உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டப்பாடி துவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்டப்பாடி துவரை (അട്ടപ്പാടി തുവര)
வேறு பெயர்கள்தோமாரா
குறிப்புஇந்தியாவில் கேரளாவில் பயிரிடப்படும் பட்டாணி வகை
வகைபட்டாணி
இடம்கேரளம்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது29 சூலை 2022
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindia.gov.in

அட்டப்பாடி துவரை (Attappady Thuvara) என்பது இந்திய மாநிலமான கேரளத்தில் பயிரிடப்படும் ஒரு முக்கியமான பாரம்பரியத் துவரம் பருப்பு வகையாகும்.[1] அட்டப்பாடி துவரை பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி வட்டத்தில் பழங்குடியினர் வாழும் பகுதியில் பயிரிடப்படுகிறது.[2][3]

இந்திய புவிசார் குறியீடு பதிவேட்டின் கீழ், இது "'அட்டப்பாடி துவரை" என்று குறிப்பிடப்படுகிறது.[4]

பெயர்

[தொகு]

அட்டப்பாடி துவரை என்பது அட்டப்பாடி வட்டத்தில் விளையும் மதிப்புமிக்க விவசாய விளைபொருளாகும். மேலும் இது விளையும் இந்த இடப்பெயரால் அழைக்கப்படுகிறது.[4] மாநில மொழியான மலையாளத்தின் "துவரா" என்றும் உள்ளூர் பழங்குடி மொழியில் "தோமரா" என்றும் அழைக்கப்படுகிறது.[5][6]

விளக்கம்

[தொகு]

அட்டப்பாடி துவரை என்பது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பழங்குடிப் பகுதியின் பாரம்பரியப் பயிராகும்.[7] இந்தப் பயிர் அட்டப்பாடியில் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதன் விதை பெரிய அளவில் எடையுடன் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது.

கேரள அரசு, அட்டப்பாடி துவரை உள்ளிட்ட பிற பாரம்பரியப் பயிர்களைப் பாதுகாக்கவும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அட்டப்பாடி தினை கிராமத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நீலகிரி உயிர்க்கோளத்திற்குள் அமைந்துள்ள அட்டப்பாடி பகுதி, பல உள்ளூர் பயிர் இனங்கள் மற்றும் விலங்கு இனங்களுக்குத் தாயகமாகும். மேலும் இங்கு முதன்மையாகப் பழங்குடியினர் வசிக்கின்றனர்.[8]

அட்டப்பாடி துவரரை பயிரிடுதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கோடை மழைக்குப் பிறகு, விஷு பண்டிகையுடன் இணைந்து தொடங்குகிறது. மேலும் இதன் பரவலான சாகுபடி காரணமாக, உள்ளூர் சந்தைகளில் இது உடனடியாகக் கிடைக்கிறது.[9] 2017ஆம் ஆண்டில், வேளாண்மைத் துறை 40 குக்கிராமங்களில் பயிர்களைப் பயிரிட்டது. இதன் மூலம் 1,605 பழங்குடியினர் 485 ஹெக்டேர் பரப்பளவில் பயனடைந்தனர். இதில் 225 ஹெக்டேரில் தினை, 150 ஹெக்டேரில் பருப்பு வகைகள், 50 ஹெக்டேரில் காய்கறிகள் மற்றும் 60 ஹெக்டேரில் எண்ணெய் வித்துக்கள் (நிலக்கடலை) பயிரிடப்பட்டன.[10][11]

புவிசார் குறியீடு

[தொகு]

அட்டப்பாடி துவரைக்குச் சூலை 29, 2022 அன்று இந்திய அரசு புவிசார் குறியீடு பதிவின்படி புவிசார் குறியீடு தகுதியினை வழங்கியது.[12]

அகலியைச் சேர்ந்த அட்டப்பாடி துவரை உற்பத்திச் சங்கம், 'அட்டப்பாடி துவரை'யின் புவிசார் குறியீடு பதிவை முன்மொழிந்தது. மார்ச் 2020-இல் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த பிறகு, அட்டப்பாடி துவரைக்கு 2022ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "அட்டப்பாடி துவரை" என்ற பெயர் இப்பகுதியில் பயிரிடப்படும் அட்டப்பாடி துவரைக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இது கேரளாவிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற முதல் துவரம் பருப்பு வகையாகவும், கேரளாவிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற 40ஆவது பொருளாகவும் ஆனது.

புவிசார் குறியீடு அட்டப்பாடி துவரை சட்டவிரோத விற்பனை, சந்தைப்படுத்தலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதற்குச் சட்டப் பாதுகாப்பையும் தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State’s five agricultural products get GI Tag" (in en-IN). The Hindu. 16 December 2022. https://www.thehindu.com/news/national/kerala/states-five-agricultural-products-get-gi-tag/article66271422.ece.
  2. "Land Settlement and Degradation: Dynamics of Land Use in Recently Settled Forest Areas of Kerala" (in en). 2006. https://www.google.co.in/books/edition/Land_Settlement_and_Degradation/PgXtAAAAMAAJ?hl=en&gbpv=1&bsq=Attappady+Thuvara&dq=Attappady+Thuvara&printsec=frontcover.
  3. General, India Office of the Registrar (1966). Census of India, 1961 (in ஆங்கிலம்). Manager of Publications. Retrieved 15 January 2025.
  4. 1 2 "Attappady Thuvara". ip. Retrieved 15 January 2025.
  5. "The Calling..." (PDF). State Goods and Services Tax Department. Kerala GST. Retrieved 15 January 2025.
  6. Census of India, 1981: pt. 2A. General population tables (in ஆங்கிலம்). Controller of Publications. 1900. Retrieved 15 January 2025.
  7. Rajendran, Nanu (1986). Muduga Language (in ஆங்கிலம்). Ennes Publications. Retrieved 15 January 2025.
  8. Singh, V. (2007). Indian Folk Medicines and Other Plant-based Products (in ஆங்கிலம்). Scientific Publishers (India). ISBN 978-81-7233-481-9. Retrieved 15 January 2025.
  9. "Attappady products make it to GI registry just before lockdown". https://timesofindia.indiatimes.com/business/india-business/attappady-products-make-it-to-gi-registry-just-before-lockdown/articleshow/75377564.cms.
  10. "New research shows young men objectifying women more likely to be violent towards their partners". https://www.newindianexpress.com/specials/2024/Nov/11/new-research-shows-young-men-objectifying-women-more-likely-to-be-violent-towards-their-partners.
  11. "There is virtually everything on the menu for tribals in Attappady, except nutrition". https://www.onmanorama.com/news/kerala/2021/12/13/projects-galore-attappady-tribes-food-crisis.html.
  12. "Attappady Thuvara". Intellectual Property India. Retrieved 16 January 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டப்பாடி_துவரை&oldid=4208248" இலிருந்து மீள்விக்கப்பட்டது