அட்டாக் ஆன் டைட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்டாக் ஆன் டைட்டன்
Shingeki no Kyojin manga volume 1.jpg
Cover of Attack on Titan volume 1 featuring Eren Yeager about to attack the oncoming Colossal Titan
進撃の巨人
(Shingeki no Kyojin)
Genre
மங்கா
Author ஹாஜிமே இசயாமா
Publisher கோடான்சா
English publisher வார்ப்புரு:English manga publisher
Demographic ஷோனன்
Imprint ஷோனன் மாதயிதழ் காமிக்சு
Magazine பெஸ்சாட்சு ஷோனன் மாதயிதழ்
Original run செப்டம்பர் 9, 2009ஏப்ரல் 9, 2021
Volumes 33
அனிமே தொலைக்காட்சித் தொடர்
திரைப்படங்கள்

அட்டாக் ஆன் டைட்டன் (ஆங்கிலம்: Attack on Titan) (進撃の巨人 Shingeki no Kyojin?, lit. "The Attack Titan") ஒரு சப்பானிய மங்கா தொடர் ஆகும். ஹாஜிமே இசயாமா எழுதி வரையப்பட்டுள்ளது. இந்த மங்காவில், மனிதர்களை உண்ணும் அரக்கர்களிடமிருந்து தப்பிக்க மனிதர்கள் மாபெரும் சுவர்களுக்குள் வாழ்கின்றனர்; தனது தாயாரின் மரணம் மற்றும் பிறந்த ஊரின் அழிவிற்கு காரணமான மனித-அரக்கர்கள் மீது பழிவாங்கும் கதாநாயகன் எரென் யேகரின் கதையாகும்.

அட்டாக் ஆன் டைட்டன் அனிமே நான்கு பருவங்களாக தயாரிக்கப்பட்டது. முதல் பருவம் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2013 வரை ஒளிபரப்பானது. பின்னர் இரண்டாம் பருவம் ஏப்ரல் முதல் சூன் 2017 வரை ஒளிபரப்பானது. மூன்றாம் பருவம் இரண்டு பாகங்களாக வெளியானது. முதல் பாகம் சூலை முதல் அக்டோபர் 2018 வரையும், இரண்டாம் பாகம் ஏப்ரல் முதல் சூலை 2019 வரையும் ஒளிபரப்பானது. நான்காம் மற்றும் இறுதி பாகம் திசம்பர் 2020 இல் ஒளிபரப்பாக துவங்கியது.

அட்டாக் ஆன் டைட்டன் பெரிதும் புகழ் பெற்றுள்ளது. திசம்பர் 2019, 10 கோடியிற்கும் மேலான பதிப்புகளை விற்றுள்ளது.

விமர்சனங்கள்[தொகு]

விமர்சகர்கள்[தொகு]

"இன்றைய சமூகத்தில் இளைஞர்கள் அனுபவிக்கும் நம்பிக்கையின்மையினை அட்டாக் ஆன் டைட்டன் காட்டுவதாக" பல்வேறு விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[2] சில காட்சிகள் கரடுமுரடாக உள்ளன என்று சிலர் விமர்சித்துள்ளனர்.[2][5]

விருதுகள்[தொகு]

கொடான்சா மங்கா விருதினை 2011 இல் வென்றது.[6][7]

சீன தடை[தொகு]

2015 ஆம் ஆண்டில், சீன கலாச்சார அமைச்சகம் அட்டாக் ஆன் டைட்டனின் மங்கா மற்றும் அனிமேயினை தடை செய்தது.[8] 2015 வரை 38 சப்பானிய அனிமே/மங்காக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அரசியல் அர்த்தங்கள்[தொகு]

அட்டாக் ஆன் டைட்டன் சப்பானில் மட்டுமல்லாது உலகளவில் பெரிதும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.[9] உதாரணத்திற்கு, சீனா மற்றும் தைவான் இல் அட்டாக் ஆன் டைட்டன் அனிமேயின் புகழ் பற்றிய செய்தி, மே 27, 2013 அன்று ஆங்காங் இன் இலவச பத்திரிக்கை ஏஎம்730 இன் முதல் பக்கத்தில் இடம் பெற்றது.[10] சில எதிர்புகளையும் பெற்றுள்ளது. தென் கொரியாவின் எலக்டிரானிக்சு டைம்சு மாதயிதழ் சப்பனிய பிரதமர் சின்சோ அபேயின் அரசியல் தாக்கங்களை பரப்புவதாக விமர்சித்துள்ளது.[11][10] படிப்பவர்கள் மனதில் பல்வேறு அரசியல் அர்த்தங்களை கொண்டுவந்ததற்கு இசயாமா பெரிதும் பாராட்டப்பட்டார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 28 million என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. 2.0 2.1 2.2 Ohara, Atsuhi; Yamane, Yukiko (ஆகத்து 17, 2013). "Boosted by anime version, 'Attack on Titan' manga sales top 22 million". Asahi Shimbun. Archived from the original on 2013-08-22. https://web.archive.org/web/20130822093832/http://ajw.asahi.com/article/cool_japan/culture/AJ201308170034. 
 3. Thompson, Jason (நவம்பர் 14, 2013). "House of 1000 Manga: Crunchyroll Manga". Anime News Network. https://www.animenewsnetwork.com/house-of-1000-manga/2013-11-14. 
 4. (சூலை 6, 2013). "Attack on Titan Now Monthly". செய்திக் குறிப்பு.
 5. "House of 1000 Manga – Crunchyroll Manga". Anime News Network. நவம்பர் 14, 2013. திசம்பர் 22, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. பிப்ரவரி 1, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. 講談社漫画賞 (過去の受賞者一覧) [Kodansha Manga Award (list of past winners)] (ஜப்பானியம்). Kodansha. ஆகத்து 19, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 10, 2013 அன்று பார்க்கப்பட்டது.
 7. "மார்ச்சு comes in like a lion, Space Bros. Win Kodansha Manga Awards". Anime News Network. மே 12, 2011. சூன் 9, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஏப்ரல் 10, 2013 அன்று பார்க்கப்பட்டது.
 8. "China bans 'Attack on Titan' and 'Death Note'". CBR (ஆங்கிலம்). 2015-06-09. 2020-12-07 அன்று பார்க்கப்பட்டது.
 9. Rezaee, Stan (திசம்பர் 16, 2020). "The Political Interpretations of Attack on Titan". 8Bit/Digi. https://8bitdigi.com/political-interpretations-of-attack-on-titan/. 
 10. 10.0 10.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". am730 (Hong Kong): p. 1. மே 27, 2013. Archived from the original on 2013-06-07. https://web.archive.org/web/20130607165648/http://www.am730.com.hk/article.php?article=156271&d=2053. 
 11. The Liberty Times (Taipei). சூன் 12, 2013. http://www.libertytimes.com.tw/2013/new/jun/12/today-int7.htm. 
 12. Wong Yeung Tat (பிப்ரவரி 13, 2011). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Ming Pao (Hong Kong). Archived from the original on 2014-10-17. https://web.archive.org/web/20141017131719/http://reading.mingpao.com/cfm/BookSharingPromote.cfm?mode=details&iid=767. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டாக்_ஆன்_டைட்டன்&oldid=3592399" இருந்து மீள்விக்கப்பட்டது