உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டநாக பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்டநாக பந்தம், தமிழழகன் பாடல்

அட்டநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று. எட்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும். பாடல் (கவிதை) ஒன்று அந்தப் பிணைப்பினூடே நுழைந்து படிக்கும்போது பாடல் பொருந்தி வருமாறு ஓவியப்பா அமைந்திருக்கும்[1]. பாடலைப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரையில் சென்று படித்துக்கொள்ள வேண்டும்.

சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவர். ஓவியப் பாவைச் சித்திரக்கவி என்பர்.

ஔவை சண்முகம் பற்றி திருவையாறு அப்துல்கபூர் சாயபு இருபதாம் நூற்றாண்டில் பாடிய சித்திரக்கவி நூல் ஒன்று உண்டு.[2] சொல்லணிப் பாடல்களில் நாட்டம் கொண்ட தமிழழகன் பாடிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

தமிழழகன் கவிதை
பாரதிக் கெல்லை
பாருக்குளே இல்லை

இதனைப் பாடுவதற்கு இவர் கூறும் எளிய வழி

  • 15 எழுத்தில் ஈரடிக் கவிதை அமையவேண்டும்
  • 4ஆவது எழுத்தும், 10ஆவது எழுத்தும் ஒரே எழுத்தாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனைப் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்க

நாரணனை நாடு
பூரணனைக் கொண்டாடு

மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்[3]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. "கவிராயர்!". தினமலர். 13 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. செங்கைப் பொதுவன் பாதுகாப்பிலிருந்து தொலைந்துவிட்டது
  3. "4.2 சிற்றிலக்கியங்களும் பல்துறை நூல்களும்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 12 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டநாக_பந்தம்&oldid=3927018" இலிருந்து மீள்விக்கப்பட்டது