித்தானின் போத்தோஹர் பீடபூமி பகுதிகள் மற்றும் வடகிழக்கு ஆப்கானித்தானின் ஜலாலாபாத் மாவட்டம் வரை பரவியிருந்த ஒரு பழங்கால இராச்சியமாகும். சிந்து ஆற்றின் நடுவில் அமைந்திருந்த இப்பகுதியில் தக்சசீலம் மற்றும் பெசாவர் ஆகியவை அதன் முக்கிய நகரங்களாக இருந்தன. இந்த இடம் அரசியல் மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் சிந்து இங்கே கைபர் கண்வாய் வழியாக ஆப்கானித்தானுக்கு இராணுவ மற்றும் வர்த்தக பாதையை வழங்குகிறது. பேரரசர் அலெக்சாண்டர், தைமூர் மற்றும் நாதிர் ஷாவின் ஆகியோரின் படைகள் இந்தியத் துணைக்கண்டத்தின் மீதான படையெடுப்புகளின்போது இந்த இடத்தை கடந்து சென்றது. [3]
இது பேரரசர் அக்பரின் மந்திரி கவாஜா சம்சுதீன் கவாபியின் மேற்பார்வையில் 1583 இல் அட்டோக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. [4] கர்னால் போரில் முகலாயர்களை தோற்கடித்தபோது நாதிர் ஷா இதன் வழியாக சென்றார். இதன் மூலம் வட இந்தியாவில் முகலாய சக்தியை முடிவுக்கு கொண்டுவந்தார். 1758 ஏப்ரல் 28 அன்று துராணிப் பேரரசுக்கும், மராத்தா பேரரசிற்கும் இடையில் அட்டோக் குர்தில் போர் நடந்தது. பேஷ்வா இரகுநாதராவ் மற்றும் துகோசி ராவ் ஓல்கர் ஆகியோரின் கீழ் மராட்டியர்கள் போரில் வெற்றி பெற்று அட்டோக்கைக் கைப்பற்றினர். [5] ஆனால் இந்த வெற்றி குறுகிய காலமே இருந்தது. ஏனெனில் அகமது ஷா துரானி அட்டோக்கை மீண்டும் கைப்பற்றி, பானிபட்டில் தங்கள் படைகளை அழித்த மராட்டிய முன்னேற்றத்தை தடுத்தார். துரானிப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீக்கியர்கள் இதனை ஆக்கிரமித்தனர். ரஞ்சித் சிங்கின் (1780-1839) கீழ் சீக்கிய இராச்சியம் (1799-1849) 1813 ஆம் ஆண்டில் துரானி நவாபிடமிருந்து அட்டோக் கோட்டையை கைப்பற்றியது.
1849 ஆம் ஆண்டில், காம்ப்பெல்பூர் மாவட்டத்தை உருவாக்கிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் அட்டோக் குர்து (பழைய அட்டோக்) கைப்பற்றப்பட்டது. 1857 இல் ஏற்பட்ட இந்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் முக்கியத்துவம் பிரித்தானியர்களால் பாராட்டப்பட்டது. அவர்கள் 1857–58 இல் காம்ப்பெல்பூர் இராணுவப் பிரிவை இங்கு நிறுவினார். காம்ப்பெல்பூர் மாவட்டம் 1904 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
நவீன காலம்
[தொகு]1947 ல் பாக்கித்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், இந்துக்களும்சீக்கிய சிறுபான்மையினரும் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து முஸ்லிம் அகதிகள் அட்டோக்கில் குடியேறினர். பாக்கித்தான் அரசு 1978 ஆம் ஆண்டில் காம்ப்பெல்பூரை அட்டோக் என்று பெயர் மாற்றியது. [6] பாக்கித்தானிய இராணுவ வீரர்கள் மத்தியில் இந்த நகரமும் இதனை சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறியப்படுகிறது . [7]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "PAKISTAN: Provinces and Major Cities". PAKISTAN: Provinces and Major Cities. citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 4 May 2020.
- ↑ Christopher Shackle (1980). "Hindko in Kohat and Peshawar". Bulletin of the School of Oriental and African Studies 43 (3): 482. doi:10.1017/S0041977X00137401. பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-977X.
- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Attock". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 2. (1911). Cambridge University Press.
- ↑ Hasan, Shaikh Khurshid (2005). Historical forts in Pakistan. National Institute of Historical & Cultural Research Centre of Excellence, Quaid-i-Azam University. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-969-415-069-7. பார்க்கப்பட்ட நாள் 17 July 2011.
- ↑ "Attock to Cuttack, PM Narendra Modi causes a stir". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/attock-to-cuttack-pm-narendra-modi-causes-a-stir/articleshow/59332065.cms.
- ↑ Everett-Heath, John (2017-12-07). The Concise Dictionary of World Place Names (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780192556462.
- ↑ Jaffrelot, Christophe (2015-08-15). The Pakistan Paradox: Instability and Resilience (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190613303.