அட்டுறு (கணக்கீடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அட்டுதல் (சேர்த்தல்,கூட்டுதல்) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதே அட்டுறு ஆகும் (ஆங்கிலத்தில் Accrual). கணக்கீட்டில் அட்டுறுவானது அட்டுறு வருமானம், அட்டுறு செலவு என இரு விதமாக பயன்படுத்தப்படுகின்றது. அட்டுறு செலவு (accrued expense) என்பது ஒரு பொறுப்பாகும்; இது நடப்பாண்டில் வியாபார ஊடுசெயலின் போது ஏற்பட்ட செலவுகளில் பணம் கொடுத்து தீர்க்கப்படாத செலவுகளைக் குறிக்கும். இதே போல் அட்டுறு வருமானம் (accrued revenue) ஒர் சொத்தாகும்; இது நடப்பாண்டில் வியாபார ஊடுசெயலின் போது ஏற்பட்ட வருமானங்களில் பணமாக வந்து சேராத வருமானங்களைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு[தொகு]

ஓர் நிறுவனம் திசம்பரின் இறுதியில் கணக்கினை முடிக்கின்றது. அவ்வாறு முடிக்கும்போது திசம்பரில் செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களுக்கான பட்டியல் இன்னும் வரவில்லை என உணர்கின்றனர். வழமையாக அது மாத இறுதிக்குப் பின்னர் பல நாட்கள் கழித்தே வருவதுண்டு. ஆனால் பட்டியலில் எதிர்பார்க்கக்கூடிய கட்டத்தொகை குறித்து அவர்களால் தீர்மானிக்க இயலும். அந்த உரையாடல்கள் அந்த ஆண்டில் செய்யப்பட்டமையால், திசம்பர் இறுதியில் அவற்றிற்கான பொறுப்புகள் கொள்ளப்பட வேண்டும். இந்நிலையில் அந்த நிறுவனம் அட்டுறு செலவாக அதனைப் பதிவு செய்ய வேண்டும்; அதிகாரமுறை ஆவணம் இல்லாத நிலையில் உள்ள பொறுப்புகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டுறு_(கணக்கீடு)&oldid=2266883" இருந்து மீள்விக்கப்பட்டது