உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டப்பிரகரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்டப்பிரகரணம் என்பது வட மொழியில் தோன்றிய சித்தாந்த சாத்திர நூல்களாகும்.[1] தமிழ் மொழியில் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள் தோன்றி சைவ சித்தாந்தக் கோட்பாட்டினை வளர்த்தது போன்று வடமொழி சித்தாந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க நூல்களாகும். இவை கி.பி 8 -12 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவையாகக் கொள்ளப்படுகின்றன. இதனால் தமிழ் மொழிச் சித்தாந்த சாத்திரங்களுக்கு காலத்தால் முற்பட்ட நூல்களாக அமைகின்றன. போஜதேவர், பத்தர மகாண்டா, சத்யஜோதி சிவாச்சாரியார், ஸ்ரீகண்டாசாரியார் ஆகியோரால் இயற்றப்பட்ட நூல்களாக இவை விளங்குகின்றன.

  1. தத்துவப் பிரகாசிகை - போஜதேவர்
  2. தத்துவ சங்கிரகம் - சத்யஜோதி சிவாச்சாரியார்
  3. தத்துவத் திரய நிர்ணயம் - சத்யஜோதி சிவாச்சாரியார்
  4. இரத்தினத் திரயம் - ஸ்ரீகண்டாசாரியார்
  5. போக காரிகை - சத்யஜோதி சிவாச்சாரியார்
  6. நாத காரிகை - பத்தர மகாண்டா
  7. மோட்ச காரிகை - பத்தர மகாண்டா
  8. பரமோட்ச நிராச காரிகை - சத்யஜோதி சிவாச்சாரியார்

தமிழில் தோன்றிய சித்தாந்த சாத்திர நூல்களோடு கருத்துவேறுபாடு இன்றியனவாக சைவ சித்தாந்த தத்துவங்களைப் பேசுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வடமொழியிலமைந்த "அட்டப்பிரகரணங்கள்" எனும் ..." பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டப்பிரகரணம்&oldid=3231086" இலிருந்து மீள்விக்கப்பட்டது