அட்டியோப்சிசு
| அட்டியோப்சிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | மலக்கொசிரிக்கா |
| வரிசை: | |
| குடும்பம்: | அடியிடே |
| பேரினம்: | அட்டியோப்சிசு சேசு, 1983 |
| மாதிரி இனம் | |
| அட்டியோப்சிசு பினிப்சு நியூபோர்ட், 1847 | |
அடியோப்சிசு (Atyopsis) என்பது தென்கிழக்காசியாவினைச் சேர்ந்த நன்னீர் இறால் பேரினமாகும். இது 1983ஆம் ஆண்டில் பென்னர் ஏ. சேசு என்பவரால் முன்பு அட்டியா பேரினத்தில் இரண்டு சிற்றினங்களுடன் வகைப்படுத்தப்பட்டது. இது அட்டியாவிலிருந்து பல்வேறு பண்புகளால் வேறுபடுகிறது. இதில் வால்கூர் நீட்சியின் வடிவம் முக்கியமானது. இது அட்டியோப்சின் மூலைகளில் மிக நீளமானது. ஆனால் அட்டியாவில் இல்லை. ஆண் இறாலின் மூன்றாவது நடக்குங்காலில் காணப்படுவதன் மூலமும் வேறுபடுகிறது.
இந்த பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. இவை அடியோப்சிசி பினிப்சு மற்றும் அடியோப்சிசு மொலூசென்சிசு ஆகும். புதைபடிவ சிற்றினங்கள் எதுவும் அறியப்படவில்லை. இவை இலங்கை சமோவான் தீவுகள் வரையிலும், வடக்கே ஒகினாவா வரையிலும், மலாய் தீபகற்பத்திலிருந்து இந்தியா வரையிலான ஆசிய நிலப்பரப்பிலும் காணப்படுகின்றன. இரண்டு சிற்றினங்களும் தலைமேலோட்டின் அடிப்பகுதியில் உள்ள பற்களின் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன, அ. பினிப்சு 2 முதல் 6 பற்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அ. மொலூசென்சிசு 7 முதல் 16 பற்களுடன் கூடியது.
அடியோப்சிசு சிற்றினங்கள் நீரோட்டம் குறைந்த நீர் நிலைகளையே விரும்புகின்றன. இந்த இறால் அதன் இறகுகள் போன்ற இனப்பெருக்க உறுப்பிகளைப் பயன்படுத்தி தண்ணீரிலிருந்து துகள்களை வடிகட்டுகிறது. உணவு பற்றாக்குறையாக இருந்தால், இவை பாறை போன்ற நீரடிப்பகுதியில் இரைத்தேடுவதைக் காணலாம்.
மற்ற ஓட்டுமீன்களைப் போலவே மூங்கில் இறால்களும் வளர்வதற்காக தோலுரிகின்றன. இந்த செயல்பாட்டின் போது இறால் வேட்டையாடுதலில் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. எனவே தோலுரிக்கும் காலங்களில் இவற்றிற்கு போதுமான மறைவிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
இதன் உணவு, தாவரங்கள், பாசித் துகள்கள் ஆகும்.
சிற்றினங்கள்
[தொகு]| படம் | பொதுவானப் பெயர் | விலங்கியல் பெயர் |
|---|---|---|
| மூங்கில் இறால் | அடியோப்சிசு மொலூசென்சிசு | |
| குள்ள மூங்கில் இறால் | அடியோப்சிசு பினிப்பெசு |