உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டமாசு கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீகர்-லீகல்டர் உருவாக்கிய அட்டமாசு கடிகாரத்தின் காட்சிப்பொருள்

அட்டமாசு கடிகாரம் (Atmos Clock) என்பது சுவிட்சர்லாந்து நாட்டைச்சார்ந்த சீகர்-லீகல்டர் (Jaeger-LeCoultre) உருவாக்கிய முறுக்கலூசல் கடிகாரம் (Torsion pendulum clock) ஆகும். இதைக் கையால் முடுக்கத் தேவையில்லை. வெப்பம் மற்றும் வளிமண்டல அழுத்தம் போன்ற சூற்றுசூழல் மாற்றங்களால் இயங்குமாறு இக்கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய சுருளின் உதவியுடன் இயக்கப்படுகிறது. காற்றிறுக்க அடைப்பினுள் (hermetically sealed) வைக்கப்பட்டுள்ள குளோரோஈதேன் வாயு விரிவது மற்றும் சுருங்குவதன் மூலம் கடிகாரம் இயக்கப்படுகிறது. வெப்பம் அதிகரிக்கும் போது, குளோரோஈதேன் விரிவடைந்து சுருள்வில்லை அழுத்துகிறது. அதே போல் வெப்பம் குறையும் போது, குளோரோஈதேன் சுருங்கி சுருள் வில்லை தளர்த்துகிறது.[1] இந்த இயக்கம் முக்கிய சுருளைச் தொடர்ந்து சுற்றுகிறது. வெப்பநிலை 15 டிகிரி செல்சியசு மற்றும் 30 டிகிரி செல்சியசு அளவிலிருந்து ஒரு டிகிரி மாற்றமடைந்தாலும், அழுத்தம் 3 mmHg என்ற அளவில் மாறுகிறது. இது கடிகாரத்தை இரண்டு நாட்கள் இயக்கப் போதுமானதாகும்.[2]

குறைந்த ஆற்றலுடன் செயல்படும் வகையில், கடிகாரத்தின் உள்பாகங்கள் உராய்வு குறைவாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முறுக்கலூசல், தனி ஊசலை விட குறைவான ஆற்றலுடன் இயங்கக் கூடியது. சாதாரண ஊசல் கடிகாரங்களை விட 1/30 விகிதத்தில் முறுக்கலூசல் கடிகாரங்கள் குறைவான அலைவுகளையே கொண்டிருக்கும்.

வரலாறு[தொகு]

ஒரு பழமையான அட்டாமாசு கடிகாரம்

17 ஆம் நூற்றாண்டிலேயே வெப்பம் மற்றும் வளிமண்டல அழுத்தம் போன்றவற்றில் மாற்றங்களால் இயங்கும் கடிகாரங்களை கார்னெலிசு டிரெப்பல் (Cornelis Drebbel) வடிவமைத்தார். இவர் 18 கடிகாரங்களை உருவாக்கினார், அதில் மன்னர் சேம்சு கடிகாரம் (King James clock) மிகவும் புகழ் பெற்றது. 1760 ஆம் ஆண்டில் சேம்சு காக்சு மற்றும் சான் சோசப் மெர்லின் இணைந்து உருவாக்கிய காக்சின் மாடக்கடிகாரமும் மற்றும் 1864 ஆம் ஆண்டில் நியூசிலாந்து, துனெடினில் உருவாக்கப்பட்ட பெவர்லி கடிகாரம் இவ்வகையைச் சார்ந்தது

1928 ல் சீன் லியோன் ரூடர் (Jean-Léon Reutter) என்ற பொறியாளர் முதல் அட்டமாசு கடிகாரத்தை உருவாக்கினார்.[3][4][5] முதலில் உருவாக்கப்பட்ட கடிகாரங்கள், பாதரசத்தைக் கண்ணாடி குழாய்க்குள் வைத்து உருவாக்கப்பட்டன. இவை வெப்ப மாற்றத்தைக் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன.[6][3][4] 1929 ஆம் ஆண்டில் பாதரசம் மற்றும் அமோனியாவைக் கொண்டு இயங்கும் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர் 1935 ஆம் ஆண்டில் சீகர்-லீகல்டர் குளோரோஈதேன் வாயுவினால் இயங்கும் கடிகாரத்தை வடிவமைத்தார். இன்று வரை 500,000 க்கும் மேற்பட்ட அட்டமாசு கடிகாரங்கள உருவாக்கப்பட்டுள்ளன.[2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaeger-LeCoultre Atmos
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Sacks, Adam Michael (22 April 2007), "How the Atmos works", The Atmos Clock Page, Los Angeles: atmosadam.com, பார்க்கப்பட்ட நாள் 2007-12-08
  2. 2.0 2.1 Callaway, Edgar H. (2003). Wireless Sensor Networks: Architectures and Protocols. Boca Raton, FL: CRC Press. pp. 157–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-1823-8. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. 3.0 3.1 Xian, Su Jia (13 January 2014), "Jaeger-LeCoultre Atmos Clock History", DreamChrono, Nassau: DreamChrono.com.
  4. 4.0 4.1 Neveur, Frédéric (29 December 2016), "Histoire de la pendule Atmos", Atmostime (in பிரெஞ்சு), Mountain View, CA: Google Sites.
  5. Murray, Michael P. (11 March 2004). "Basic information on the Atmos". Mike's Clock Clinic. Archived from the original on 29 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-12-07.
  6. Oliver, Richard (4 January 2015), "Atmos LeCoultre History", Antiques Clock Guy, Vista, CA: clockguy.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டமாசு_கடிகாரம்&oldid=3585891" இலிருந்து மீள்விக்கப்பட்டது